BSNL-ன் 2 முக்கிய அறிவிப்பு.. தமிழ்நாடு கஸ்டமர்கள் குஷி.. அம்பானி சார்.. இனி எங்க ஆட்டத்தை பார்ப்பீங்க!
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோவும், அதன் முக்கிய போட்டியாளரான ஏர்டெல்லும், நாடு முழுவதும் தத்தம் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்து கொண்டிருப்பதால், அடுத்த 1 மாதத்தில் அல்லது 1 ஆண்டில் எல்லோருமே 5ஜி நெட்வொர்க்கிற்கு மாறிவிடுவார்கள்; 4ஜி காணாமல் போய்விடுமென்று நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால், அது தவறு!
4ஜி சேவைகள் எங்கும் போகப்போவதில்லை. இந்தியாவில், அடுத்த சில ஆண்டுகளுக்கு அது பயன்பாட்டில் தான் இருக்கப்போகிறது. நம்மில் பலரும் அதை தொடர்ந்து பயன்படுத்த தான் போகிறோம். இந்த விஷயம் ஜியோவிற்கும் தெரியும்; ஏர்டெல்லுக்கும் தெரியும். அப்படியே அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனதிற்கும் கூட நன்றாக தெரியும்.

அதனொரு பகுதியாக, பிஎஸ்என்எல் நிறுவனமானது அதன் 4ஜி சேவைகள் தொடர்பான 2 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. முதல் அறிவிப்பானது, இந்தியா முழுவதும் உள்ள சுமார் 70 லட்சம் பிஎஸ்என்எல் பயனர்களுக்குமான குட் நியூஸ் ஆகும். இரண்டாவது அறிவிப்பு - தமிழ்நாட்டில் உள்ள கஸ்டமர்களுக்கான பிரத்யேக குட் நியூஸ் ஆகும்.
முதல் அறிவிப்பு என்னவென்றால், "இப்போதைக்கு ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தும் திட்டம் இல்லை" என்பதை பிஎஸ்என்எல் உறுதிப்படுத்தியுள்ளது. இரண்டாவது அறிவிப்பு என்னவென்றால், " தமிழ்நாட்டில் மிகவும் வலுவான 4ஜி நெட்வொர்க் கிடைக்கும்" என்பதையும் பிஎஸ்என்எல் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்காக 8,000 பிடிஎஸ் டவர்கள் மேம்படுத்தப்பட வேண்டும் மற்றும் கூடுதலாக 1,500 புதிய பிடிஎஸ் டவர்கள் நிறுவப்பட வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் வனப்பகுதி, கொல்லிமலை, ஏற்காடு, ஜவ்வாதுமலை போன்ற தொலைதூரப் பகுதிகள் உட்பட, இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 431 கிராமங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இப்படியாக மொத்தம் 19,722 மொபைல் டவர்களுடன், நாடு முழுவதும் உள்ள 29,616 கிராமங்களுக்கு நல்ல கவரேஜை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ள பிஎஸ்என்எல் இந்த திட்டம், வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்கிற இலக்கையும் கொண்டுள்ளது. மேற்கண்ட தகவல்களை பிஎஸ்என்எல் வாரியத் தலைவர் ஆன சந்தீப் கோவில், தி ஹிந்துவிடம் பகிர்ந்து கொண்டார்.
நாடு தழுவிய 4ஜி விரிவாக்கத்திற்காக, பிஎஸ்என்எல் நிறுவனமானது ஏற்கனவே டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் ஐடிஐ லிமிடெட் ஆகியவற்றுடன் இணைந்துள்ளது. மேலும் இந்த கூட்டணியின் கீழ் உள்நாட்டு 4ஜி தொழில்நுட்பம் மற்றும் 1 லட்சம் 4ஜி பேஸ் டிரான்ஸ்ஸீவர் ஸ்டேஷன் (பிடிஎஸ்) டவர்களுக்கான ஆர்டரும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்டரின் மொத்த மதிப்பு சுமார் 19,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
4G திட்டத்தின் ஒரு பகுதியாக, BSNL நிறுவனங்களின் கூட்டமைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளது, இதில் மென்பொருள் ஆதரவு மற்றும் கணினி ஒருங்கிணைப்புக்கான TCS, முக்கிய தொழில்நுட்பத்திற்கான CDOT மற்றும் ரேடியோ நெட்வொர்க் வரிசைப்படுத்தலுக்கான தேஜாஸ் ஆகியவை அடங்கும்.
இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், வாங்கப்படும் உபகரணங்கள் எல்லாமே 5ஜி-க்கு மேம்படுத்தக்கூடியவைகள் ஆகும். அத்வயி பிஎஸ்என்எல் நிறுவனம் அதாஹ்ன் 4ஜி சேவைகளை அறிமுகப்படுத்திய பின், கூடிய விரைவில் 5ஜி தொழில்நுட்பத்திற்கு மாற முடியும். அதற்காக தனியாக செலவு செய்ய வேண்டிய அல்லது பெரிய முயற்சிகள் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது!
இதெல்லாம் எப்போது செயல்படுத்தப்படும் என்கிற கேள்விக்கு பதிலளித்த சந்தீப் கோவில், " செப்டம்பர் அல்லது அக்டோபரில் உபகரணங்களின் விநியோகம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான 4ஜி நெட்வொர்க் கவரேஜை உறுதி செய்யும் வகையில், அடுத்த ஒரு வருடத்திற்குள் ஒரு லட்சம் பிடிஎஸ் டவர்களை இயக்கப்படும்" என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








