ரூ.18 முதல் BSNL நிறுவனம் வழங்கும் 1ஜிபி டேட்டா திட்டங்கள்! மிஸ் பண்ணாதீங்க.!
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதாவது மற்ற தனியார் நிறுவனங்களை விட கம்மி விலையில் அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

அதேபோல் இனி வரும் மாதங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை நாடு முழுவதும் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.18 திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.18 ரீசார்ஜ் திட்டம் ஆனது 2 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் வரம்பற்ற அழைப்புகள் மற்றும்1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.29 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.29 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 1ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.29 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 5 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.49 ரீசார்ஜ் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.49 ரீசார்ஜ் திட்டம் ஆனது 20 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் 1ஜிபி டேட்டா மற்றும் 100 நிமிட குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக உங்கள் சிம் கார்டை செயலில் வைத்திருக்க உதவும் இந்த அட்டகாசமான பிஎஸ்என்எல் ரூ.49 ரீசார்ஜ் திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.87 ரீசார்ஜ் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.87 ரீசார்ஜ் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் தான். குறிப்பாக இந்த திட்டம் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். மேலும் ஹார்டி மொபைல் கேம்ஸ் சேவையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.99 ரீசார்ஜ் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.99 திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 18 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் இல்லை. இருந்தபோதிலும் ரூ.99 ரீசார்ஜ் திட்டம் இலவச காலர் டியூன் (PRBT) நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.105 ரீசார்ஜ் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.105 ரீசார்ஜ் திட்டம் 22 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், இலவச ஹலோடியூன்ஸ் போன்ற நன்மைகள் கிடைக்கும். இதை தவிர எந்த சலுகைகளும் இந்த திட்டத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








