BSNL சேவையில் 2 முக்கிய மாற்றங்கள்.. இனி 1 ஆண்டு முழுக்க 2.6GB டேட்டா.. மாதம் ரூ.200 விலை குறைப்பு!
பிஎஸ்என்எல் (BSNL) என்கிற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் அதன் மொபைல் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளில் இரண்டு முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் கீழ் செயல்படும் இந்த டெலிகாம் ஆபரேட்டர் - பாரத் கனெக்ட் என்ற புதிய நீண்ட காலம் செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் மொபைல் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில், பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் சூப்பர் ஸ்டார் பிரீமியம் பிராட்பேண்ட் திட்டத்தின் மாதாந்திர விலையையும் குறைத்துள்ளது. இந்த மாற்றங்கள் லாங் வேலிடிட்டி ரீசார்ஜ் மற்றும் குறைக்கப்பட்ட செலவின் கீழ் கிடைக்கும் பிராட்பேண்ட் திட்டத்தை எதிர்பார்க்கும் பயனர்களை இலக்காக கொண்டு உள்ளன.

புதிய பாரத் கனெக்ட் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள்: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாரத் கனெக்ட் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.2,626 ஆகும். இது 365 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் கீழ், முழு செல்லுபடியாகும் காலத்திற்கும் ஒரு நாளைக்கு 2.6ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கும். டெய்லி டேட்டா லிமிட் தீர்ந்தவுடன், பிஎஸ்என்எல்-ன் கொள்கையின்படி டேட்டா வேகம் குறைக்கப்படும்
டேட்டா நன்மையை தவிர்த்து, இந்த திட்டத்தின் கீழ் - இந்தியா முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டெய்லி 100 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளும் கிடைக்கும். பாரத் கனெக்ட் திட்டம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் தெளிவுபடுத்தியுள்ளது. இது பிப்ரவரி 24 ஆம் தேதி வாய் மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்
சூப்பர் ஸ்டார் பிரீமியம் பிராட்பேண்ட் திட்டத்தின் விலை குறைப்பு: பிஎஸ்என்எல் அதன் சூப்பர் ஸ்டார் பிரீமியம் பிராட்பேண்ட் திட்டத்தின் விலையையும் திருத்தியுள்ளது. முன்னதாக ரூ.999 ஆக இருந்த மாதாந்திர கட்டணம் இப்போது ரூ.799 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 200எம்பிபிஸ் வரையிலான பிராட்பேண்ட் வேகத்தை வழங்குகிறது மற்றும் 5000GB மாதாந்திர டேட்டா வரம்புடன் வருகிறது.
நீண்ட கால சந்தாக்களை ஊக்குவிக்க, 12 மாதங்களுக்கு முன்கூட்டியே பணம் செலுத்தும் விருப்பத்தை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் 20 சதவீத தள்ளுபடியையும் வழங்குகிறது. இந்த தள்ளுபடி பயனுள்ள மாதாந்திர செலவை மேலும் குறைக்கிறது. திருத்தப்பட்ட விலை மற்றும் முன்கூட்டியே பணம் செலுத்தும் சலுகை மார்ச் 31, 2026 வரை பொருந்தும்.
சூப்பர் ஸ்டார் பிரீமியம் பிராட்பேண்ட் திட்டத்தில் Sony LIV, Lionsgate, JioHotstar, Epic On, Hungama, மற்றும் Shemaroo போன்ற பல ஓடிடி தளங்களுக்கான தொகுக்கப்பட்ட அணுகல்களும் உள்ளன. தற்போதுள்ள பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் சந்தாதாரர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாட்ஸ்அப் அடிப்படையிலான வாடிக்கையாளர் ஆதரவு சேனல் மூலம் சூப்பர் ஸ்டார் பிரீமியம் திட்டத்திற்கு மாறலாம்.
விரைவில் இல் அமலுக்கு வரும் சிஎன்ஏபி செயல்முறை: பிஎஸ்என்எல் சேவையில் கூடிய விரைவில் சிம் கார்டு தொடர்பான சிஎன்ஏபி செயல்முறை ஆண்டு முழு அளவில் அமலுக்கு வரவுள்ளது. இந்த செயல்முறையை - தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ஆன ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா மட்டுமின்றி, அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனமும் கூட பின்பற்றவுள்ளது.
சிஎன்ஏபி (CNAP) என்றால் என்ன? சிஎன்ஏபி என்றால் காலர் நேம் பிரசன்டேஷன் (Caller Name Presentation) என்பதின் சுருக்கம் ஆகும். இது - நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஸ்பேம் கால்கள், ஃபிஷிங் கால்கள் மற்றும் ஆள்மாறாட்ட அழைப்புகள் போன்ற நிகழ்வுகளால் ஏற்படும் பாதிப்புகளை நிவர்த்தி செய்யப்போகும் ஒரு செயல்முறை ஆகும்.
பெயர் குறிப்பிடுவது போலவே சிஎன்ஏபி என்பது - உங்களுக்கு தெரியாத மொபைல் நம்பரில் இருந்து ஒரு அழைப்பு வரும் போது, அந்த அழைப்பாளரின் சரிபார்க்கப்பட்ட பெயரையும் (Verified name), அவருடைய மொபைல் நம்பரையும் உங்களுக்கு காண்பிக்கும் ஒரு நெட்வொர்க்-நிலை அம்சம் (Network-level feature) ஆகும்.


Click it and Unblock the Notifications








