இரண்டுமே இலவசம்.. கஸ்டமர்களை ஈர்க்க Airtel-ன் அடேங்கப்பா ஐடியா.. யாருக்கு எல்லாம் கிடைக்கும்? பெறுவது எப்படி?
2024 ஜூலை 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த மொபைல் ரீசார்ஜ் கட்டண உயர்விற்கு (Mobile Recharge Price Hike) பின், இன்னும் நீங்கள் ஒருமுறை கூட ரீசார்ஜ் செய்யவில்லை என்றால்.. ரூ.600 வரை அதிக விலை கொடுத்து ரீசார்ஜ் செய்தவர்களின் வலியும், வேதனையும் "இப்போதைக்கு" உங்களுக்கு தெரியாமல் போகலாம். ஆனால் எப்போதுமே தெரியாமல் போய்விடும் என்று கூறிவிட முடியாது. உங்களுடைய மெயின் ரீசார்ஜ்ஜின் வேலிடிட்டி முடியும் வரை தான் நீங்கள் லக்கி.. அதன்பிறகு உங்கள் பாக்கெட்டிலும் விழும் ஒரு பெரிய ஓட்டை!
அந்த நேரத்தில் தான் ஏற்கனவே பாக்கெட்களில் ஓட்டை வாங்கிய அனுபவசாலிகளின் கதறல் உங்கள் காதுகளில் கேட்கும். அது "இவ்ளோ காசு கொடுத்து ப்ரீபெய்ட் பிளானை ரீசார்ஜ் செய்வதற்கு பதிலாக.. பேசாமல் புதுசா பிராட்பேண்ட் கனெக்ஷன் எடுத்துடலாம் போலயே!" என்கிற எண்ணமே ஆகும். ஒருவேளை உங்களுக்கும் இதே எண்ணம் இருந்தால்.. ஏர்டெல் அதன் பிராட்பேண்ட் சேவையின் (Airtel Broadband Service) கீழ் வழங்கும் 2 இலவசங்களை பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்!

பார்தி ஏர்டெல் - நாட்டின் இரண்டாவது பெரிய இண்டர்நெட் சர்வீஸ் ப்ரொவைடர் ( Internet Service Provider - ISP) ஆக உள்ளது. டயர்-டூ மற்றும் டயர்-த்ரீ நகரங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் ஏர்டெல் நிறுவனம் அதன் பிராட்பேண்ட் சேவைகளை வழங்குகிறது. ஏர்டெல்லின் எப்டிடிஎச் ( FTTH) சேவை அதாவது ஃபைபர்-டு-தி-ஹோம் (Fiber-to-the-home) சேவையானது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர் (Airtel Xstream Fiber) என்கிற பெயரின் கீழ் வழங்கப்படுகிறது.
தனது எக்ஸ்ட்ரீம் பைபர் சேவையின் கீழ் தான் ஏர்டெல் நிறுவனம் அதன் புதிய கஸ்டமர்களுக்கு 2 இலவசங்களை வழங்குகிறது. ஒன்று - இலவச வைஃபை ரூட்டர் ( free Wi-Fi router); இரண்டாவது - இலவச இன்ஸ்டாலேஷன் (Free installation). மலிவு விலையில் மற்றும் உயர்தர இண்டர்நெட் அனுபவத்தை வழங்கும் பிராட்பேண்ட் கனெக்ஷனை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், ஏர்டெல் உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
2 இலவசங்களோடு சேர்த்து ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர் சேவையின் கீழ் இணைவது எப்படி? ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபரிலிருந்து இலவச வைஃபை ரூட்டர் மற்றும் இன்ஸ்டாலஷனை பெற வாடிக்கையாளர்கள் அரையாண்டு திட்டம் அல்லது வருடாந்திர திட்டத்தை (Semi-annual plan or Annual plan) தேர்வு செய்ய வேண்டியிருக்கும். அப்போது தான் நிறுவனத்திடமிருந்து இலவச வைஃபை ரூட்டரை பெறுவதற்கும், இலவச நிறுவலுக்கும் தகுதியுடையவர்கள் ஆவீர்கள்.
முன்னதாக ஏர்டெல் நிறுவனம் 3 மாத திட்டத்துடன் (3 Months Plans) கூட இலவச நிறுவலை வழங்கியது. ஆனால் இப்போது இந்த சலுகை இடத்திற்கு இடம் வேறுபடும் என்பது போல் தெரிகிறது. ஆகவே நீங்கள் ஒரு இணைப்பை வாங்கும் போது, இலவச இன்ஸ்ட்டாலஷனை மூன்று மாத திட்டத்திலும் பெற முடியுமா என்பதை விசாரிக்கவும்.
ஒருவேளை நீங்கள் மாதாந்திர திட்டத்தை தேர்வு செய்கிறீர்கள் என்றால், ரூட்டருக்கான பாதுகாப்பு வைப்புத்தொகையை (Security deposit) செலுத்த வேண்டியிருக்கும், மேலும் இன்ஸ்டாலஷனுக்கும் இணைப்பை நிறுவுவதற்கும் பணம் செலுத்த வேண்டும். ஏர்டெல் நிறுவனத்தின் இணையதளத்தில், நீங்கள் ஒரு மாதாந்திர திட்டத்தை தேர்வு செய்தால், இணைப்பை நிறுவுவதற்கு நீங்கள் ரூ.1500 ரூபாய் செலுத்த வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர் சேவையின் கீழ் ரூ.499 முதல் 40 எம்பிபிஎஸ் வேகத்துடன் (40Mbps Speed) வரும் திட்டங்கள் அணுக கிடைக்கிறது. ரூ.499 ஆனது 3.3டிபி என்கிற அளவிலான மாதாந்திர டேட்டாவை (3.3TB Monthly Data) வழங்குகிறது. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர் சேவையின் கீழ் இணைய விரும்புவோர்கள் ஏர்டெல் நிறுவனத்தின் இணையதளம் (Airtel Website) அல்லது அருகில் உள்ள ஏர்டெல் ஸ்டோரை (Airtel Store) அணுகவும்.


Click it and Unblock the Notifications








