உங்கள் போனில் எதை வேணும்னாலும் இன்ஸ்டால் செய்யுங்க.. ஆனா இந்த 2 ஆப்களை மட்டும் தொட்டுடாதீங்க! ஏன்னா?

|

உங்க ஸ்மார்ட்போனில், கூகுள் பிளே ஸ்டோரின் (Google Play Store) கீழ் அணுக கிடைக்கும் எந்தவொரு அதிகாரப்பூர்வ ஆப்பை வேண்டுமானாலும் இன்ஸ்டால் (Install) செய்து கொள்ளுங்கள். ஆனால் குறிப்பிட்ட 2 ஆப்களை (Apps) மட்டுமே தெரியாமல் கூட இன்ஸ்டால் செய்து விடாதீர்கள்!

அதென்ன ஆப்கள்? அதை ஏன் இன்ஸ்டால் செய்ய கூடாது? மீறி செய்தால் என்னவாகும்? இதோ விவரங்கள்:

விபிஎன் (VPN) ஆப்கள் இருக்கிறதா?

விபிஎன் (VPN) ஆப்கள் இருக்கிறதா?

உங்கள் ஸ்மார்ட்போனில் விபிஎன் (VPN) ஆப்கள் இருக்கிறதா? அதிலும் குறிப்பாக இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு விபிஎன்கள் இருக்கிறதா? ஆம் என்றால் உடனே சுதாரித்து கொள்ளவும்!

ஏன்? என்ன ஆகிற்று? அந்த 2 விபிஎன் ஆப்களின் பெயர் என்ன? உடனே சுதாரித்து கொள்ளும்படி என்ன பிரச்சனை? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

இனிமேல் டபுள் கேம் ஆடலாம்.. சைக்கிள் கேப்ல WhatsApp செட்டிங்ஸ்-க்குள் புகுந்த புதிய Mode!இனிமேல் டபுள் கேம் ஆடலாம்.. சைக்கிள் கேப்ல WhatsApp செட்டிங்ஸ்-க்குள் புகுந்த புதிய Mode!

என்ன பண்ணாலும்.. தடுக்க முடியல!

என்ன பண்ணாலும்.. தடுக்க முடியல!

கூகுள் நிறுவனம் அதன் பிளே ஸ்டோரை முடிந்த அளவு பாதுகாப்பாகவும், 'க்ளீன்' ஆகவும் வைத்திருக்க தன்னால் ஆன எல்லாவற்றையும் செய்தாலும் கூட.. தீங்கிழைக்கும் மால்வேர் ஆப்களின் பரவலை தடுக்க முடிவதே இல்லை!

கூகுள் பிளே ஸ்டோரில் மால்வேர் ஆப்கள் கண்டுபிடிக்கப்படுவதும், அது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படுவது, பின்னர் அதை உடனே டெலிட் செய்யுமாறு எச்சரிக்கை விடுக்கப்படுவதும்.. மாதந்தோறும் நடக்கும் ஒரு விஷயமாகி விட்டது!

தற்போது வழக்கத்திற்கு மாறாக!

தற்போது வழக்கத்திற்கு மாறாக!

வழக்கமாக - காலெண்டர், போட்டோ ஃபில்டர், ஸ்கேனர் போன்ற சாதாரண ஆப்களின் வழியாகத்தான் மால்வேர்கள் பரவும். ஆனால் இம்முறை கூகுள் பிளே ஸ்டோரில் 2 போலியான விபிஎன் ஆப்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்னொரு திகிலான விஷயம் என்னவென்றால், அந்த 2 விபிஎன் ஆப்களுமே வெறுமனே போலியானது மட்டுமல்ல; அவைகள் உங்கள் ஸ்மார்ட்போனிற்கு தீங்கு விளைவிக்க கூடிய ட்ரோஜன்களையும் (Trojans) கொண்டுள்ளன!

இந்த விவரம் தெரிஞ்ச யாருமே 2023 ஆரம்பிக்கிற வரை.. புது Phone வாங்க மாட்டாங்க! என்னது அது?இந்த விவரம் தெரிஞ்ச யாருமே 2023 ஆரம்பிக்கிற வரை.. புது Phone வாங்க மாட்டாங்க! என்னது அது?

அதென்ன ஆப்கள்?

அதென்ன ஆப்கள்?

இஎஸ்இடி (ESET) சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, பஹமுட் ஏபிடி (Bahamut APT) என்கிற ஒரு சைபர் கிரிமினல்ஸ் க்ரூப் ஆனது - கடந்த ஜனவரி 2022 இல் இருந்து - ஆண்ட்ராய்டு பயனர்களை குறிவைத்து பல வகையான குற்றங்களை செய்து வருகிறது.

இதனொரு பகுதியாக இரண்டு போலியான விபிஎன் ஆப்கள் களமிறக்கி விடப்பட்டுள்ளன. அவைகள் சாஃப்ட் விபிஎன் (SoftVPN) மற்றும் ஓப்பன்விபிஎன் (OpenVPN) என்கிற பெயரின் கீழ் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது!

ரகசிய மெசேஜ்கள் உளவு பார்க்கப்படும்!

ரகசிய மெசேஜ்கள் உளவு பார்க்கப்படும்!

இந்த போலியான விபிஎன் ஆப்களின் முக்கிய நோக்கமே - உங்களை பற்றிய முக்கியமான தகவல்களை திருடுவதும் மற்றும் உங்கள் மெசேஜ்களை உளவு பார்ப்பதுமே ஆகும்.

குறிப்பாக - சிக்னல், வைபர் மற்றும் டெலிகிராம் போன்ற ஆப்களில் இருந்து காண்ட்காட்ஸ், எஸ்எம்எஸ் மெசேஜஸ், ரிஜிஸ்டர் செய்யப்பட்ட அழைப்புகள் மற்றும் சாட் மெசேஜ்களை உளவு பார்க்கும்!

இதென்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா? iPhone-ல் மட்டுமே இருக்கும் அம்சம்.. இப்போது Samsung போன்களில்!இதென்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா? iPhone-ல் மட்டுமே இருக்கும் அம்சம்.. இப்போது Samsung போன்களில்!

இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

வேறு வழியே இல்லை! நீங்கள் மிகவும் முக்கியமான தகவல்களை உங்கள் ஸ்மார்ட்போனில் வைத்துள்ளீர்கள் என்றால், மிகவும் ரகசியமான மெசேஜ்களை கொண்டுள்ளீர்கள் என்றால்.. மேற்கண்ட 2 போலியான விபிஎன் ஆப்களையும் உடனே டெலிட் செய்து விடவும்!

அதுமட்டுமின்றி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து எந்தவொரு ஆப்பை டவுன்லோட் / இன்ஸ்டால் செய்தாலும் கூட, அது ஒரு அதிகாரப்பூர்வமான செயலி மற்றும் அதிகாரப்பூர்வமான டெவலப்பரிடம் இருந்து அணுக கிடைக்கிறது என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும்!

கண்மூடித்தனமாக, வெறும் பெயரை மட்டுமே பார்த்து எந்தவொரு ஆப்பையும் இன்ஸ்டால் செய்ய வேண்டாம்!

Best Mobiles in India

English summary
2 fake VPN Apps found in Android Phones which extract sensitive user data and spy on messaging apps

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X