யூஸ் பண்ணாத Vodafone சிம் இருக்கா? கொடுத்து வச்சவங்க நீங்க.. 180 நாட்களுக்கு ஒரே ஜாலி தான்!
கடந்த 2022 இல் இருந்தே வோடாபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது கட்டுப்படுத்த முடியாத அளவில் வாடிக்கையாளர்ளை இழந்து வருகிறது. கடந்த 2023 பிப்ரவரியில் வெளியான ஒரு அறிக்கையின்படி, 2022 இல் மட்டுமே இந்நிறுவனம் 2 கோடி ஆக்டிவ் யூஸர்களை (Active Users) இழந்துள்ளது.
அந்த 2 கோடி கஸ்டமர்களில் நீங்களும் ஒருவரென்றால்.. வோடாபோன் ஐடியாவின் சேவைகள் திருப்திகரமான இல்லை, நல்ல-நல்ல ரீசார்ஜ் திட்டங்கள் (Recharge Plans) இல்லை என்கிற காரணத்தால் உங்கள் வோடாபோன் சிம் கார்ட்டை பயன்படுத்துவதை நிறுத்தி இருந்தால்.. உடனே அந்த சிம் கார்ட்டை (SIM Card) தூசித்தட்டி வெளியே எடுங்கள்.

ஏனென்றால் விஐ (Vi) நிறுவனம் நம்ப முடியாத வேலிடிட்டியுடன் ஒரு அருமையான புதிய பிளானை அறிமுகம் செய்துள்ளது. அதென்ன திட்டம்? மீண்டும் வோடாபோன் ஐடியாவின் சேவைக்குள் நுழையும் அளவிற்கு இது வொர்த் ஆன ரீசார்ஜ்-ஆ? இதன் கீழ் என்ன நன்மைகள் கிடைக்கும்? இந்த திட்டத்தின் வேலிடிட்டி என்ன? இதோ விவரங்கள்.
வோடாபோன் ஐடியா ரூ.549 க்கு ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை (New Prepaid Plan) அறிமுகம் செய்துள்ளது. சத்தமின்றி அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டம் தற்போது நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பு என்னவென்றால், இதன் வேலிடிட்டி தான்!
ரூ.549 திட்டமானது மொத்தம் 180 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. ஆனால் இந்த திட்டத்தின் கீழ் வெறும் 1 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். அந்த 1ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு கூடுதல் டேட்டாவை பெற நீங்கள் நிறுவனத்தின் டேட்டா வவுச்சர்களை (Data Vouchers) ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும்.
வாய்ஸ் கால் (Voice Call) நன்மைகளை பொறுத்தவரை, இந்த திட்டத்தின் கீழ் ரூ.549 மதிப்பிலான டால்க் டைம் (Talk time) கிடைக்கும். அதன் கீழ் நேஷனல் (National) மற்றும் லோக்கல் (Local) அழைப்புகளுக்கு வினாடிக்கு 2.5 பைசா என்கிற கட்டணம் வசூலிக்கப்படும்.
அதாவது இந்த திட்டம் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் நன்மைகளை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத, வெறுமனே 180 நாட்கள் என்கிற மிகநீளாமான வேலிடிட்டியை (Long Valitidy) மட்டுமே விரும்பும் நுகர்வோருக்கானது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், பயன்படுத்தப்படாத விஐ சிம் கார்ட்டை ஆக்டிவ் ஆக வைத்திருக்க விரும்புபவர்களுக்கு இதுவொரு சூப்பர் பிளான்!
ரூ.549 திட்டத்தின் எஸ்எம்எஸ் (SMS) நன்மைகளை பொறுத்தவரை, உங்களுக்கு எதுவுமே கிடைக்காது; அதாவது இதன் கீழ் எந்த வகையான எஸ்எம்எஸ் நன்மைகளும் இல்லை. இருப்பினும் டிராய் (TRAI) உத்தரவின்படி, இந்த திட்டத்தின் கீழ் போர்ட்-அவுட் எஸ்எம்எஸ்கள் (Port-out SMS) கிடைக்குமா என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை.
அறியாதோர்க்கு, எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்காத திட்டத்தை ரீசார்ஜ் செய்து இருந்தாலும் கூட வாடிக்கையாளர்களுக்கு 1900 என்கிற எண்ணுக்கு போர்ட் அவுட் எஸ்எம்எஸ்களை அனுப்புவதற்கான ஆதரவு கொடுக்கப்பட வேண்டும் என்று, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான (Telecom Regulatory Authority of India) டிராய், டெலிகாம் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications