Home
News

பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.!

பேஸ்புக் மூலம் கல்லூரி மாணவியை காதலித்து, பாலியல் பலாத்காரம் செய்த ஒத்தக்கை காதலன் மற்றும் அவரது நண்பன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பொள்ளாச்சி சம்பவத்தை போல் சமூக வலைத்தளத்தில் பெண்ணுடன் பழகி, தனியாக காரில் அழைத்து சென்று காதலன் மற்றும் நண்பன் இணைந்து பாலியல் வன்கொடுமைக்கு முயற்சித்துள்ள சம்பவம் நாகர்கோவிலில் நடந்தேறியுள்ளது.

பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்த  காதலன்.!

பேஸ்புக் மூலம் கல்லூரி மாணவியை காதலித்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஒத்தக்கை காதலன் மற்றும் அவரது நண்பன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பேஸ்புக் மூலம் நட்பு

பேஸ்புக் மூலம் நட்பு

நெல்லை மாவட்டம் ஆவரைக் குளத்தைச் சேர்ந்த ஏசுநேசன் என்பவருக்கும், நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த பெண் மாணவிக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் சில மாதங்களாக பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் உரையாடி பழகி வந்துள்ளனர்.

மாணவியை நேரில் சந்தித்த ஏசுநேசன்

மாணவியை நேரில் சந்தித்த ஏசுநேசன்

பேஸ்புக் பழக்கம் சில மாதங்களிலேயே காதலில் சென்று முடிவடைந்துள்ளது. இருவரும் தங்களின் புகைப்படங்கள் மற்றும் பல விபரங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர். ஏசுநேசன் மாணவியை நேரில் சந்தித்துப் பேச விரும்புவதாகக் கூறி, மாணவியை வெளியே தனியாய் வரும்படி அழைத்திருக்கிறார்.

மாணவிக்கு பாலியல் தொந்தரவு

மாணவிக்கு பாலியல் தொந்தரவு

கல்லூரி மாணவியும் அதற்கு சம்மதிக்கவே, ஏசுநேசன் அவரின் காரில் நாகர்கோவில் வெள்ளமடம் பகுதிக்கு அழைத்து சென்றிருக்கிறார். மாணவியை காரில் ஏற்றிக் கொண்டு ஆற்றங்கரை பள்ளிவாசல் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு ஆளில்லாத இடத்தில் மாணவியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட துவங்கியுள்ளார்.

பலாத்காரம் செய்ய முயற்சித்த நண்பன்

பலாத்காரம் செய்ய முயற்சித்த நண்பன்

ஏசுநேசனின் நண்பனும் மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். மாணவி கத்திக் கூச்சல் போடவே இருவரும் அவரிடம் இருந்த 2 பவுன் சங்கிலியை பறித்து விட்டு தப்பியோடி விட்டனர்.இதுகுறித்து மாணவியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

கைது

கைது

ஏசுநேசன் மற்றும் ஆதீஷ் இருவரையும் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். ஏசுநேசன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்ய முயற்சித்தபோது ஒரு கையை இழந்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
2 people arrested for sexual harassment through facebook love in kanyakumari va : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X