Netflix வழங்கும் பேஸிக் பிளானில் 2 அதிரடி மாற்றங்கள்.. நமக்கு கொடுத்து வச்சது அவ்ளோ தான்!
நெட்பிளிக்ஸின் பேஸிக் பிளானில் (Netflix Basic Plan) 2 அதிரடி மாற்றங்கள் என்றதுமே.. எதோ குறைக்கப்பட்டு விட்டது என்று நினைத்து கொள்ள வேண்டாம்; விளம்பரங்கள் (Ads) உடன் வரும் அடிப்படை திட்டத்தில் இரண்டு முக்கியமான நன்மைகள் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அவைகளை அனுபவிக்க நமக்கு தான் கொடுத்து வைக்கவில்லை!
ஏனென்றால் நாம் இங்கே பேசும் பேஸிக் நெட்பிளிக்ஸ் பிளான் (Basic Netflix Plan) ஆனது இந்தியாவில் இன்னும் அறிமுகம் செய்யப்படவே இல்லை. கடந்த நவம்பர் 2022 இல், அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்காக - மிகவும் மலிவான விலையில் - ஒரு புதிய நெட்பிளிக்ஸ் பிளான் அறிமுகம் செய்யப்பட்டது.

அது நெட்பிளிக்ஸ் பேஸிக் வித் ஆட்ஸ் பிளான் (Netflix Basic with Ads plan) என்று அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் இது அதிகபட்சமாக 720பி ரெசல்யூஷன் (720p Resolution) என்கிற அளவிலான வீடியோ குவாலிட்டியை ஆதரித்தது. தற்போது இது உயர்தர ஸ்ட்ரீமிங்கை (Higher Quality Streaming) ஆதரிக்கும் என்று நெட்பிளிக்ஸ் அறிவித்ததுள்ளது.
அதுமட்டுமின்றி, இந்த திட்டத்தின் கீழ் உள்ள பயனர்கள் ஒரே நேரத்தில் 2 ஸ்ட்ரீம்களை பார்க்க முடியும் (Watch two streams at once) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 புதிய நன்மைகளும் கனடா (Canada) மற்றும் ஸ்பெயினில் (Spain) ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது. மேலும், இம்மாத இறுதிக்குள் இந்த திட்டம் அணுக கிடைக்கும் அனைத்து 12 சந்தைகளிலும் அறிமுகமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னரே குறிப்பிட்டபடி இந்த திட்டம் இந்தியாவில் கிடைக்காது. இது ஆஸ்திரேலியா (Australia), பிரான்ஸ் (France), கனடா, யுகே (UK) மற்றும் யுஎஸ் (US) உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. அமெரிக்காவில் இந்த திட்டதின் விலை மாதத்திற்கு 6.99 அமெரிக்க டாலர் (அதாவது இந்திய மதிப்பின்படி ரூ.575) ஆகும். இதே திட்டம் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுமா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை!
வந்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால்.. எங்கெல்லாம் 'பேஸிக் வித் ஆட்ஸ்' திட்டம் அணுக கிடைக்கிறதோ, அங்கெல்லாம் இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக நெட்பிளிக்ஸ் கூறியுள்ளது. இந்நிறுவனத்தின் வருவாய் அறிக்கையின்படி, விளம்பரத்துடன் வரும் பேஸிக் திட்டமானது ஸ்டாண்டர்ட் திட்டத்தை (Standard plan) விட அதிக வருவாயை (அமெரிக்காவில்) கொண்டு வருகிறதாம்.
நினைவூட்டும் வண்ணம், அமெரிக்காவில் நெட்பிளிக்ஸின் ஸ்டாண்டர்ட் திட்டமானது மாதத்திற்கு 15.49 அமெரிக்க டாலர்களுக்கு (அதாவது இந்திய மதிப்பின்படி ரூ.1273 க்கு) அணுக கிடைக்கிறது. இது எச்டி குவாலிட்டி (HD Quality) உடனான ஸ்ட்ரீமிங்கை வழங்கும் ஒரு திட்டமாகும். சமீபத்தில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதன்சி மெயில்டு டிவிடி டெலிவரி சேவையை (Mailed DVD delivery service) நிறுத்துவதாகவும் அறிவித்தது.
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட நெட்பிளிக்ஸின் இந்த டிவிடி டெலிவரி சேவையானது, அந்த நேரத்தில் இந்நிறுவனத்திற்கு முதன்மையான வருவாயை ஈட்டித்தந்தது. நெட்பிளிக்ஸ் தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை, இந்நிறுவனம் தனது பாஸ்வேர்ட் ஷேரிங் ஒடுக்குமுறையின் (Password Sharing Crackdown) பரந்த வெளியீட்டை இந்தாண்டின் இரண்டாம் காலாண்டிற்கு ஒத்திவைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








