அடிச்சான் பாரு மார்க்கு.. WhatsApp-க்கு வரும் 2 புதிய மாற்றங்கள்.. அம்புட்டு யூசர்களும் ரெடி ஆகிக்கோங்க!
வாட்ஸ்அப் (WhatsApp) செயலிக்கு வரும் ஒவ்வொரு மாற்றங்களும், புதிய அம்சங்களும் மிகவும் கவனிக்கத்தக்க விஷயமாக உள்ளன. ஏனென்றால் வாட்ஸ்அப் தான் பெரும்பாலான மக்களின் இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்ஃபார்ம் ஆக உள்ளது. இதற்கிடையில் வாட்ஸ்அப்பில் 2 புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.
முதல் மாற்றம்: டபள்யூஏபீட்டாஇன்ஃபோவின் (WABetaInfo) சமீபத்திய அறிக்கையின்படி, வாட்ஸ்அப் நிறுவனம் அதன் சேனல்களுக்கான புதிய அம்சத்தை சோதித்து வருகிறது. அறியாதோர்களுக்கு வாட்ஸ்அப் சேனல் என்பது ஒருவழி ஒளிபரப்பு கருவி (One-way broadcast tool) ஆகும். அதாவது ஒரு வாட்ஸ்அப் சேனலை பின்தொடர்பவர்களால், அங்கே பதிலளிக்கவோ அல்லது சேனல் அட்மின்களுக்கு மெசேஜ்களை அனுப்பவோ முடியாது.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் வாட்ஸ்அப் சேனல்களால் "வெறுமனே" வரம்பற்ற எண்ணிக்கையிலான பார்வையாளர்களுக்கு (அல்லது பின்தொடர்பவர்களுக்கு) அப்டேட்களை அனுப்ப மட்டுமே முடியம். அப்படியான வாட்ஸ்அப் சேனல்களில் டிரான்ஸ்பர் ஓனர்ஷிப் (Transfer Ownership) என்கிற புதிய அம்சம் கொண்டு வரப்பட உள்ளது.
ஆண்ட்ராய்டுக்கான சமீபத்திய பீட்டா வெர்ஷனில் (2.24.4.22) வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு புதிய அம்சத்தை சேர்த்துள்ளது. இது சேனலின் உரிமையாளரை வேறொருவருக்கு உரிமையை மாற்ற அனுமதிக்கிறது. இன்னும் எளிமையாக கூறவேண்டும் என்றால், ஒரு சேனலின் உரிமையாளர், தன் சேனலில் உள்ள தகுதியான பயனர் ஒருவரை புதிய உரிமையாளராக தேர்ந்தெடுத்து, சேனலுக்கான முழு உரிமையையும் கொடுக்கலாம்.

ஒரிஜினல் உரிமையாளர் அனுப்பிய கோரிக்கையை புதிய உரிமையாளர் ஏற்றுக்கொண்டால், செட்டிங்ஸ் மற்றும் இன்ஃபர்மேஷனை நிர்வகித்தல் உட்பட சேனலின் முழு நிர்வாக உரிமைகளையும் பெறுவார்கள். இந்த புதிய அம்சத்தை சேர்ப்பதன் மூலம், வாட்ஸ்அப் சேனல் பயனர்கள், தங்கள் சேனல்களில் அதிக நெகிழ்வுத்தன்மையையும் கட்டுப்பாட்டையும் பெறுவார்கள்.
மேலும் தேவைக்கேற்ப மற்ற பயனர்களுக்கு நிர்வாக கடமைகளையும் ஒதுக்க முடியும். சேனலை டெலிட் செய்வது முதல் பிற அட்மின்களை நீக்குவது நீக்குவது வரையிலாக பல பொறுப்புகளை பகிர்ந்துகொள்ள முடியும். ஒரு வகையில், இந்த அம்சம் பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் சேனல்களை நிர்வகிக்கவும், அவர்கள் திறமையான கைகளில் இருப்பதை உறுதி செய்யவும் வசதியான வழியை வழங்குகிறது.

இந்த அம்சம் எப்போது அனைவருக்கும் கிடைக்கும்? வாட்ஸ்அப் சேனலுக்கான இந்த புதிய அம்சம் தற்போது படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பீட்டா டெஸ்டர் களுக்கு அணுக கிடைக்கும். வரவிருக்கும் நாட்களில் லேட்டஸ்ட் அப்டேட் வழியாக பரந்த எண்ணிக்கையிலான பயனர்களை வந்தடையும்.
கூகுள் பிளே பீட்டா புரோகிராமில் பங்கேற்பதன் மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் இந்த புதிய அம்சத்தை முன்கூட்டியே பெற முடியும்; பயன்படுத்த முடியும். இந்த அப்டேட்டிற்கு இணக்கமான வெர்ஷனும் அடையாளம் காணப்பட்டுள்ளது. 2.24.4.20 வெர்ஷனை இன்ஸ்டால் செய்துள்ள பீட்டா டெஸ்டர்கள், இந்த அம்சத்தை ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது மாற்றம்: வாட்ஸ்அப் நிறுவனம் அதன் ஸ்டேட்டஸ் அப்டேட் மெனுவிற்கான (WhatsApp Status Updates Menu) புதுப்பிக்கப்பட்ட யூஸர் இன்டர்பேஸையும் (Refreshed user interface) சோதித்து வருகிறது. இது விரைவில் ஆண்ட்ராய்டு-ன் ஸ்டேபிள் வெர்ஷனுக்கு வரக்கூடும் என்று டபள்யூஏபீட்டாஇன்ஃபோ தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப்பிற்கு வரும் இந்த மாற்றம் ஆண்ட்ராய்டு 2.24.4.2 வெர்ஷனில் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக பகிரப்பட்டுள்ள ஸ்க்ரீன்ஷாட்டில், ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ் மெனுவை திறந்ததும், யாரெல்லாம் ஸ்டேட்டஸ் வைத்து உள்ளார்களா.. அது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் போன்ற வடிவமைப்பில் காட்சியளிக்கும்.
தற்போது வரையிலாக அப்டேட்ஸ் மெனுவில் ஸ்டேட்டஸ் என்கிற டேப்பின் கீழே, புதிய ஸ்டேட்டஸ்-ஐ சேர்ப்பதற்கான பிளஸ் பட்டனும், அதனை தொடர்ந்து யாரெல்லாம் ஸ்டேட்டஸ் வைத்து உள்ளார்களா அவர்களுடைய ப்ரொபைல் பிக்சரும், அதற்கு பின்னால் அவ்ரகளுடைய ஸ்டேட்டஸும் காணப்படுகிறது. ஆனால் இந்த வடிவமைப்பு கூடிய விரைவில் மாற உள்ளது.


Click it and Unblock the Notifications