BSNL-க்கு டாட்டா.. 6 மாசத்துக்கு 1 ரீசார்ஜ்.. மாதாந்திரம் ரூ.174-க்கு முடிஞ்சது.. Vodafone இறக்கிய திட்டம்!
அடிமட்ட திட்டத்துல நம்மள மிஞ்சிருவான் போலயே என்று பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் நினைக்கும்படியான விலைக்கு 180 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை வோடபோன் ஐடியா (Vodafone Idea) கொடுக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா சலுகையை மாதத்துக்கு வெறும் ரூ.174 விலைக்கு கொடுத்து கஸ்டமர்களை குளிர செய்துள்ளது. பிஎஸ்என்எல் 4ஜி சேவையை முழுமையாக வழங்காத நேரத்தில் வோடபோன் ஐடியா அதை செய்து இந்த திட்டத்தை கொடுக்கிறது. இந்த வோடபோன் ஐடியா திட்டத்தின் விவரங்கள் இதோ.
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bhari Airtel) மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களின் கட்டண உயர்வை தொடர்ந்து பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், மூன்றாவது இடத்துக்கு போட்டிபோட்டு வருகிறது. இதனால், வோடபோன் ஐடியா நிறுவனம், பிஎஸ்என்எல்லுக்கு நிகராக திட்டங்களை கொடுக்க வேண்டி இருக்கிறது.

வோடபோன் ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Rs.1049 Prepaid Plan): இந்த 180 நாட்கள் வேலிடிட்டி திட்டமானது அடிமட்ட விலையில் கிட்டத்தட்ட பிஎஸ்என்எல்லுக்கு நிகராக இருக்கிறது. ஆனால், அந்த நிறுவனத்தைவிட 4ஜி சேவையில் பட்டையை கிளப்புகிறது. இந்த திட்டமானது, அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை கொடுக்கிறது.
இது கிட்டத்தட்ட வாய்ஸ் கால்களுக்காக கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், வாய்ஸ் கால்கள் சலுகைகள் குறையில்லாமல் கிடைக்கும். ஆனால், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் போன்ற மற்ற சலுகைகள் கஸ்டமர்களின் தேவைக்கு ஏற்ப பேக் செய்யப்பட்டிருக்கும். ஆகவே, 12 ஜிபி டேட்டா மற்றும் 1800 எஸ்எம்எஸ்கள் வருகிறது.
ஆனால், வாய்ஸ் கால்கள் அப்படியில்லை, 180 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது என்றால், அந்த நாட்கள் முழுவதுக்கும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) கால்கள் முதல் எஸ்டிடி (STD) வரையில் பண்ணலாம். ரோமிங் வாய்ஸ் கால்களையும் (Roaming Voice Calls) வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். 12 ஜிபி டேட்டாவுக்கு பிறகு வவுச்சர்களை நீங்கள் பயன்படுத்தலாம்.
இது 4ஜி வேகத்தில் டேட்டாவை கொடுக்கும். அதே நேரத்தில் அடிமட்ட விலைக்கும் கிடைக்கும். ஆனால், பிஎஸ்என்எல்லில் இந்த 4ஜி டேட்டா வவுச்சரை அனைத்து மாநிலங்களிலும் எதிர்பார்க்க முடியாது. ஆகவே, இது பெஸ்ட் திட்டமாகவே இருக்கிறது. இந்த திட்டத்துக்கு மற்றொரு வரவேற்பு இருக்கிறது. இதற்கான மாதாந்திர செலவு அடிமட்டத்தில் இருக்கிறது.
அதாவது, மாதத்துக்கு ரூ.174 செலவில் மேற்கண்ட வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை பெற்று கொள்ளலாம். இப்படி அதிகப்படியான சலுகைகளை கம்மி விலைக்கு பெற்று கொள்ளலாம். இதேபோல ஒரு வருடத்துக்கு திட்டம் இருக்கிறதா பாஸ் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு ரூ.1999 விலைக்கு வருடாந்திர திட்டம் இருக்கிறது.
இந்த திட்டத்துக்கும் வாய்ஸ் கால்களுக்கு பஞ்ச மில்லாமல் இருக்கிறது. டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் முந்தைய திட்டத்தை போலல்லாமல், கூடுதலாக கிடைக்கிறது. ஆகவே, இந்த ரூ.1999 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 24 ஜிபி டேட்டா மற்றும் 3600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. இது 365 நாட்கள் வேலிடிட்டிக்கு பொருந்தும்.
ஆகவே, முழுவதும் பயன்படுத்திவிட்டால், கூடுதல் ரீசார்ஜ் தேவைப்படும். ஆனால், வாய்ஸ் கால்களுக்கு அப்படி கிடையாது. வருடம் முழுவதும் அன்லிமிடெட் சலுகையில் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள் கிடைக்கும். இந்த 2 ப்ரீபெய்ட் திட்டங்களும் 6 மாதங்கள் மற்றும் 12 மாதங்கள் சலுகையில் மிகவும் மலிவான விலைக்கு கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








