Home
News

இந்த வார்த்தை கேட்க பல வருஷம் காத்திருந்தோம்.. புதுச்சேரி BSNL கஸ்டமர்களுக்கு 2 குட் நியூஸ்!

இந்திய அரசுக்கு சொந்தமான டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) என்கிற பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) ஆனது புதுச்சேரியில் உள்ள கஸ்டமர்களுக்கு (Puducherry Customers) ஒன்றல்ல, இரண்டு அட்டகாசமான குட் நியூஸ்களை சொல்லி உள்ளது.

முதல் குட் நியூஸ் என்னவென்றால் - பிஎஸ்என்எல் நிறுவனமானது புதுசேர்ச்சியில் 100 புதிய 4ஜி டவர்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த 100 டவர்களும் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அதிவேக இணைய இணைப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிர்து. இந்த அறிவிப்பை பிஎஸ்என்எல் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (சிஎம்டி) ராபர்ட் ஜே ரவி வெளியிட்டார்.

புதுச்சேரி BSNL கஸ்டமர்களுக்கு 2 குட் நியூஸ்!

இரண்டாவது குட் நியூஸ் - 100 4ஜி டவர்கள் குறித்த அப்டேட் உடன் சேர்த்து நுகர்வோருக்கான கட்டணங்களை உயர்த்தும் திட்டம் நிறுவனத்திற்கு இல்லை என்றும் பிஎஸ்என்எல் உறுதிப்படுத்தியுள்ளது. இலவச இண்டர்நேர்ட் டிவி (IPTV), தேசிய வைஃபை ரோமிங் மற்றும் ஃபைபர் இண்டர்நெட் ஆகியவற்றை உள்ளடக்கிய பிஎஸ்என்எல்-இன் புதிய சேவைகளும் அப்பகுதி பயனர்களுக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த புதிய சேவைகளின் விரிவாக்கம், கடந்த மூன்று மாதங்களில் புதுச்சேரி பகுதியில் 20,000 புதிய இணைப்புகளை பெற பிஎஸ்என்எல்நிறுவனத்திற்கு உதவியுள்ளது என்றும் ராபர்ட் ஜே ரவி கூறி உள்ளார். இதன் மூலம் அப்பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் பயனர்களின் மொத்த எண்ணிக்கை 75,000 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, ​​புதுச்சேரியில் பிஎஸ்என்எல்-இன் 130 டவர்ங்கள் உள்ளன. எதிர்காலத்தில் கூடுதலாக 100 டவர்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதால், இப்பகுதியில் இண்டர்நெட் இணைப்பு கணிசமாக மேம்படும். இது, எதிர்காலத்தில் அதிக 4ஜி பயனர்களையும், ஒருவேளை 5ஜி பயனர்களையும் சேர்ப்பதற்கு பிஎஸ்என்எல்-க்கு உதவும்.

இருப்பினும், தற்போது வரை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் முழு கவனம் 4ஜி சேவையில் மட்டுமே இருப்பதால், பிஎஸ்என்எல் 5ஜி சேவை மற்றும் அதற்கான மேம்பாடுகள் - இன்னும் தொலைவில் தான் உள்ளன என்பது கசப்பான உண்மை. அதிவேக இண்டர்நெட் இணைப்பை மேம்படுத்துவதற்காக கூடுதல் டவர்களை அமைக்க, பிஎஸ்என்எல் தற்போது அரசு மற்றும் அமைச்சர்களிடமிருந்து அனுமதி பெறும் பணியில் ஈடுபட்டுள்ளது.

ரீசார்ஜ் விலை உயர்வு: பிஎஸ்என்எல் எப்போதுமே நேரடி கட்டண உயர்வுகளை தவிர்த்து வந்துள்ளது. ஜியோ, ஏர்டெல் , வோடாபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆனது தங்கள் திட்டங்கள் அனைத்திலும் கட்டணங்களை உயர்த்தும் சுழற்சிகளை கொண்டிருக்கும் வேளையில், பிஎஸ்என்எல் அதை செய்வதற்கு ஒரு வித்தியாசமான வழியை கொண்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான இந்த தொலைத்தொடர்பு நிறுவனம், கட்டணங்களை நேரடியாக உயர்த்தி, அதன் பலன்களை அப்படியே வைத்திருப்பதற்கு பதிலாக, காலப்போக்கில் பல திட்டங்களின் பலன்களை குறைப்பதன் மூலம் மறைமுகமாக கட்டணங்களை உயர்த்துகிறது. இது பொதுவாக, பயனர்கள் தாங்கள் சேவைகளுக்கு அதே தொகையை செலுத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் உள்ள வளங்களோ அல்லது நெட்வொர்க் ஆதரவோ /உள்கட்டமைப்போ பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இல்லாத நிலையில், இது ஒரு மோசமான உத்தி அல்ல. தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் 2027 நிதியாண்டில் அதன் கட்டணங்களை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் இந்நிறுவனம் 2027 நிதியாண்டில், ஏஆர்பியு (ARPU) என்கிற ஒரு வாடிக்கையாளருக்கான சராசரி வருவாயை (Average Revenue Per User) 50% உயர்த்த விரும்புகிறது.

பிஎஸ்என்எல்-இன் தற்போதைய - ஒரு வாடிக்கையாளருக்கான சராசரி வருவாய் ரூ.101 ஆகும். இது 2026 நிதியாண்டின் இறுதியில் இருந்த நிலை. வருகிற 2027 நிதியாண்டில் இது ரூ.150-ஐ எட்ட வேண்டும் என்று பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் ""தலையிலும்" ரூ.49-ஐ அதிகம் ஏற்ற வேண்டும் என்கிற திட்டத்தை கொண்டுள்ளது. நேரடி அல்லது மேற்குறிப்பிட்ட மறைமுகமான விலை உயர்வு இல்லாமல் இது சாத்தியம் இல்லை!

Best Mobiles in India

English summary
2 good news from BSNL for Puducherry people 100 New 4G Towers Coming Soon and No Tariffs Hike
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X