எலான் மஸ்க்கிடம் வேலையை காட்டிய இளைஞரின் அடுத்த டார்க்கெட் என்ன தெரியுமா?
எலான் மஸ்க் என்றதும் நினைவுக்கு வருவது டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் பெயர்கள்தான். இந்த நிறுவனங்களை இவர் வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல பல தோல்விகளை கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எலான் மஸ்க்கின் தனி விமானத்தை டிராக் செய்து பரபரப்பை ஏற்படுத்திய ஜாக் ஸ்வீனி இப்போது ரஷ்ய கோடீஸ்வரர்களின் விமானங்களைக் கண்காணிக்க தனியாக ட்விட்டர் ஐடி ஒன்றை உருவாக்கியுள்ளார் என்று தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது எலான் மஸ்க்கின் தனி விமானம் எங்கெல்லாம் செல்கிறது என்ற விவரத்தை டிராக் செய்து ட்விட்டரில் பதிவிட்டு பரபரப்பை ஏறடுத்தியவர்தான் 19 வயதான கல்லூரின மாணவர் ஜாக் ஸ்வீனி. அதேபோல் டிராக் செய்வதை நிறுத்த எலான் மஸ்க் தரப்பிலிருந்து ஆஃ;பர்கள் கொடுக்கப்பட்டன என்றும், ஆனால் அவர் அதை நிராகரித்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜாக் ஸ்வீனி தனது அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, ரஷ்ய நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர்களின் விமானங்கள் எங்கெல்லாம் செல்கிறது என்ற முழு விவரத்தையும் கண்காணிக்க தனியாக ஒரு ட்விட்டர் ஐடி உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த மாணவர் ஜாக் ஸ்வீனி, இந்த தன்னலக்குழுக்கள் வைத்திருக்கும் விமானங்கள் முற்றிலும் வேடிக்கையானவை. குறிப்பாக மற்ற ஜெட் விமானங்களுடன் ஒப்பிடும்போது அவர்களின் விமானங்கள் பெரியவை என்று கூறினார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

அதேபோல் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 7-வது நாளாக போர் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ரஷ்யாவின் படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வை குறிவைத்து தாக்குதல்கள் நடத்திவந்த நிலையில், தற்போது உக்ரைனின் மற்றொரு பெருநகரமான கார்கிவ்-ல் ரஷ்யப் படையின் வெடிகுண்டு மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

உக்ரைனுக்குள் படையெடுத்த ரஷ்யா முதல் வேலையாக தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்அந்த நாட்டின் இணைய சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. மிகவும் பின்னடைவை சந்தித்த உக்ரைன் நாட்டிற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் உதவி செய்த முன் வந்தார். அதாவது செயற்கைக்கோள் வழி வழங்கப்படும் 'ஸ்டார் லிங்க்' இணைய சேவையை உக்ரைன் நாட்டிற்கு எலான் மஸ்க் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் பின்னடைவை சந்தித்த உக்ரைன் நாட்டிற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் உதவி செய்த முன் வந்தார். அதாவது செயற்கைக்கோள் வழி வழங்கப்படும் 'ஸ்டார் லிங்க்' இணைய சேவையை உக்ரைன் நாட்டிற்கு எலான் மஸ்க் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக ரஷிய படைகள் ஆக்கிரமிக்க முடியாத அண்டை நாடுகளின் எல்லைகளில் ரீசீவர் முனையங்களை நிறுவி, செயற்கைக்கோள் மூலமாக அலைகற்றை உள்வாங்கி,அவற்றை உக்ரைக்கு வழங்குவதே தங்களது திட்டம் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் படைகள் எந்ததாக்குதலை நடத்தினாலும் ஸ்டார்லிங் இணைய சேவை நிறுத்த முடியாது என்று கூறியுள்ளார் எலான் மஸ்க்.

அதேபோல் உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை கண்டித்து ரஷ்யாவில் ஆப்பிள் போன்கள் விற்பனையை தற்காலிமாக நிறுத்துவதாக நிறுவனம் அறிவித்திருக்கிறது. ரஷ்யாவின் ஆன்லைன் ஸ்டோர்களிலும் ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications