Home
News

பப்ஜி கேம் விளையாட அனுமதிக்காத பெற்றோர் & சகோதரியைக் கொன்ற மகன்.!

ஒரே குடும்பத்தை சேர்ந்த அப்பா, அம்மா மற்றும் சகோதரியை கொன்ற குற்றத்திற்காக அதே குடும்பத்தை சேர்ந்த 19 வயது மகன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

புது டெல்லி : ஒரே குடும்பத்தை சேர்ந்த அப்பா, அம்மா மற்றும் சகோதரியை கொன்ற குற்றத்திற்காக அதே குடும்பத்தை சேர்ந்த 19 வயது மகன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பப்ஜி கேம் விளையாட அனுமதிக்காத பெற்றோர் & சகோதரியைக் கொன்ற மகன்.!

தனது சொந்த பெற்றோர் மற்றும் சகோதரியை கொன்றதுக்கு, அவர் சொன்ன கரணம் தான் அனைவரையும் உறையச் செய்துள்ளது.

 பப்ஜி கேம்

பப்ஜி கேம்

உலக அளவில் தற்பொழுது இளைஞர்கள் அதிகம் விளையாடும் மொபைல் கேம்களில் பப்ஜி கேம் தான் முதலிடம். இந்த பப்ஜி கேம் இல், நீங்கள் ஒரு தீவில் 100 வீரர்களுடன் போர் செய்து, அவர்களைக் கொன்று, வெற்றி பெற வேண்டும். 100 பேரில் இறுதியில் உயிருடன் இருக்கும் வீரனே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இப்படி இந்த பப்ஜி கேம்மை தான், அந்தச் சிறுவன் விளையாடி வந்திருக்கின்றான். இந்த ஆண்டில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்டு விளையாடப்பட்ட கேம் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் ஆப் - பப்ஜி குரூப்

வாட்ஸ் ஆப் - பப்ஜி குரூப்

பப்ஜி கேம்மிற்கு அடிமையான சுராஜ், மெஹ்ருளி பகுதில் தனது 10 நண்பர்களுடன் வாடகை அறை ஒன்றை எடுத்து இந்த பப்ஜி கேம்மை விளையாடி வந்திருக்கிறார். இந்த நண்பர்களுக்கென தனி வாட்ஸ் ஆப் குரூப் ஒன்றும் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆவேசம் அடைந்த பெற்றோர்

ஆவேசம் அடைந்த பெற்றோர்

சுராஜ் நண்பர்களுடன் இணைந்து கல்லூரிக்கு செல்லாமல், வாடகை அறையில் கேம் விளையாடிவந்துள்ளார். வீட்டிலும் அதையே தொடர்ந்து செய்து வந்துள்ளார். படிப்பில் கவனம் செலுத்தாமல் முழு நேரமும் விளையாடிக் கொண்டிருந்த சுராஜ்ஜை ஆவேசம் அடைந்த பெற்றோர் சில தினங்களாக திட்டி வந்துள்ளனர்.

கத்தியால் குத்தி கொலை

கத்தியால் குத்தி கொலை

தனது சந்தோஷத்தில் பெற்றோர் குறுக்கிடுவதை விரும்பாத சுராஜ், நேற்று இரவு தந்தை, தாய் மற்றும் அவரின் சகோதரி உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, காவல் நிலையத்தில் மர்ம நபர்கள் வீடு புகுந்து தன் பெற்றோரை கொன்றுவிட்டதாகப் புகார் அளித்துள்ளார்.

கைது

கைது

சுராஜின் நடத்தையில் சந்தேகம் அடைந்த போலீசார், கிடுக்குபிடி விசாரணை நடத்திய பொது சுராஜ், தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். கேம் விளையாட இடையூறு இருந்ததற்கும் தனது சந்தோஷத்திற்கு இடையூறாக இருந்ததார்கவும் பெற்றோர் மற்றும் சகோதரியை கொன்றதாக வாக்குமூலம் கொடுத்த சுராஜ்ஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
19-year-old Delhi Boy Who Killed Parents and Sister Was Addicted to Online Game PUBG : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X