ஒரு வருட வேலிடிட்டி உடன் அதிக டேட்டா நன்மைகளை வழங்கும் 2 BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
ஜியோ,ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட மலிவு விலையில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் சலுகைகளைக் கூட வழங்குகிறது.
மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் இந்தியா முழுவதும் 4ஜி சேவைiயை அறிமுகம் செய்ய உள்ளது. அடுத்த ஆண்டு இந்நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு வருட வேலிடிட்டி உடன் அதிக டேட்டா நன்மைகளை வழங்கும் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் மொத்தமாக 600GB டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40 Kbps ஆகக் குறைக்கப்படும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர 30 நாட்களுக்கு பிஆர்பிடி ரிங்டோன், 30 நாட்களுக்கு ஈரோஸ் நவ் எண்டர்டெயின்மென்ட் மற்றும் 30 நாட்களுக்கு லோக்துன் கன்டென்ட் போன்ற அட்டகாசமான சலுகைகளை வழங்குகிறது ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம்.
பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா
நன்மை கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40 Kbps ஆகக் குறைக்கப்படும். குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர 30 நாட்களுக்கு பிஆர்பிடி ரிங்டோன், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் மற்றும் லோக்துன் கன்டென்ட்டிற்கான இலவச அணுகல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம்.

குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் மற்றும் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். மேலும் இப்போது இந்நிறுவனம் கம்மி விலையில் வழங்கும் சில அசத்தலான திட்டங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.
பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ரூ.347 திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் நன்மை மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை ஆகிய அனைத்து நன்மைகளும் உள்ளது.. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். இத்துடன் கூடுதல் நன்மைகளாக M/s OnMobile Global Ltd வழங்கும் Progressive Web APP (PWA) இல் Challenge Arena மொபைல் கேமிங் சேவையின் கூடுதல் நன்மையுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ரூ.299 திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக குறைகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள். குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பிரபலமான திட்டம் ஆகும்.
பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ரூ.298 திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக குறைகிறது. இதுதவிர EROS NOW பொழுதுபோக்கு சேவைக்கான இலவச அணுகலை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள்.

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ஆண்டு 4ஜி சேவையை அறிமுகம் செய்யும் போது பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications