அடிச்சு புடிச்சு ரீசார்ஜ் செய்யுற அளவிற்கு நன்மைகள்.. 2 புதிய BSNL பிளான்கள் அறிமுகம்!

|

சத்தம் போடாமல் அறிமுமாகி, கிட்டத்தட்ட அனைவருக்கும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் 2 புதிய BSNL திட்டங்களின் நன்மைகளை பற்றி கேள்விப்பட்டால்.. உங்களின் அடுத்த ரீசார்ஜ் அந்த இரண்டு திட்டங்களில் ஒன்றாகத்தான் இருக்கும்!

அதென்ன திட்டங்கள்? அடிச்சுப்புடிச்சு ரீசார்ஜ் செய்யும் அளவிற்கு அப்படி என்ன நன்மைகளை வழங்குகிறது? அந்த 2 திட்டங்களின் விலை விவரங்கள் என்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

நாடு முழுவதும்!

நாடு முழுவதும்!

பிஎஸ்என்எல் (BSNL) என்று நன்கு அறியப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், தனது 2022 தீபாவளி ஆபரின் ஒரு பகுதியாக இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை (Prepaid plans) அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னரே குறிப்பிட்டபடி - சில குறிப்பிட்ட வட்டங்களை தவிர்த்து - இந்த 2 திட்டங்களுமே "கிட்டத்தட்ட" நாடு முழுவதும் உள்ள BSNL வாடிக்கையாளர்களுக்கு அணுக கிடைக்கிறது.

உங்க போன் Settings-ல் இந்த உங்க போன் Settings-ல் இந்த "சீக்ரெட்" மோட் இருக்கானு செக் பண்ணுங்க.. இருந்தா அதிர்ஷ்டம்!

புதிய திட்டங்களின் விலை விவரங்கள்:

புதிய திட்டங்களின் விலை விவரங்கள்:

2022 தீபாவளி சலுகையின் கீழ், பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 2 திட்டங்களின் விலை ரூ.1198 மற்றும் ரூ.439 ஆகும்.

முதல் திட்டம், அதாவது பிஎஸ்என்எல் ரூ 1198 திட்டமானது ஒரு வருடம் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. அதாவது இந்த திட்டம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

ரூ.1198 பிளானின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

ரூ.1198 பிளானின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

ஒரு ரீசார்ஜ் ஆனது பேஸிக் ஆன நன்மைகளை வழங்க வேண்டும்.. அதே சமயம் நீண்ட கால வேலிடிட்டியை கொடுக்க வேண்டும்.. எல்லாவற்றை விட முக்கியமாக அது பட்ஜெட் விலையின் கீழ் இருக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைக்கும் எவருமே BSNL-இன் ரூ.1198 பிளானை - கண்களை மூடிக்கொண்டு - ரீசார்ஜ் செய்யலாம்!

ஏனென்றால், இந்த திட்டம் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தையுமே வழங்குகிறது. இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால்.. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் ஆனது ஒவ்வொரு மாதமும் அப்டேட் ஆகும்!

MyJio App-ல் இதை செஞ்சா மட்டுமே Jio 5G கிடைக்கும்! என்ன செய்ய வேண்டும்?MyJio App-ல் இதை செஞ்சா மட்டுமே Jio 5G கிடைக்கும்! என்ன செய்ய வேண்டும்?

காலாவதி ஆகும் வரை!

காலாவதி ஆகும் வரை!

இந்த திட்டத்தின் கீழ் (BSNL ரூ.1198) நீங்கள் ஒவ்வொரு மாதமும் 3 ஜிபி அளவிலான டேட்டா, 300 நிமிடங்கள் வாய்ஸ் கால் மற்றும் 30 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை பெறுவீர்கள்.

முன்னரே குறிப்பிட்டபடி, இந்த திட்டம் 365 நாட்கள் அல்லது 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும். அப்படியாக, இந்த திட்டம் காலாவதி ஆகும் வரை.. ஒவ்வொரு மாதமும் மேற்குறிப்பிட்ட மாதாந்திர நன்மைகள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும்!

பிஎஸ்என்எல் ரூ.439 திட்டத்தின் நன்மைகள்!

பிஎஸ்என்எல் ரூ.439 திட்டத்தின் நன்மைகள்!

பிஎஸ்என்எல்-இன் ரூ.439 ரீசார்ஜ் ஆனது, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் மொத்தம் 300 எஸ்எம்எஸ்களை மட்டுமே வழங்கும் ஒரு பட்ஜெட் விலை திட்டம் ஆகும்.

இந்த திட்டம் மொத்தம் 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும். அதாவது இந்த ரீசார்ஜ்ஜின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.

ஒரே போனில் Airtel 5G & Jio 5G-க்கான சப்போர்ட்! கெத்து காட்டும் இந்திய மொபைல் பிராண்ட்!ஒரே போனில் Airtel 5G & Jio 5G-க்கான சப்போர்ட்! கெத்து காட்டும் இந்திய மொபைல் பிராண்ட்!

யாருக்கெல்லாம் இதுவொரு பெஸ்ட் பிளான்?

யாருக்கெல்லாம் இதுவொரு பெஸ்ட் பிளான்?

வாய்ஸ் கால் நன்மையின் மீது மட்டுமே கவனம் செலுத்தும் ஒவ்வொரு BSNL பயனர்களுக்குமே இது ஒரு அட்டகாசமான ரீசார்ஜ் ஆகும். ஏனென்றால் இது 3 மாதங்களுக்கான அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையை வழங்குகிறது!

இந்த திட்டத்தின் கீழ் டேட்டா நன்மைகள் எதுவும் கிடைக்காது. எனவே டேட்டா தேவைகளை பூர்த்தி செய்ய, நீங்கள் வேறு சில டேட்டா ரீசார்ஜ்களை தேர்வு செய்ய வேண்டி இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ளவும்!

BSNL ரூ.1198 VS ரூ.439 ரீசார்ஜ்!

BSNL ரூ.1198 VS ரூ.439 ரீசார்ஜ்!

ரொம்ப சிம்பிள்! உங்களுக்கு டேட்டா நன்மையுடன் போதுமான வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் வேண்டுமென்றால்.. நீங்கள் ரூ.1198 திட்டத்துடன் செல்லலாம்!

ஒருவேளை வாய்ஸ் கால் நன்மைகள் மட்டுமே போதும், அடுத்த 3 மாதங்களுக்கு பெரிய அளவில் டேட்டா பயன்பாடு இருக்காது என்கிறவர்கள்.. ரூ.439 திட்டத்துடன் செல்லலாம்!

வெறும் 17 போன்களில் மட்டுமே Airtel 5G வேலை செய்யும்! கதறும் சீன மொபைல் உரிமையாளர்கள்!வெறும் 17 போன்களில் மட்டுமே Airtel 5G வேலை செய்யும்! கதறும் சீன மொபைல் உரிமையாளர்கள்!

இந்த 2 திட்டங்களும் எதன் வழியாக ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது?

இந்த 2 திட்டங்களும் எதன் வழியாக ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது?

2022 தீபாவளி சலுகையின் ஒரு பகுதியாக ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் இந்த இரண்டு புதிய BSNL திட்டங்களுமே, நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக அணுக கிடைக்கிறது.

ஒருவேளை நீங்கள் இதை மொபைல் வழியாகவே ரீசார்ஜ் செய்ய நினைத்தால், அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த டெலிகாம் நிறுவனத்தின் செல்ஃப்கேர் மொபைல் ஆப்பை (BSNL Selfcare) பதிவிறக்கம் செய்யது, அதன் வழியாக இந்த 2 திட்டங்களில் ஒன்றை ரீசார்ஜ் செய்யலாம்!

Best Mobiles in India

English summary
2 new prepaid plans from BSNL Rs 1198 and Rs 439 offer unbelievable validity and benefits

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X