NOKIA பிராண்டட் போன்களின் ரசிகரா நீங்கள்.. அப்போ முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க!
நோக்கியா (Nokia) பிராண்டட் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் உரிமத்தை தன்வசம் கொண்டுள்ள எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனமானது, நோக்கியா ரசிகர்களின் மனதை புண்படுத்தும்படியான 2 வேலைகளை செய்துள்ளது. அப்படி என்ன செய்துள்ளது? 2024 இல் நோக்கியா போன்கள் அறிமுகமாகுமா? இதோ விவரங்கள்:
முதல் வேலை: எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது நோக்கியா மொபைல் (NOKIA MOBILE) என்கிற பெயரின் கீழ் உள்ள, நோக்கியா ஸ்மார்ட்போன்கள் மற்றும் நோக்கியா பீச்சர் போன்களுக்கான எக்ஸ் பக்கத்தின் (X Page) யூசர் நேமை @nokiamobile இல் இருந்து @HMDglobal ஆக மாற்றி உள்ளது.

இதை ஒரு சாதாரணமான நடவடிக்கையாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் 2,40,000 க்கும் மேற்பட்ட ஃபாலோவர்களை (பழைய மற்றும் புதிய நோக்கியா ரசிகர்களை) கொண்டுள்ள இந்த எக்ஸ் அக்கவுண்ட், கடந்த 2017 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. ஸ்மார்ட்போன் சந்தையில் நோக்கியாவின் மறுபிரவேசத்திற்காக காத்திருந்த நோக்கியா ரசிகர்களின் உற்சாகத்தின் காரணமாக இந்த பக்கம் மிகவும் விரைவில் பிரபலமடைந்தது.
அதாவது முழுக்க முழுக்க நோக்கியாவின் பழைய மற்றும் புதிய ரசிகர்களாலும்.. நோக்கியா என்கிற பிராண்ட் பெயராலும் வளர்ச்சி அடைந்த நோக்கியா மொபைல் எக்ஸ் பக்கத்தின் யூசர் நேமில் "நோக்கியா" என்கிற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. எச்எம்டி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை 2 முக்கியமான கேள்விகளை / சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

முதல் கேள்வி - இனிமேல் நோக்கியா கம்யூனிட்டிக்கு (Nokia community) என்ன ஆகும்? இரண்டாவது கேள்வி - சொந்த பிராண்டை (எச்எம்டி டிவைஸ்களை) அறிமுகப்படுத்திய பிறகு எச்எம்டி நிறுவனமானது நோக்கியா போன்களின் அறிமுகத்தில் (Nokia Phone Launch) எந்தளவு கவனம் செலுத்தும்?
இந்த கேள்விக்கான பதில்களை காலம் தான் சொல்ல வேண்டும். திடீரென ஒரு பிராண்ட் ஆக உருமாற, கடந்த ஆறு ஆண்டுகளாக நோக்கியா பெயரின்கீழ் இயங்கி வந்த எக்ஸ் பக்கத்தை தனதாக்கி கொள்வது நிச்சயம் ஒரு நல்ல நடவடிக்கை அல்ல. இதன் மூலம் எக்ஸ் அக்கவுண்ட்டை மட்டுமே ஆக்கிரமிக்க முடியும்; நோக்கியா ரசிகர்களை ஈர்க்க முடியாது.

எக்ஸ் தளத்தில் மட்டுமின்றி நோக்கியா இணையதளத்தில் (Nokia Website) மாற்றம் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதவாது நோக்கியா போன்களுக்கான நோக்கியா.காம் (Nokia.com) வலைத்தளமானது எச்எம்டி.காம் (HMD.com) ஆக மாறலாம். இதன்கீழ் ஒரிஜினல் எச்எம்டி டிவைஸ்களோடு (Original HMD Device) சேர்த்து கிளாசிக் நோக்கியா போன்கள் (Classic Nokia Phones) மற்றும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் (Nokia Smartphones) விற்பனை செய்யப்படலாம்.
போகிற போக்கை பார்த்தால்.. பிளாக்பெர்ரி ( Blackberry), எல்ஜி (LG) மற்றும் சோனி எரிக்சன் (Sony Ericsson) போன்களை போலவே நோக்கியா பிராண்டட் ஸ்மார்ட்போன்களும் கூட வரலாறாக மாறிவிடும் என்பது போல் தெரிகிறது. 2024 இல் முதலில் அறிமுகமாகும் நோக்கியா-பிராண்டட் போன்களின் பட்டியலில் ஃபீச்சர் போன்களே (Feature Phones) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நினைவூட்டும் வண்ணம், நோக்கியா நிறுவனத்திடம் இருந்து கடைசியாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் நோக்கியா ஜி42 (Nokia G42) மாடலாகும். எச்எம்டி நிறுவனமானது எந்தவொரு புதிய நோக்கியா பிராண்டட் ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்ய விரும்பவில்லை என்பது போல் தோன்றுகிறது. டாப், மிட் மற்றும் லோ-எண்ட் பிரிவுகளில் மிகவும் குறைவான நோக்கியா ஸ்மார்ட்போன்களே அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது,
வழக்கமாக புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் எம்டபுள்யூசி (MWC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (Mobile World Congress) நிகழ்வில் தான் அறிமுகமாகும். அதையே நாம் இந்தாண்டிலும் எதிர்பார்க்கலாம். அதாவது எம்டபுள்யூசி 2024 (MWC 2024) நிகழ்வின் போது சில புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அல்லது எச்எம்டி டிவைஸ்கள் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








