Home
News

ரூ.299 பிளான் ரூ.344.. ரூ.349 பிளான் ரூ.401 ஆகுமா? இன்னும் 2 முறை ரீசார்ஜ் விலை உயரும்.. வல்லுனர்கள் பகீர்!

பிஓஎப்ஏ செக்யூரிட்டீஸ் (BofA Securities) வல்லுநர்கள் - ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea - Vi ) என ஒட்டுமொத்த இந்திய டெலிகாம் கஸ்டமர்களின் தலையிலும் இடியை இறக்கும் ஒரு தகவலை கூறி உள்ளனர்.

பிஓஎப்ஏ செக்யூரிட்டீஸின் சமீபத்திய அறிக்கை ஆனது - இந்திய தொலைத்தொடர்பு துறையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் சுனில் மிட்டல் தலைமையிலான பாரதி ஏர்டெல் ஆகியவைகள் "வசதியான" மற்றும் "குறைந்த போட்டி தன்மை கொண்ட சூழலில்" தொடர்ந்து வளரும் என்று என்று தெரிவித்துள்ளது.

ரூ.299 பிளான் ரூ.344.. ரூ.349 பிளான் ரூ.401 ஆகுமா? வல்லுனர்கள் பகீர்!

இருப்பினும் எதிர்காலத்தில், இந்திய டெலிகாம் தொழில்துறையில் மேலும் 2 கட்டண உயர்வுகள் இருக்கும் என்றும் பிஓஎப்ஏ செக்யூரிட்டீஸ் கணித்துள்ளது. இருப்பினும், அதற்கான சரியான காலக்கெடு எதுவும் வழங்கப்படவில்லை. அதாவது பிஓஎப்ஏ செக்யூரிட்டீஸ் சொல்லும் விலை உயர்வுகள் எப்போது அமலுக்கு வரும் என்கிற விவரங்கள் வழங்கப்படவில்லை.

டெலிகாம்டால்க்கின் (TelecomTalk) கூற்றுப்படி, கட்டண உயர்வுகள் ஆனது முன்னதாக அமலுக்கு வந்தது போலவே, வழக்கமான போக்கில் தான் இருக்கும். அதாவது இந்திய டெலிகாம் தொழில்துறையில் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒரு முறை விலை உயர்வு வரும்; அதனை தொடர்ந்து குறுகிய இடைவெளியில் பல ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளில் தொடர்ச்சியான மேம்படுத்தல்களும் செய்யப்படும் - இதுதான் வழக்கம்.

அடுத்ததாக வரும் விலை உயர்வு ஆனது தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.300 என்கிற ஏஆர்பியு (ARPU - Average revenue per user) என்கிற இலக்கை அடையவும், கடக்கவும் உதவும். எடுத்துக்காட்டுக்கு ஏர்டெல் நிறுவனமானது, அதன்கட்ட ரீசார்ஜ் விலை உயர்வின் போது சுமார் 10-15% விலை உயர்வை அறிவிக்கும் பட்சத்தில், அந்நிறுவனத்தின் ஏஆர்பியு -அதாவது ஒரு பயனருக்கான சராசரி வருவாய் ஆனது ரூ.300 ஐ தொடும். இதுதான் ஏர்டெல் நிறுவனத்தின் இலக்காகும்.

ஒருவேளை ஏர்டெல் 15% விலை உயர்வை அறிவித்தால், இப்பொது ரூ.299 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டமானது ரூ.344 ஆக விலை உயரும், இதேபோல ரூ.349 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் திட்டத்தின் விலை ரூ.401 ஆக அதிகரிக்கும். அடுத்த விலை உயர்வு குறித்த பேச்சுக்கள் ஏற்கனவே உள்ளன, அது விரைவில் செயல்படுத்தப்படுமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

2 முறை விலை உயர்வு குறித்த கணிப்புடன் சேர்த்து, பிஓஎப்ஏ செக்யூரிட்டீஸ் - ஜியோ மற்றும் ஏர்டெல்லுக்கு, எதிர்காலத்தில் சாத்தியமான முன்னேற்றங்களுக்கான மதிப்பீட்டை பற்றியும் பேசியுள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள நிறுவனமான வோடபோன் ஐடியாவை பொறுத்தவரை, கடன் மற்றும் தொடர்ச்சியான சந்தை பங்கு இழப்பு காரணமாக, அதன் செயல்திறன் குறைவாகவே உள்ளது.

ஏஜிஆர் (AGR), அதாவது சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (Adjusted gross revenue) நிலுவைத் தொகை விஷயத்தில் அரசாங்கத்திடமிருந்தோ அல்லது உச்ச நீதிமன்றத்திடமிருந்தோ நிவாரணம் கிடைத்ததால் விஐ நிறுவனத்தின் பங்கு மீண்டும் உயரக்கூடும் என்றும் பிஓஎப்ஏ கணித்துள்ளது. வோடபோன் ஐடியாவின் பிரச்சினை என்னவென்றால், அதன் அடிப்படைகள் பலவீனமாக இருக்கிறது என்றும் பிஓஎப்ஏ குறிப்பிட்டுள்ளது.

டெலிகாம் வணிகத்தின் "மையமாக" பார்க்கப்படும் வயர்லெஸ் சந்தையில் இந்நிறுவனம் பல ஆண்டுகளாக சந்தைப்பங்கில் சரிவை காண்கிறது. 4ஜி நெட்வொர்க்குகளை மேம்படுத்துவதற்கும், புதிய பிராந்தியங்களில் 5ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்துவதற்கும் விஐ நிறுவனத்தால் ஏராளமான மூலதன செலவுகள் செய்யப்பட்டிருந்தாலும், அதனால் வணிகத்தில் எந்த பெரிய லாபத்தையும் காண முடியவில்லை என்றும்
பிஓஎப்ஏ கூறியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
2 More Tariff Hikes Coming to Telecom Sector Jio Airtel Wants Rs 300 ARPU BofA Securities
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X