சிம் கார்டுக்கு குட்பை.. 4G வந்த வேகத்தில் BSNL சென்னை கஸ்டமர்களுக்கு 2 முக்கிய அறிவிப்புகள்!
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவைகள் (BSNL 4G Services) ஆனது நாடு முழுவதும் (கடந்த செப்.27 ஆம் தேதி) அறிமுகம் செய்யப்பட்ட வேகத்தில், பிஎஸ்என்எல் சென்னை டெலிபோன்ஸ் (BSNL Chennai Telephones) நிறுவனம் ஆனது ஒரே நேரத்தில் 2 முக்கிய அறிவிப்புகளை நிகழ்த்தி உள்ளது.
ஒன்று - உள்ளூர் சந்தாதாரர்களுக்கான இசிம் சேவைகளை (eSIM Services) அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இரண்டாவது - ஸ்டார்ஹப் சிங்கப்பூர் (StarHub Singapore) உடன் இணைந்து எல்டிஇ (LTE) வழியிலான சர்வதேச ப்ரீபெய்ட் ரோமிங்கை (International prepaid roaming) அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

சென்னை பயனர்களுக்கான இசிம்: சென்னையில் உள்ள சென்னை வாடிக்கையாளர்களுக்கு இப்போது கிடைக்கும் இசிம் சேவை ஆனது பிஸிக்கல் சிம் கார்டுகளுக்கான தேவையை நீக்குகிறது. இசிம் ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன்களில் நேரடியாக உட்பொதிக்கப்படும் இசிம் ஆனது எளிதான ஆக்டிவேஷன், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் ஒரே டிவைஸில் மல்டிபிள் ஆபரேட்டர் ஃப்ரொபைல்களை ஹோஸ்ட் செய்யும் திறனை உறுதியளிக்கிறது.
"சிம் இல்லை, வரம்புகள் இல்லை - பிஎஸ்என்எல் இசிம் இப்போது சென்னை போன்களில்" என்கிற வரியின் கீழ் சந்தைப்படுத்தப்படும் இந்த சேவை, ஏற்கனவே இசிம் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்ட உலகளாவிய சகாக்களுடன் பிஎஸ்என்எல் நிறுவனத்தை நிலைநிறுத்துகிறது. வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் இன் வாடிக்கையாளர் சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது நிறுவனத்தின் ஹெல்ப்லைனை அழைப்பதன் மூலமாகவோ இசிம் வசதியை ஆக்டிவேட் செய்யலாம்.
எல்டிஇ வழியிலான சர்வதேச ப்ரீபெய்ட் ரோமிங்: சிங்கப்பூரில் உள்ள ஸ்டார்ஹப் நெட்வொர்க் உடன் இணைந்து ப்ரீபெய்ட் ரோமிங் சேவைகளை வணிக ரீதியாக அறிமுகப்படுத்துவதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. இந்த வசதி வெளிநாடுகளுக்கு செல்லும் சென்னை சந்தாதாரர்களுக்கு டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் பயன்பாட்டை செயல்படுத்துகிறது.
அவுட்கோயிங் எஸ்எம்எஸ் ஒன்றிற்கு கட்டணம் ரூ.7.95 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளன, அதே நேரத்தில் இன்கம்மிங் எஸ்எம்எஸ் இலவசமாக இருக்கும். 10 கேபி டேட்டாவிற்கு ரூ.0.0037 வசூலிக்கப்படும். இருப்பினும் வோல்ட்இ (VoLTE) சேவைகள் இன்னும் சோதனையில் தான் உள்ளன; அதாவது இன்னும் கிடைக்கவில்லை.
ரோமிங் சேவையை பயன்படுத்த, வாடிக்கையாளர்கள் புதிய சர்வதேச ரோமிங் டூயல் ஐஎம்எஸ்ஐ சிம்மிற்கு (New international roaming Dual IMSI SIM ) மாறி எஸ்டிவி ஐஆர்57 (30 நாட்களுக்கு செல்லுபடியாகும்) அல்லது எஸ்டிவி ஐஆர்167 (90 நாட்களுக்கு செல்லுபடியாகும்) ஆகியவற்றை கொண்டு ஆக்டிவேட் செய்ய வேண்டும்.
இந்த இரண்டு குறிப்பிடத்தக்க அறிவிப்புடன் பிஎஸ்என்எல் சென்னை டெலிபோன்ஸ் ஆனது அதன் சேவைகளை மேலும் நவீனமயமாக்கி உள்ளது. இந்த இரண்டு முன்னேற்றங்களும் - இந்திய தொலைத்தொடர்பு துறை ஆனந்து டிஜிட்டல்-ஃபர்ஸ்ட் சொல்யூஷன்களை நோக்கி மாறும்போது, நாமும் போட்டித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்கிற பிஎஸ்என்எல்-ன் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
முன்னரே குறிப்பிட்டபடி கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி பான் இந்தியா அடிப்படையிலான, அதாவது இந்தியா முழுவதுமான பிஎஸ்என்எல் 4ஜி சேவைகளை அறிமுகப்படுத்தி வைத்தார். இதன்கீழ் 98,000 தளங்களில் அதன் 4ஜி நெட்வொர்க்கை செயல்படுத்தி உள்ளது மற்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிஎஸ்என்எல் பயனர்களுக்கு அதிவேக இஇண்டர்நெட் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் 4ஜி சேவையின் அறிமுகமானது 90 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களுக்கு நேரடியாக பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிஎஸ்என்எல்-இன் 4ஜி ரீசார்ஜ் திட்டங்கள் ஆனது தனியார் ஆபரேட்டர்களுடன் ஒப்பிடும்போது 30 முதல் 40 சதவீதம் வரை மலிவானவைகளாகவும் இருக்கும். இது மேலும் பல பயனர்களின் நம்பிக்கையை பெற்று, தனியார் நிறுவனங்களிடமிருந்து புதிய பயனர்களை ஈர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications