Home
News

அடிச்சான் பாரு Airtel.. அம்பானியை அப்செட் ஆக்கும் விலை.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்.. நன்மைகளும் அல்டிமேட்!

இவ்ளோ கம்மி விலைக்கு பிராட்பேண்ட் (Broadband) திட்டங்களா? என்று ஆச்சரிப்படும் அளவிற்கு பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனம் 2 புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் ஏர்டெல், இந்த 2 திட்டங்களையும் பிராட்பேண்ட் ஸ்டேண்ட்பை திட்டங்கள் (Broadband Standby Plans) என்று அழைக்கிறது.

ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 2 புதிய பிராட்பேண்ட் திட்டங்களின் விலை ரூ.199 மற்றும் ரூ.399. நினைவூட்டும் வண்ணம் ரிலையன்ஸ் ஜியோவின் பிராட்பேண்ட் (Reliance Jio Broadband) சேவையின் கீழும் கீழும் இதே போன்ற திட்டங்கள் உள்ளன. அது ஜியோஃபைபர் பேக்கப் பிளான் (JioFiber Backup plan) அழைக்கப்படுகின்றன மற்றும் அவைகள் மாதம் ரூ.198 என்கிற செலவில் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகின்றன.

அம்பானியை அப்செட் ஆக்கும் விலை.. 2 புதிய Airtel திட்டங்கள் அறிமுகம்!

நன்மைகளை பொறுத்தவரை ஏர்டெல்லின் ரூ.199 பிராட்பேண்ட் ஸ்டேண்ட்பை பிளான் ஆனது 10 எம்பிபிஎஸ் ஸ்பீடின் (10Mbps) கீழ் அன்லிமிடெட் டேட்டாவை (Unlimited Data) வழங்கும். இலவச வைஃபை ரூட்டர் (Free Wi-Fi Router), ரூ.500 ஒன்-டைம் இன்ஸ்ட்டாலேஷன் கட்டணம் (One-time Installation Charge) மற்றும் ஜிஎஸ்டி உட்பட, 5 மாத காலத்திற்கு இந்த என்ட்ரி-லெவல் பிராட்பேண்ட் ஸ்டேண்ட்பை திட்டமானது வெறும் ரூ.1674 என்கிற செலவில் அணுக கிடைக்கும்.

அடுத்ததாக உள்ள ஏர்டெல் ரூ.399 பிராட்பேண்ட் ஸ்டேண்ட்பை திட்டமும் ரூ.199-ஐ போலவே 10எம்பிபிஎஸ் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது. ஆனால் இது இலவச வைஃபை ரூட்டர் உடன் சேர்த்து எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸ் (Xstream Box) மற்றும் 350 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களுடன் (TV Channels) வருகிறது.

இது ஒன்-டைம் இன்ஸ்ட்டாலேஷன் கட்டணமான ரூ.500 மற்றும் ஜிஎஸ்டி உட்பட, 5 மாத காலத்திற்கு இந்த திட்டமானது ரூ.3000 என்கிற செலவில் அணுக கிடைக்கும். மேலும் இந்த 2 பிராட்பேண்ட் ஸ்டேண்ட்பை திட்டங்களிலும் உள்ள ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் பயனர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) கிடைக்கும்.

மேலும் எந்த நேரத்திலும் ஏர்டெல்லின் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டங்களுக்கு (Airtel Xstream Fiber Plans) நீங்கள் அப்கிரேட் (Upgrade) ஆகலாம். அதாவது பிராட்பேண்ட் ஸ்டேண்ட்பை திட்டத்தில் இருந்து எக்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டத்திற்கு மாறி, மேலதிக இன்டர்நெட் ஸ்பீடை வழங்கும் திட்டங்களுக்குள் நுழையலாம்.

அறியாதோர்களுக்கு ஏர்டெல்லின் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் சேவையின் கீழ் கிடைக்கும் திட்டங்கள் ரூ.499 முதல் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. எடுத்துக்காட்டிற்கு, பேஸிக் பிளான் (Basic Plan) ஆன ரூ.499, அன்லிமிடெட் இண்டர்நெட்டை 40 எம்பிபிஎஸ் என்கிற வேகத்தின் கீழ் வழங்கும். உடன் லேண்ட்லைன் வழியாக அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி (Unlimited Local and STD) கால்களையும் வழங்கும்.

ஏர்டெல்லின் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டங்களின் கீழ் ஏர்டெல் தேங்க்ஸ் (Airtel Thanks) நன்மைகளும் கிடைக்கும். கூடுதலாக 1 வருட எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் சந்தா (Xstream Premium Subscription), வின்க் ம்யூசிக் சந்தா (Wynk Music Subscription) போன்றவைகளும் இலவசமாக கிடைக்கும். கடைசியாக ஏர்டெல்லின் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டங்களுடன் இலவச வைஃபை ரூட்டரும் கிடைக்கும்.

டிசம்பர் 31, 2022 நிலவரப்படி, ஏர்டெல் நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவைகளானது 1,140 நகரங்களில் அணுக கிடைக்கின்றன. மேலதிக நகரங்களில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் சேவைகளை அறிமுகம் செய்யும் வேலையிலும் ஏர்டெல் ஈடுபட்டுள்ளது. ஒருவேளை உங்கள் பகுதியில் ஏற்கனவே ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் சேவை அணுக கிடைத்தால், அங்கே நிச்சயமாக 2 புதிய ஸ்டேண்ட்பை திட்டங்களும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
2 New Airtel Broadband Standby Plans Launched For Rs 199 and Rs 399 which Offers 10 Mbps Speed Unlimited Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X