மறுபடியும் ரூ.200-க்கு ஏத்திய அம்பானி.. இனி புது திட்டங்கள்.. 84 நாட்கள் வேலிடிட்டி.. Jio-வுக்கு வேற வழி இல்ல!
இப்போதானங்க விலை ஏத்துனிங்க, அதுக்குள்ள அடுத்த ரவுண்டா? என்று கஸ்டமர்கள் கேட்கும்படி முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மறுபடியும் புதிய திட்டங்களை களமிறக்கி இருக்கிறது. ஆனால், இந்த திட்டங்கள் ஜூலை மாதம் ஏற்றப்பட்ட விலையைவிட மறுபடியும் கூடுதலாக இருக்கின்றன. வழக்கமாக கிடைக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், ஓடிடி சலுகையையும் கிடைக்கிறது. இந்த புதிய ஜியோ திட்டங்களின் (New Jio Plans) முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஜியோ நிறுவனம் 2 ப்ரீபெய்ட் திட்டங்களின் (Prepaid Plan) விலையை அதிகரித்துள்ளது. முன்பு ரூ.1,099 மற்றும் ரூ.1,499 விலையில் கிடைத்த திட்டங்கள், இனிமேல் ரூ.1,299 மற்றும் ரூ.1,799 விலையில் கிடைக்க இருக்கின்றன. ஆகவே, முறையே ரூ.200 மற்றும் ரூ.300 விலை அதிகமாக செலுத்த வேண்டி இருக்கும். இந்த 2 திட்டங்களும் நெட்பிளிக்ஸ் சந்தாவை (Netflix Subscription) வைத்திருக்கின்றன.

ஜியோ ரூ 1299 திட்ட விவரங்கள் (Jio Rs 1299 Plan Details): இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக 2 ஜிபி தினசரி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையை இந்த திட்டம் கொடுக்கிறது. மொத்தமாக 168 ஜிபி டேட்டா வருகிறது.
ஆகவே, இந்த திட்டத்தில் டேட்டாவை பற்றிய கவலையே இருக்காது. மேலும், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை பயன்படுத்தலாம். தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களை 84 நாட்களுக்கும் செய்து கொள்ளலாம். நெட்பிளிக்ஸ் மொபைல் (Netflix Mobile) சந்தா கொடுக்கப்படுகிறது.
இந்த சந்தா மட்டுமல்லாமல், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) சலுகையும் கிடைக்கிறது. இதில் ஜியோசினிமாவில் பிரீமியம் சந்தா கொடுக்கப்படாது. இந்த திட்டத்தின் நெட்பிளிக்ஸ் சந்தாவின் மதிப்பு ரூ.149 ஆக இருக்கிறது. அடுத்த ப்ரீபெய்ட் திட்டத்தில் நெட்பிளிக்ஸ் பேசிக் சாந்தா கிடைப்பதால், ரூ.300 விலை ஏற்றப்பட்டுள்ளது.
ஜியோ ரூ 1799 திட்ட விவரங்கள் (Jio Rs 1799 Plan Details): இந்த திட்டம் முன்பு ரூ.1499 மதிப்பில் கிடைத்தது. இப்போது விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. முந்தைய திட்டத்தைவிட இந்த திட்டத்தில் கூடுதல் டேட்டா கிடைக்கிறது. அதாவது, தினசரிக்கு 3 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, மொத்தமாக 252 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும்.
இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும், 3 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையும் கிடைக்கிறது. மேலும், முந்தைய திட்டத்தில் கிடைத்தது போல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை பயன்படுத்தலாம். அதேபோல தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ள முடியும்.
இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் நெட்பிளிக்ஸ் பேசிக் (Netflix Basic) சந்தா மற்றும் முந்தைய திட்டத்தை போலவே ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோகிளவுட் ஆப்களின் சலுகையும் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. மேற்கண்ட 2 திட்டங்களை ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இனிமேல் நெட்பிளிக்ஸ் சந்தாவை பெற்று கொள்ள முடியும்.
ஜியோ நிறுவனம் மட்டுமல்லாமல், பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் ஜூலை மாத தொடக்கத்தில் கட்டணங்களை உயர்த்தின. அப்போதில் இருந்து மத்திய அரசின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாறும் கஸ்டமர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.


Click it and Unblock the Notifications








