Home
News

நல்லா அனுபவிச்சிகோங்க.. அதுக்கப்புறம் கிடைக்காது.. 2024ல் முடிவுக்கு வரும் 2 Google சேவைகள்!

கடந்த பல ஆண்டுகளாக கூகுளின் (Google) கீழ் அணுக கிடைத்த 2 சேவைகள் வருகிற 2024 ஆம் ஆண்டோடு நிறுத்தப்பட (Shut Down) உள்ளதாக கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதென்ன சேவைகள்? அந்த சேவைகள் திடீரென முடிவுக்கு வர என்ன காரணம்? இதோ விவரங்கள்:

வருகிற 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் நெஸ்ட் செக்யூர் (Nest Secure) மற்றும் டிராப்கேம் ஹோம் செக்யூரிட்டி சிஸ்டம் (Dropcam home security system) என்கிற 2 சேவைகளுக்கான ஆதரவையும் நிறுத்த உள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.

2024ல் முடிவுக்கு வரும் 2 Google சேவைகள்!

"குறிப்பிட்ட தேதி வரையிலாக இந்த 2 சேவைகளின் கீழ் கிடைக்கும் எல்லா அம்சங்களும் தொடர்ந்து கிடைக்கும். பயனர்கள் தங்கள் நெஸ்ட் செக்யூர் மற்றும் ட்ராப்கேமை தொடர்ந்து பயன்படுத்தலாம். ஆனால் ஏப்ரல் 8.2024 க்கு பிறகு ட்ராப்கேம் வேலை செய்யாது" என்று கூகுள் தெரிவித்துள்ளது.

மேலும் குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் "உங்கள் நெஸ்ட் ஆப்ஸை (Nest Apps) பயன்படுத்தி ஸ்டேட்டஸை சரிபார்க்க முடியாது" என்றும் கூகுள் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி வருகிற செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் தனது ஒர்க்ஸ் வித் நெஸ்ட் (Works with Nest) திட்டத்தையும் ஷட் டவுன் செய்வதாக கூகுள் தெரிவித்துள்ளது.

நினைவூட்டும் வண்ணம், கூகுள் நிறுவனம் அதன் ஒர்க்ஸ் வித் நெஸ்ட் புரோகிராமை கடந்த 2014 இல் உருவாக்கியது. இது மூன்றாம் தரப்பு டிவைஸ்களை (Third Party Devices) நெஸ்ட் தயாரிப்புகளுடன் இணைக்கவும், அவைகளுக்கு இடையே தடையின்றி செயல்படவும் அனுமதிக்கும் ஒரு திட்டமாகும்.

ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்மார்ட் ஹோம் அனுபவத்திற்காக (Integrated smart home experience) உருவாக்கப்பட்ட ஒர்க்ஸ் வித் நெஸ்ட் திட்டமானது கடந்த 2019 ஆம் ஆண்டிலேயே நிறுத்தப்பட முடிவு செய்யப்பட்டது. பிறகு "இன்னும் கொஞ்ச நாள் பார்க்கலாம்" என்கிற பாணியில் கடந்த சில ஆண்டுகளாக நீடிக்கப்பட்டு இருந்தது; தற்போது உண்மையிலேயே நிறுத்தப்பட உள்ளது.

"கடந்த சில ஆண்டுகளாக நெஸ்ட் உடன் வேலை செய்வதற்கான ஆதரவை நாங்கள் நீட்டித்துள்ளோம், இருப்பினும் வருகிற 2023 செப்டம்பர் 29 ஆம் தேதியோடு நெஸ்ட் உடனான வேலைகளை அதிகாரப்பூர்வமாக முடித்துக்கொள்வோம். அதுவரை, நெஸ்ட் கனெக்ஷன்களின் (Nest Connections) கீழ் நடக்கும் எல்லா வேலைகளும் வழக்கம் போல நடக்கும்" என்று கூகுள் கூறியுள்ளது.

சமீபத்தில் கூகுள் நிறுவனம் பெர்சனல் லோன் ஆப்களுக்கான (Personal Loan Apps) புதிய கிடுக்குபிடியை அறிவித்திருந்தது. கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play stores) பதிவிறக்கம் செய்ய கிடைக்கும் சில பெர்சனல் லோன் ஆப்களானது கடன் வாங்குபவர்களின் தனிப்பட்ட தகவல்களை (புகைப்படங்கள் மற்றும் காண்டாக்ட் லிஸ்ட் உட்பட) அணுகுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

அறியாதோர்களுக்கு சில பெர்சனல் லோன் ஆப்கள், கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்பதாக கூறி கடன் வாங்கியவர்களை தொந்தரவு செய்வதாக தொடர் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அதை தொடர்ந்தே தனிநபர்களுக்கு பெர்சனல் லோன்களை வழங்கும் ஆண்ட்ராய்டு ஆப்ககளுக்கான கூகுள் பாலிசியில் (Google Personal Loan Apps Policy) திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
2 Google Services Nest Secure and Dropcam Shut Down in 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X