Home
News

பேங்க் அக்கவுண்ட்.. டிசம்பர் 31 முதல் புது UPI ரூல்ஸ்.. Google Pay, PhonePe, Paytm ஒரே நேரத்தில் 2 மாற்றங்கள்!

என்பிசிஐ (NPCI) என்கிற இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (National Payments Corporation of India) ஆனது வங்கிகள் மற்றும் யுபிஐ ஆப்களுக்கு வருகிற 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி முதல் புதிய நடைமுறைகளை அறிவித்து உள்ளது.

என்பிசிஐ அறிவித்து உள்ள இந்த புதிய மாற்றங்கள் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm), அமேசான் பே (Amazon Pay) ஆகிய ஆப்கள் வழியாக பரிவர்த்தனை செய்யப்படும் யுபிஐ (UPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகம் (Unified Payments Interface) மற்றும் பேங்குகளுக்கான (Banks) மாற்றங்கள் ஆகும்.

பேங்க் அக்கவுண்ட்.. டிசம்பர் 31 முதல் புது UPI ரூல்ஸ்.. 2 மாற்றங்கள்!

பேங்குகள் மற்றும் யுபிஐ ஆப்களுக்கான மாற்றங்கள்

1. பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர்கள் (PSP) வங்கிகள் மற்றும் யுபிஐ ஆப்கள் (UPI Apps) ஆகியவை யுபிஐ ஆட்டோபே மேன்டேட்களை (UPI Autopay Mandate) பார்ப்பது மற்றும் போர்ட் செய்வது ஆகியவற்றை ஒரே பிரிவின் கீழ் கொண்டுவர வேண்டும். இதை பேங்க் அக்கவுண்ட்டை நிர்வகித்தல் (Manage Bank Accounts) அல்லது யுபிஐ ஆட்டோபே (UPI Autopay) ஆக வைத்து கொள்ளலாம்.

2. இந்த யுபிஐ ஆட்டோபே தொடர்பான பாஸ் (Pause), ரத்து செய்தல் (Revoke) மற்றும் மாற்றுதல் (Modify) ஆகியவற்றுக்கு யுபிஐ பின் (UPI PIN) கட்டாயம் கேட்கப்பட வேண்டும். போர்ட்டிங் வசதி (Port Mandate) செய்வது மேன்டேட்டை பார்த்தல் (View Mandate) விருப்பத்தில் கொண்டுவரப்பட வேண்டும். இதற்காக நேட்டிபிகேஷன் (Notification ), கேஷ்பேக் (Cashback ) போன்றவற்றை கொடுக்கக் கூடாது.

3. பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர் மற்றும் யுபிஐ ஆப்கள் ஆனது பணம் செலுத்துபவர்களின் மேன்டேட் விவரங்களை வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தக்கூடாது. போர்ட் மேன்டேட் (Port Mandate ) என்பது 90 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே செய்ய முடியும். ஆகவே, ஒரு ஆப்பில் இருந்து மற்றொரு ஆப்புக்கு போர்ட் மேன்டேட் செய்ய 90 நாட்கள் எடுத்து கொள்ளப்படும்.

பணம் பெறுபவரின் பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர்களுக்கான மாற்றங்கள்

1. ஒவ்வொரு வணிகருக்கும் (Merchants) ஒரு தனித்துவமான வணிகர் அடையாளக் குறியீட்டை (MIC ) உருவாக்க வேண்டும். இந்த எம்ஐசி ஆனது, AZ என்று அழைக்கப்படும் நோக்கக் குறியீட்டை (Purpose Code ) கொண்ட அனைத்து யுபிஐ ஆட்டோபே மேன்டேட்களுக்கு ஒரு கட்டாய அளவுகோளாக இருக்கும்.

2. தனித்துவமான வணிகர் அடையாளக் குறியீடு (MIC ) மற்றும் பிற மேன்டேட் விவரங்கள் வழங்கப்பட்டால், வணிகர்கள் எந்தவொரு யுபிஐ ஐடி (UPI ID ) மூலமாகவும் யுபிஐ ஆட்டோபே மேன்டேட்களை செயல்படுத்த தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரே யுபிஐ ஐடியின் கீழ் அனைத்து ஆட்டோபே மேன்டேட்களை கொண்டுவரும்.

3. வணிகர்கள் தங்களுடை தற்போதைய யுபிஐ ஐடியை, எம்ஐசி மற்றும் பிற கட்டாயப் அளவுகோள்களை மாற்றாமல் புதுப்பித்து கொள்ள முடியும். செயலில் உள்ள யுபிஐ ஆட்டோபே மேன்டேட்களில் பெறுநரின் யுபிஐ ஐடியை புதுப்பிப்பது என்பது, ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள் சூழ்நிலைகள் அல்லது சேவைகள் நிறுத்தப்படும் சூழ்நிலைகளில் மட்டுமே அனுமதிக்கப்படும்.

மேலும், ஆர்பிஐ (RBI) என்கிற ரிசர்வ் ஆப் இந்தியா (Reserve Bank of India) ஆனது குறிப்பிட்ட வங்கிகளுக்கு, வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் புதிய நடைமுறைகளை அறிவித்துள்ளது. இந்த நடைமுறைகள் யுசிபி (UCB) என்ற அழைக்கப்படும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கு ( Urban Co-operative Banks) கொண்டுவரப்பட இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
2 New Guidelines For UPI Autopay Mandates From NPCI Came to Effect From December 31
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X