Home
News

ஆதார்-ஒடிபி கொடுங்க.. இனி அது போதும்.. பேங்க் அக்கவுண்ட், பணம் அனுப்புவதில் புதிய மாற்றம்.. எந்த வங்கியில்?

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank - IOB) ஆனது அதன் 89வது நிறுவன தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆதார்-ஓடிபி அடிப்படையிலான அக்கவுண்ட் திறப்பு (Aadhaar OTP Account Opening) மற்றும் ஏபிஐ வங்கி வசதிகளை (API Banking Services) அறிமுகப்படுத்தி உள்ளது. தனிநபர் மற்றும் பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட வங்கி சேவைகளை வழங்குவதற்காக இந்த முயற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிமுகம் செய்துள்ள ஆதார் ஒடிபி அடிப்படையிலான கணக்கு திறக்கும் வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் வங்கி இணையதளம் மூலம் சிரமமின்றி சேமிப்பு கணக்கைத் திறக்க முடியும். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இந்த புதிய செயல்முறை, ஆர்பிஐ-யின் ஆதார் ஒடிபி அடிப்படையிலான இகேஒய்சி வழிகாட்டுதல்களை (RBI eKYC Guidelines) பின்பற்றுகிறது.

ஆதார்-ஒடிபி கொடுங்க.. இனி அது போதும்.. புதிய மாற்றம்.. எந்த வங்கியில்?

இதன்கீழ் இது பாதுகாப்பான மற்றும் தொந்தரவு இல்லாத அனுபவத்தை உறுதி செய்கிறது. குறைந்த ஆவணங்களுடன், ஒழுங்குமுறை விதிமுறைகளின்படி பரிவர்த்தனை வரம்புகளுக்கு உட்பட்டு, வாடிக்கையாளர்கள் விரைவாக ஒரு வங்கி கணக்கைத் தொடங்கலாம். இதேபோல, கார்ப்பரேட் வங்கியில் ஆட்டோமேஷனுக்கான வளர்ந்து வரும் தேவைக்கு உதவுவதற்காக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆனது ஏபிஐ (அப்ளிகேஷன் புரோகிராமிங் இன்டர்ஃபேஸ்) வங்கி சேவையையும் தொடங்கியுள்ளது.

இதன்கீழ் கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனைகள் மற்றும் உள்-வங்கி பரிமாற்றங்களை 'நிகழ்நேர' (Realtime) அடிப்படையில் நேரடியாக மேற்கொள்ள முடியும். இந்த ஏபிஐ பேங்கிங் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களை தானியங்கபடுத்த முடியும் மற்றும் மேம்படுத்த முடியும் என்று ஐஓபி நம்புகிறது. கார்ப்பரேட் அக்கவுண்டிங் அமைப்புகளுக்குள் தொடங்கப்படும் பரிவர்த்தனைகள் வங்கியின் முக்கிய வங்கி அமைப்புடன் நேரடியாக ஒருங்கிணைக்கப்பட்டு, தேவையற்ற தரவு உள்ளீடு மற்றும் கைமுறையான தலையீட்டின் தேவையை நீக்குகிறது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பயணத்தில் மற்றொரு மைல்கல்லைக் கொண்டாடும் போது, ​​தடையற்ற, பாதுகாப்பான மற்றும் வாடிக்கையாளர்களை மையமாக கொண்ட புதிய வசதிகளை அறிமுகம் செய்வதன் மூலம் எங்கள் கவனம் உறுதியாக உள்ளதை உறுதிப்படுத்துகிறோம். ஆதார் ஒடிபி அடிப்படையிலான அக்கவுண்ட் ஓப்பனிங் மற்றும் ஏபிஐ வங்கியின் அறிமுகம் டிஜிட்டல் மாற்றத்திற்கான எங்கள் அர்ப்பணிப்புடன் ஒத்துப்போகிறது என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தெரிவித்துள்ளது.

ஃபின்டெக் மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை கூகுள் பே ஆப் ஆனது தனது சேவையில், யுபிஐ வழியிலான பணபரிவர்த்தனை தொடர்பான முக்கிய மாற்றம் ஒன்றை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இனிமேல் கூகுள் பே ஆப்பில், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வழியிலான பில் பேமெண்ட்டுகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இரண்டு நபர்களுக்கு இடையேயான யுபிஐ வழியிலான பணபரிவர்த்தனை அல்லது ஒரு கடைக்காரருக்கு நீங்கள் செய்யும் வழக்கமான யுபிஐ பேமெண்ட்கள் ஆனது தொடர்ந்து இலவசமாக இருக்கும். ஆனால் கூகுள் பே ஆப் வழியாக டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பில் பேமெண்ட்களை செய்தால் - கட்டணம் வசூலிக்கப்படும்

கூகுள் பே அறிவித்துள்ள இந்த புதிய மாற்றங்களின்படி டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி செய்யப்படும் பில் பேமெண்ட்களுக்கு, அதன் இறுதி தொகையில் இருந்து 1% முதல் 5% வரை கட்டணம் வசூலிக்கப்படும். உதாணரணத்திற்கு உங்களுடைய மின் கட்டணம் ரூ.1,000 ஆக இருந்தால், அதில் 1 சதவீதம் (அதாவது ரூ.10) கட்டணமாக வசூலிக்கப்படும்.

கூகுள் பே அறிவித்துள்ள இந்த மாற்றங்கள் முற்றிலும் புதியவை அல்ல. பேடிஎம் (Paytm) மற்றும் போன்பே (PhonePe) போன்ற பிற யுபிஐ ஆப்களில் ஏற்கனவே இதுபோன்ற கட்டணங்கள் நடைமுறையில் உள்ளன. இவ்விரு ஆப்களுமே பேங்க் கார்டுகள் மூலம் செய்யப்படும் பில் பேமெண்ட்டுகளுக்கு இதே போன்ற கட்டணங்களை வசூலிக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
2 Big Changes in Indian Overseas Bank Aadhaar OTP Account opening API Banking Services Announced
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X