வைர மழை பொழியும் கிரகம்.. பூமிக்கு அருகில் 1 இல்ல 2 கிரகம் இருக்கு! மனிதரால் இந்த வைரத்தை எடுக்க முடியுமா?

|

நமது சூரியக் குடும்பத்தில் இருக்கும் 9 கிரகங்களில் உள்ள இரண்டு கிரகங்களில் 'வைர மழை (Diamond Rain)' பொழிகிறது என்று வெளியான தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நம்முடைய சூரியக் குடும்பத்தில் மொத்தம் ஒன்பது கிரகங்கள் இருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான் என்றாலும் கூட, இந்த பட்டியலில் உள்ள இரண்டு கிரகங்களில் வைர மழை பொழிகிறது என்ற விஷயம் நமக்குப் புதிதானது தான். இன்னும் சிலருக்கு இது புதிரானதாகக் கூட தெரியலாம்.

பூமிக்கு அருகில் உள்ள கிரகத்தில் வைர மழையா?

பூமிக்கு அருகில் உள்ள கிரகத்தில் வைர மழையா?

வைர மழையா? அது எப்படி சாத்தியம்? நாங்கள் சொல்லும் இந்த விஷயம் உண்மை தானா? என்று பல சந்தேகங்கள் உங்களுக்குள் எழுந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த செய்தியை வெளியிட்டது யார் என்று தெரிந்தால், உங்கள் சந்தேகங்கள் எல்லாம் உடனே ராக்கெட் வேகத்தில் பறந்துவிடும். காரணம், இந்த செய்தியை இப்போது உறுதிப்படுத்தி வெளியிட்டது, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தான் என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.

வைர மழை பற்றிய இந்த உண்மையை சொன்னது யார் தெரியுமா?

வைர மழை பற்றிய இந்த உண்மையை சொன்னது யார் தெரியுமா?

NASA விண்வெளி ஆராய்ச்சி மையம், மிகவும் தீவிரமாக நம்முடைய அண்டத்தில் இருக்கும் வேற்று கிரகங்கள், நமது பால்வெளி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் நம்முடைய பால்வெளிக்கு அப்பாற்பட்ட நட்சத்திரங்கள் மற்றும் சிறிய கிரகங்களை எல்லாம் நாசா ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த வகையான ஆராய்ச்சிகளின் மூலம் நாசா இதுவரை கிட்டத்தட்ட 5000-திற்கும் மேற்பட்ட எக்ஸோபிளானட்களை கண்டறிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், 5000-க்கும் அதிகமான கிரகங்களை நாசா கண்டறிந்துள்ளது.

7வது மற்றும் 8வது கிரகமான யுரேனஸ் மற்றும் நெப்டியூன்

7வது மற்றும் 8வது கிரகமான யுரேனஸ் மற்றும் நெப்டியூன்

இப்படிப் பல வியக்கத்தகு விஷயங்களைக் கண்டறிந்த நாசா, இப்போது நம்முடைய சூரியக் குடும்பத்தில் இருக்கும் 7வது மற்றும் 8வது கிரகமான யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கிரகங்களில் வைர மழை பொழிகிறது என்பதைக் கண்டறிந்துள்ளது. உண்மையை, சொல்ல போனால், இந்த கிரகங்களில் வைரங்கள் மழையாகப் பொழியக்கூடும் என்ற தியரி, 1981 ஆம் ஆண்டில் மார்வின் ராஸ் என்ற நபரால் வெளியிடப்பட்டது. 'The Ice Layer of Uranus and Neptune-Diamonds in the Sky?' என்று அவர் 1981 ஆம் ஆண்டில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் டைனோசர் முட்டை! 2050 இல் டைனோசர் மீண்டும் உயிர் பெறுமா? என்னப்பா சொல்றீங்க?இந்தியாவில் டைனோசர் முட்டை! 2050 இல் டைனோசர் மீண்டும் உயிர் பெறுமா? என்னப்பா சொல்றீங்க?

வைர மழை பற்றிய முதல் தியரி எப்போது வெளியானது தெரியுமா? சொன்னால் நம்பமாட்டீங்க!

வைர மழை பற்றிய முதல் தியரி எப்போது வெளியானது தெரியுமா? சொன்னால் நம்பமாட்டீங்க!

வைர மழை பற்றிய தியரிகள் 1981 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டிருந்தாலும், இதை உறுதிப்படுத்துவதற்கான, கிரகங்களின் நெருக்கமான தரவுகள் நமக்குக் கிடைக்காமலே இருந்தது. ஆனால், மூன்று தசாப்தங்களுக்கு முன்பு, வாயேஜர் 2 அதன் வரலாற்றுப் பணியில் ஈடுபட்டபோது, இந்த இரண்டு கிரகங்களின் நெருக்கமான தரவுகளை நமக்குக் கிடைக்கச் செய்தது. இதற்குப் பின், நாசா இந்த கிரகங்கள் மீது கூடுதல் கவனத்தைச் செலுத்தத் துடங்கியது. நாசாவின் Hubble டெலஸ்கோப் மூலம் இதை முதலில் ஆராய்ந்தது.

தீவிர ஆராய்ச்சியில் களமிறங்கும் புதிய James Webb டெலஸ்கோப்

தீவிர ஆராய்ச்சியில் களமிறங்கும் புதிய James Webb டெலஸ்கோப்

இப்போது, இன்னும் துல்லியமான தரவுகளைச் சேகரிப்பதற்காக நாசாவின் James Webb டெலஸ்கோப்பை நாசா பயன்படுத்தவுள்ளது. இந்த இரண்டு கிரகங்களை நோக்கி James Webb டெலஸ்கோப் களமிறக்கப்பட்டுள்ளது. Hubble டெலஸ்கோப் போலல்லாமல், The James Webb Space Telescope (JWST) அகச்சிவப்பு கதிர்கள் மூலம் இயங்க கூடியது என்பதனால், நாசாவால் இன்னும் அதிகப்படியான தரவுகளை சேகரிக்க முடியும் என்று நம்பப்படுகிறது. சுமார் 6,500 kg எடை கொண்ட இந்த James Webb டெலஸ்கோப், இன்னும் பல சுவாரசியங்களை கட்டவிழ்க்கவுள்ளது.

ஜேம்ஸ் வெப் டெலெஸ்கோப்பின் முதல் டீப் ஸ்பேஸ் புகைப்படம்

ஜேம்ஸ் வெப் டெலெஸ்கோப்பின் முதல் டீப் ஸ்பேஸ் புகைப்படம்

பால்வெளிக்கு அப்பாற்பட்ட பல்வேறு நட்சத்திரங்கள் மட்டுமின்றி, நமது சூரியக் குடும்பத்தில் இருக்கும் யுரேனஸ், நெப்டியூன் போன்ற கிரகங்கள் குறித்தும் இந்த தொலைநோக்கி ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது என்று நாசா அறிவித்துள்ளது. அதேபோல், இந்த தொலைநோக்கியின் முதல் டீப் ஸ்பேஸ் புகைப்படம் அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என்றும் நாசா சமீபத்தில் கூறியிருந்தது. இத்துடன், வரும் நாட்களில் இந்த வைர மழை பொழியும் கிரகங்களின் முக்கிய புகைப்படங்களையும் நாசா வெளியிடவுள்ளது.

இரும்பு மழை பொழியும் விசித்திரமான கோள் கண்டுபிடிப்பு! இந்த கோள் எங்கிருக்கிறது தெரியுமா?இரும்பு மழை பொழியும் விசித்திரமான கோள் கண்டுபிடிப்பு! இந்த கோள் எங்கிருக்கிறது தெரியுமா?

வைர மழை தியரி உண்மை தானா? நாசா சொல்வது என்ன?

வைர மழை தியரி உண்மை தானா? நாசா சொல்வது என்ன?

நீண்ட நாட்களாகக் கூறப்பட்டு வரும் வைர மழை தியரிக்கான முடிவுகளை இந்த ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் உறுதிப்படுத்தும் என்று நாசா நம்புகிறது. இதற்கு முன்னர் நமக்குத் தெரிந்த தரவுகளின் படி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கிரகங்கள் நீல நிறமாகக் காட்சியளிப்பதற்கு மீத்தேன் வாயு தான் காரணம் என்றுகூறப்படுகிறது. இந்த இரண்டு கிரகத்திலும் இருக்கும் மீத்தேன் வாயு முழுக்க கார்பன் மூலத்தால் உருவானது என்று நம்பப்படுகிறது. இத்துடன் இந்த கிரகங்களில் அதீத அழுத்தம் மற்றும் வெப்பநிலை காணப்படுகிறது.

யுரேனஸ் மற்றும் நெப்டியூனில் எப்படி வைரம் உருவாகிறது?

யுரேனஸ் மற்றும் நெப்டியூனில் எப்படி வைரம் உருவாகிறது?

இதன் விளைவாக, இந்த கிரகங்களில் இருக்கும் கார்பன் மூலங்கள் அதீத அழுத்தத்தால் அப்படியே அழுத்தப்பட்டு, வைரமாக மாற்றப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, நாசாவின் விஞ்ஞானி ரோ இதுபற்றி கூறுகையில், இந்த இரண்டு கிரகங்களில் மீத்தேன் உள்ளது உறுதி, அதிக அழுத்தம் இருப்பதும் உறுதி, இதனால் அங்கிருக்கும் கார்பன் வைரமாக மாற அதிக வாய்ப்பு உள்ளது என்று நம்புகிறோம். இவை மிகவும் வலிமையாக, அதிக எடையுடன் காணப்பட வாய்ப்பு உள்ளது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த வைர மழையை சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள்.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

இந்த வைர மழையை சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள்.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

இதனால், இந்த வைரங்கள் அங்கு உள்ள வளிமண்டலத்தில் இருந்து கீழே மழையாகப் பொழிய அதிக வாய்ப்புகள் உள்ளது என்று அவர் கூறியுள்ளார். அதேபோல், நாம், பூமியில் பார்க்கும் மழை போல இதை நினைத்துவிடாதீர்கள், இது மிகவும் ஆபத்தானது. காரணம், நமக்குத் தெரிந்த மிகவும் கடினமான பொருள் என்றால், அது வைரம் தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. யுரேனஸ் மற்றும் நெப்டியூனின் வளிமண்டலத்தில் இருந்து பல ஆயிரம் உயரத்தில் இருந்து வேகமாக விழும் வைரங்கள் ஆயுத குண்டுகளைப் போல் செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

செவ்வாயில் சிக்கிய பாம்பு தலை போன்ற உருவம்.. வியப்பில் விஞ்ஞானிகள்.. இது என்ன தெரியுமா?செவ்வாயில் சிக்கிய பாம்பு தலை போன்ற உருவம்.. வியப்பில் விஞ்ஞானிகள்.. இது என்ன தெரியுமா?

இந்த வைரங்களை மனிதர்களால் எடுத்துவர முடியுமா?

இந்த வைரங்களை மனிதர்களால் எடுத்துவர முடியுமா?

சரி, இந்த கிரகங்களில் மழையாகப் பொழியும் வைரங்களை மனிதர்கள் எடுத்துவர முடியுமா? என்றால், அது 'மிகவும் கடினமான' வேலை என்கிறது நாசா. இதற்கு முன், ஜேம்ஸ் வெப் டெலஸ்க்கோப் இங்கு வைரங்கள் மழையாகப் பொழிவதை உறுதி செய்ய வேண்டும் என்கிறது நாசா. அப்படி, வைரங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அங்குள்ள வைரத்தை எடுக்க நாம் ஒரு தெளிவான திட்டத்தை உருவாக்க வேண்டும். ஆனாலும் கூட, இந்த கிரகங்களின் வானிலை மிகவும் மோசமாகவும், அடர்த்தியாகவும் இருப்பதால், அதற்குள் நாம் நுழைவது என்பதே சாத்தியமற்றது என்கிறார் விஞ்ஞானி ரோ.

அத்துமீறி நுழைந்தால் ராக்கெட் சுக்குநூறாக்கப்படும்

அத்துமீறி நுழைந்தால் ராக்கெட் சுக்குநூறாக்கப்படும்

அப்படியே ஒருவேளை நாம் அந்த கிரகத்திற்குள் நுழைந்தாலும், நாம் இந்த கிரகத்திற்குள் நுழையும் போது வைர மழை பொழிந்துவிடக் கூடாது. அப்படிப் வைர மழை பெய்தால், நாம் செல்லும் ராக்கெட் சுக்குநூறாக்கப்படும். வைரத்தைத் தேடிப் போனவர்களின் விதி முடிந்துவிடும் என்று விஞ்ஞானி ரோ குறிப்பிடுகிறார். ஆனாலும் கூட, சூரியனுக்கே செயற்கைக்கோள் அனுப்பிய மனிதனின் முயற்சிக்கு இது ஒரு நல்ல சவால் தான்.

வைரங்களை எடுத்துவர ஒரு முரட்டுத்தனமான வழி இருக்கிறது

வைரங்களை எடுத்துவர ஒரு முரட்டுத்தனமான வழி இருக்கிறது

அப்படியானால் இந்த வைரங்களை நாம் எடுக்கவே முடியாதா? மனிதன் நினைத்தால் முடியாதது என்று எதுவுமே இல்லை. சூரியனை தொட முடியாது என்றார்கள் தொட்டுவிட்டோம். இதுவும் முடியாத காரியம் தான். ஆனாலும் கூட, வைரத்தை விடக் கடினமான பொருளால் ஒரு ராக்கெட்டை உருவாக்கினால், அங்கிருக்கும் வைரங்களை மனிதர்கள் எடுத்து வர ஒரு 'குறுகிய' வாய்ப்புள்ளது என்கிறது மற்றொரு விசித்திரமான தியரி. இதுபற்றி உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

Best Mobiles in India

English summary
2 planets near to the earth rains diamonds Can humans able to take diamonds from Uranus and Neptune

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X