Home
News

சரியான ஆளு.. 50 நாட்கள் FREE-னு சொல்லிட்டு.. OFFER குள்ள 2 டிவிஸ்ட்டு வச்ச அம்பானி.. கடுப்பான Jio கஸ்டமர்ஸ்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோ ஏர்ஃபைபர் (Jio AirFiber) சேவையானது தற்போது 5352 நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அணுக கிடைக்கும் என்று அறிவித்த கையோடு.. முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனமானது "50 நாட்களுக்கு இலவசம்" என்கிற புதிய சலுகையையும் அறிவித்தது.

ஜியோ ஏர்ஃபைபர் சேவையை விளம்பரப்படுத்தும் நோக்கத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இந்த 50 நாட்கள் இலவச சலுகை (50 Days Free Offer) ஆனது ரிலையன்ஸ் ஜியோவில் சேரும் புதிய வாடிக்கையாளர்களுக்கும் (New Customers) கிடைக்கும் மற்றும் ஏற்கனவே ஜியோ சேவையின்கீழ் உள்ள பழைய வாடிக்கையாளர்களுக்கும் (Existing Customers) கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

50 நாட்கள் FREE-னு சொல்லிட்டு.. JioFiber OFFER குள்ள 2 டிவிஸ்ட்டு!

2024 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஸ்ட்ரீமிங் செய்வதற்காக பெரும்பாலான மக்கள் ஜியோசினிமா (JioCinema) சேவைக்குள் நுழைந்துள்ள நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த இலவச சலுகையானது.. உண்மையிலேயே கஸ்டமர்களை ஈர்க்கக்கூடிய ஒரு ஆஃபர் தான். ஆனாலும் இதை பெற 2 முக்கியமான தகுதிகள் (Eligibilities) உள்ளன!

முதல் தகுதி: ஜியோ ஏர்ஃபைபர் சேவையின் கீழ் கிடைக்கும் "50 நாட்கள் இலவச சலுகை" ஆனது எல்லோருக்கும் கிடைக்காது. யாரெல்லாம் தத்தம் 5ஜி ஸ்மார்ட்போன்கள் (5G Smartphones) வழியாக ஜியோ ட்ரூ 5ஜி நெட்வொர்க்கை (Jio True 5G Network) 2 வாரங்களுக்கு மேலாக பயன்படுத்தினார்களோ அவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

50 நாட்கள் FREE-னு சொல்லிட்டு.. JioFiber OFFER குள்ள 2 டிவிஸ்ட்டு!

அதாவது இந்த ஆபரை பெறுவதற்கு வாடிக்கையாளர் குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு ஜியோவின் ட்ரூ 5ஜி சேவையை பயன்படுத்த வேண்டும். மேலும் ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பை பெற அதே தகுதியான மொபைல் நம்பரை (அதாவது எந்த எண்ணின் கீழ் ஜியோ ட்ரூ 5ஜி நெட்வொர்க்கை பயன்படுத்தினீர்களோ.. அதே எண்ணை) பயன்படுத்த வேண்டும்!

இரண்டாவது தகுதி: ரூ.599 மற்றும் அதற்கு மேற்பட்ட ஓடிடி திட்டங்களை.. 6 அல்லது 12 மாதங்களுக்கு முன்பணம் செலுத்தி ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த இலவச சலுகை பொருந்தும். இப்படியாக ஜியோ ஏர்ஃபைபர் சேவை ஆக்டிவேட் செய்யபட்ட 24 மணி நேரத்திற்குள், கஸ்டமர்களின் மைஜியோ அக்கவுண்டில் (MyJio Account) 50 நாட்கள் இலவச சேவைக்கான தள்ளுபடி வவுச்சர் வரவு வைக்கப்படும்.

50 நாட்கள் FREE-னு சொல்லிட்டு.. JioFiber OFFER குள்ள 2 டிவிஸ்ட்டு!

இன்னொரு முக்கியமான விஷயமும் உள்ளது! ஜியோவின் இந்த இலவச ஆஃபர் மார்ச் 16 ஆம் தேதி முதல் தொடங்கியது. இதுவொரு வரையறுக்கப்பட்ட கால சலுகை (Limited-time offer) என்பதால், ஜியோ நிறுவனம் எந்த நேரத்திலும் இதை அகற்றலாம். இந்த ஆஃபரின் கீழ் ஜியோ ஏர்ஃபைபரை ஆக்டிவேட் செய்வதற்கான இறுதி தேதி ஏப்ரல் 30, 2024 என்று ஜியோ தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு முக்கியமான நிபந்தனையை பொறுத்தவரை, இந்த இலவச சலுகையின் கீழ் ஜியோ ஏர்ஃபைபர் கஸ்டமர்களுக்கு கிரெடிட் செய்யப்படும் தள்ளுபடி வவுச்சரை வேறொருவருக்கு மாற்றவோ / கொடுக்கவோ முடியாது. மேற்கண்ட 2 தகுதிகளும் உங்களுக்கு உள்ளதென்றால், நீங்கள் ஜியோவின் 5ஜி எஃப்டபுள்யூஏ (5G FWA - Fixed Wireless Access) சேவைக்குள் நுழைய வ நுழைய விரும்பினால்.. இதுவே அதற்கான சரியான நேரமாகும்!

ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ்களின் கீழ் கிடைக்கும் முக்கியமான இலவச சலுகைகளை பொறுத்தவரை, ரூ.749 திட்டத்தின் மீது ஜியோ கிரிக்கெட் ஆபரின் (Jio Cricket Offer) ஒரு பகுதியாக 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா (Extra Data Offer) கிடைக்கிறது. இதேபோல ஜியோவின் ரூ.398 திட்டத்தில் 6ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா கிடைக்கிறது.

சமீபத்தில் ஜியோ நிறுவனம் ரூ.49 க்கு ஒரு புதிய கிரிக்கெட் பிளானை (Jio Rs.49 Cricket Plan) அறிமுகம் செய்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஜியோவின் இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் உங்களுக்கு 25ஜிபி ஹைஸ்பீட் டேட்டா (25GB High Speed Data) கிடைக்கும். அதாவது 1 ரூபாய் 91 பைசா என்கிற விகிதத்தில் 1ஜிபி டேட்டா கிடைக்கும் அல்லது சுமார் ரூ.4 க்கு 2ஜிபி டேட்டா கிடைக்கும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
2 Important Eligibilities Every Customers Need To Know Before Avail Jio Airfiber 50 Days Free Offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X