Home
News

எந்தெந்த வங்கிகளில்.. ஜனவரி 1 முதல் புது பேங்க் ரூல்ஸ்.. ஒரே நேரத்தில் 2 மாற்றங்கள்.. RBI அறிவிப்பு!

ஆர்பிஐ (RBI) என்கிற இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது பல வங்கிகளுக்கு, வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிகள் / வழிகாட்டுதல்களை அறிவித்து உள்ளது.

எந்தெந்த வங்கிகளுக்கு? ஆர்பிஐ அறிவித்து உள்ள புதிய மாற்றங்கள் ஆனது - யுசிபி (UCB) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியாவில் உள்ள நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான (Urban Co-operative Banks) மாற்றங்கள் ஆகும். இந்த புதிய மாற்றத்தின் கீழ் ஆர்பிஐ ஆனது யுசிபி-களுக்கான டிஜிட்டல் வங்கி சேவைகளுக்கான விரிவான ஒழுங்குமுறை கட்டமைப்பை அறிமுகம் செய்துள்ளது.

எந்தெந்த வங்கிகளில்.. ஜனவரி 1 முதல் புது பேங்க் ரூல்ஸ்!

ஒரே நேரத்தில் 2 மாற்றங்கள்: ஆர்பிஐ அறிவித்துள்ள இந்த புதிய கட்டமைப்பின் கீழ், யுசிபி-க்கள் ஆனது இனி இரண்டு வகையான டிஜிட்டல் வங்கி வசதிகளை வழங்க முடியும்: ஒன்று - வியூ ஒன்லி (View Only), இரண்டாவது - டிரான்ஸாக்ஷனல் (Transactional).

வியூ ஒன்லி: சிபிஎஸ் (CBS) என்கிற கோர் பேங்கிங் சொல்யூஷன் (Core Banking Solution) மற்றும் ஐபிவி6 இயக்கப்பட்ட உள்கட்டமைப்பு (IPv6-enabled infrastructure) கொண்ட வங்கிகள் ஆனது ப்ராவா (PRAVAAH) போர்டல் மூலம் ஆர்பிஐ-க்கு ஜிஏஐசிஏ (GAICA) அறிக்கையை சமர்ப்பித்த பிறகு வியூ ஒன்லி சேவைகளை தொடங்கலாம்.

டிரான்ஸாக்ஷனல்: பரிவர்த்தனை (டிரான்ஸாக்ஷனல்) சேவைகளுக்கு, ஆர்பிஐ-யின் முன்கூட்டிய ஒப்புதல் கட்டாயமாகும். வங்கிகள் குறைந்தபட்ச மூலதனம்/நிகர மதிப்பு ரூ.50 கோடி அல்லது உரிம விதிமுறைகளின்படி, ஒழுங்குமுறை சிஆர்ஏஆர் இணக்கம், வலுவான உள் கட்டுப்பாடுகள், திருப்திகரமான சைபர் பாதுகாப்பு பதிவு மற்றும் செர்ட்-இன்-தணிக்கை செய்யப்பட்ட ஜிஏஐசிஏ அறிக்கை உள்ளிட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

மேலும் இந்த வழிகாட்டுதல்கள் ஆனது - ஐடி சட்டம் (IT Act), டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் (Digital Personal Data Protection Act), கேஒய்சி / ஏஎம்எல் விதிமுறைகள் (KYC/AML norms) மற்றும் ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை (RBI's customer protection guidelines) கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்பதையும் கட்டாயம் ஆக்குகின்றன.

மேலும் வங்கிகள் ஆனது வெளிப்படையான வாடிக்கையாளர் ஒப்புதலை பெற வேண்டும், விதிமுறைகளின் வெளிப்படையான தொடர்பை உறுதி செய்ய வேண்டும், நெட்வொர்க்-இந்திபென்டென்ட் மொபைல் பேங்க்கிங்கை வழங்க வேண்டும் மற்றும் வலுவான ஆபத்து-தணிப்பு கட்டுப்பாடுகளை (risk-mitigation controls) அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இந்திய ரிசர்வ் வங்கி ஆனது நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கு பல சைபர் பாதுகாப்பு கட்டமைப்புகளையும்விரிவுபடுத்தியுள்ளது மற்றும் இந்த வங்கிகளுக்கான டிஜிட்டல் வங்கி குறித்த முந்தைய வழிகாட்டுதல்களையும் ரத்து செய்துள்ளது. புதிய வழிகாட்டுதல்களின் கீழ் தற்போதுள்ள ஒப்புதல்கள் தொடர்ந்து செல்லுபடியாகும்.

சமீபத்தில் ஆர்பிஐ-யின் துணை ஆளுநர் ஆன டி ரபி சங்கர், என்பிஐசி (NPCI) என்கிற இந்திய தேசிய கட்டணக் கழகத்தின் ஒரு யுபிஐ விதி (UPI Rule) குறித்த தனது கவலைகளை எடுத்துரைத்து இருந்தார். அது யுபிஐ ஆப்களுக்கான 30% சந்தை பங்கு உச்சவரம்பு (30% market share cap for UPI apps) என்கிற இந்திய தேசிய கட்டணக் கழகத்தின் விதி ஆகும்.

என்பிசிஐ-யின் இந்த 30% யுபிஐ விதி குறித்த ஆர்பிஐ-யின் நிலைப்பாட்டை விவரித்தார். இந்த விதியின் அடிப்படை பிரச்சினை என்னவென்றால், இதை செயல்படுத்துவது கடினம் என்கிறார் ரபி சங்கர். மேலும் இந்த விஷயத்தில் எப்படி ஒரு வரம்பை செயல்படுத்த முடியும்? தீவிரமாக வணிகம் செய்யும் ஒரு நிறுவனத்திடம் சென்று, வாடிக்கையாளர்களை பெறுவதை நிறுத்தி கொள்ளுங்கள், அதாவது பரிவர்த்தனைகளை செய்வதை நிறுத்துங்கள் என்று எப்படி சொல்வது? என்றும் ரபி சங்கர் கேள்வி எழுப்பினார்.

டிபிஏபி (TPAP) என்று சுருக்கமாக அழைக்கப்படும் தேர்ட் பார்ட்டி அப்ளிகேஷன் ப்ரொவைடர்கள் (Third-party application providers) தாங்கள் செயலாக்கும் யுபிஐ பரிவர்த்தனை அளவுகளின் வரம்புகளுக்கு இணங்குவதற்கான காலக்கெடுவை 2026 வரை நீட்டிப்பதாக என்பிசிஐ கடந்த ஆண்டு அறிவித்து இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
2 New Guidelines For Urban Co operative Banks From RBI Came to Effect From January 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X