Home
News

சரியான நேரத்தில் கடலில் மூழ்கியவர்களின் உயிரை காப்பாற்றிய ட்ரோன்.! கல்லூரி மாணவருக்கு பாராட்டு

இப்போது வரும் சில புதிய புதிய தொழில்நுட்பங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். அதற்கு உதாரணமாக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கடந்த செவ்வாய் அன்று திரிசூரில் நாட்டிகா கடற்கரையில் காணாமல் போன படகு குறித்து மீட்புப் பணியாளர்கள் மற்றும் மீனவர்களை கவலைப்பட்டபோது, தேவாங் சுபில் எனும் 19 வயதான இன்ஜினியர் அவர்களை அணுகினார்.

சுபில் சொல்வதை யாரும் கேட்கத் தயாராக இல்லை

ஆனால் சுபில் சொல்வதை யாரும் கேட்கத் தயாராக இல்லை, அவர்களில் சிலர் அவரிடம் இது குழந்தை சம்மந்தப்பட்டது என்று கூறி, விளையாட்டு அல்ல என்று கூறி விலக்கினர்.

ட்டமன்ற உறுப்பினர் கீதா கோபி அவரது

மேலும் நாட்டிகா சட்டமன்ற உறுப்பினர் கீதா கோபி அவரது வேண்டுகோளைக் கேட்டபின் அவர் போலீஸ் மற்றும் மீட்பு அதிகாரிகளை அணுக உத்தரவளிக்க, சுபில் தனது ட்ரோனுடன் மீட்பு படகில் ஏற முடிந்தது.

 ட்ரோன் உதவியுடன் மங்கலாக படம் பிடித்தது என்று கூறினார்.

அதன்பின்னர் சுபில் கூறியது என்னவென்றால், இது எனது முதல் ஆழ்கடல் பயணம். எங்களது படகு கடற்கரையிலிருந்து 11 கடல் மைல் தொலைவில் சென்றபோது எனது ட்ரோனை வெளியிட்டேன். ஆரம்பத்தில் காற்று சிறுது சிக்கலை ஏற்படுத்தியது. ஆனாலும் 20 நிமிடங்களுக்கு பிறகு, எனது ட்ரோன் ஒரு மனிதனின் முதல் காட்சிகளை என் மொபைல்போனில் ட்ரோன் உதவியுடன் மங்கலாக படம் பிடித்தது என்று கூறினார்.

ம் கடலோர காவல்துறையினர் தங்கள் கப்பல்களில்

உடனே மீனவர்கள் மற்றும் கடலோர காவல்துறையினர் தங்கள் கப்பல்களில், கடலில் மூழ்கிய முதல் மனிதர் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு சென்று அவரை மீட்டனர். பின்பு அந்த இடத்தில் இருந்து சரியாக 300 மீட்டர் தொலைவில், அவர்கள் இருவரை கண்டுபிடித்து மீட்டனர். ஆனால் நான்காவது மனிதர் இடத்தை கண்டுபிடிக்க சுமார் 1 மணி நேரம் ஆனதாக கூறம் சுபில், நான்காவதுமனிதன் சோர்வுக்கப் பிறகு நீரில் மூழ்கும் விளிம்பில் இருந்தார்.

அந்த 4 பேரும் திருச்சூரில் உள்ள ஒரு

தற்சமயம் அந்த 4 பேரும் திருச்சூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக அவர்கள் கிட்டத்ததட்ட ஆறு மணி நேரம் கடலில் கழித்தனர், அவர்களில் ஒருவர் கரைக்கு ஒரு SOS-ஐ அனுப்ப முடிந்தது, இது மற்றவர்களை எச்சரித்தது.

லையிட்டு நான்கு

சரியான நேரத்தில் தலையிட்டு நான்கு உயிர்களைக் காப்பாற்றிய இந்த இன்ஜினியருக்கு பல்வேறு மக்கள் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் பெனலூருவின் கிறிஸ்ட் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு படிக்கும் பி.டெக் மாணவர் சுபில், கொரோனா தொற்றுநோய் காரணமாக கல்லூரி மூடப்பட்ட பின்னர் தனது சொந்த இடத்திற்கு திரும்பியிருந்தார். அதேபோல் தென்னிந்தியாவில் கடல்களில் இருந்து மீனவர்களை காப்பாற்ற ட்ரோன் கேமரா பயன்படுத்துப்படுவது இதுவே முதல் முறை என்று கேரள மீன்பிடி படகு ஆபரேட்டர் சங்கம் தெரிவித்துள்ளது.

மிகவும் துல்லியமாகவும் செயல்பட உதுவும்

மேலும் மாணவர் சுபில் கூறியது என்னவென்றால், இதுபோன்ற தேடல் நடவடிக்கைகளுக்காக பொதுவாக ஹெலிகாப்டர்கள் மற்றும் வேக படகுகளையே சேவையில் அழுத்துகிறோம். ஆனால் இது மிகவும் செலவு குறைந்ததாகும். அதேநேரத்தில் மிகவும் துல்லியமாகவும் செயல்பட உதுவும் என்று தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
19-year old boy uses drone in Kerala to help in rescue of 4 fishermen adrift at sea: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X