Home
News

என்ன இப்படி ஆகிடுச்சு.. அறிமுகமான மறுநாளே OnePlus 13, OnePlus 13R மீது Free Replacement அறிவிப்பு... ஏன்?

அறிமுகமான வேகத்தில் ஒன்பிளஸ் 13 5ஜி (OnePlus 13 5G) மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் 5ஜி (OnePlus 13R 5G) ஆகிய 2 மாடல்களை உள்ளிட்ட ஒன்பிளஸ் 13 சீரிஸ் (OnePlus 13 Series) ஸ்மார்ட்போன்களுக்கான இலவச ரீப்ளேஸ்மென்ட் கொள்கையை, ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால் இது 2024 பிப்ரவரி 13 ஆம் தேதிக்கு முன் ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒன்பிளஸ் 13 அல்லது ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன்களில் ஏதேனும் வன்பொருள் சிக்கல்கள் இருந்தால், அவைகளை வாங்கிய 180 நாட்களுக்குள் தகுதியான பயனர்கள் இலவச ரீப்ளேஸ்மென்ட்டை பெறுவார்கள் என்று ஒன்பிளஸ் நிறுவனம் கூறியுள்ளது.

OnePlus 13, OnePlus 13R மீது Free Replacement அறிவிப்பு! ஏன்?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் ஆனது கடந்த காலங்களில், டிஸ்ப்ளேவில் ஏற்படும் க்ரீலைன் வன்பொருள் சிக்கலை சந்தித்துள்ளன. அதன் விளைவாகவே ஒன்பிளஸ் நிறுவனம் அதன் லேட்டஸ்ட் ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன்களின் மீது இலவச ரீப்ளேஸ்மென்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இலவச ரீப்ளேஸ்மென்ட் பாலிசி ஆனது ஒன்பிளஸ் 13 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே பொருந்தும். குறிப்பிட்ட காலகட்டத்தில் (அதாவது 2025 பிப்.13) வாங்கிய வேறு எந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனிற்கும் இந்த இலவச ரீப்ளேஸ்மென்ட் பாலிசி பொருந்தாது என்பதை கவனத்தில் கொள்ளவும். இதுதவிர்த்து ஆறு மாதங்கள் அல்லது 180 நாட்களுக்குப் பிறகு, பயனர்கள் டிவைஸ் ரீப்ளேஸ்மென்ட்டை கவரேஜை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கலாம்

இருப்பினும், அதற்கு வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட தொகையை கட்டணமானக செலுத்த வேண்டி இருக்கும். ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனிற்கான டிவைஸ் ரீப்ளேஸ்மென்ட்டை கவரேஜை நீட்டிக்க ரூ.2,599 செலவாகும். இதேபோல ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனிற்கான டிவைஸ் ரீப்ளேஸ்மென்ட்டை கவரேஜை நீட்டிக்க ரூ.2,299 செலவாகும்.

ஒட்டுமொத்தமாக ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன்களை வாங்கும் பயனர்களுக்கு மொத்தம் ஒன்பது மாத கவரேஜ் மற்றும் மன அமைதி கிடைக்கும். ஒன்பது மாதங்களுக்கு பிறகு, ஏதேனும் கிரீன் லைன் சிக்கல் ஏற்பட்டால், டிஸ்பிளே மாற்று உத்தரவாதம் கிடைக்கும் என்பதையும் நினைவில் கொள்ளவும். ஏனென்றால் ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் தான், கிரீன் லைன் சிக்கல்களை எதிர்கொள்ளும் ஸ்மார்ட்போன்களுக்கு வாழ்நாள் இலவச உத்தரவாதத்தை அறிவித்து இருந்தது.

ஒன்பிளஸ் 13 விலை மற்றும் விற்பனை: 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனின் அசல் விலை ரூ.69,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ரூ.5000 பேங்க் கேஷ்பேக் ஆபருக்கு பின்னர் இது ரூ.64,999 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷனின் அசல் விலை ரூ.76,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, ரூ.5000 பேங்க் கேஷ்பேக் ஆபருக்கு பின்னர் ரூ.71,999 க்கு வாங்க முடியும்.

கடைசியாக 24ஜிபி ரேம் + 1டிபி ஆப்ஷனின் அசல் விலை ரூ.89,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ரூ.5000 பேங்க் கேஷ்பேக் ஆபருக்கு பின்னர் இது ரூ.84,999 க்கு வாங்க கிடைக்கும். இந்த மூன்று வேரியண்ட்களுமே வருகிற 2025 ஜனவரி 10 ஆம் தேதியன்று திறந்த விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன. கூடவே 3 வேரியண்ட்கள் மீதும் ரூ.7000 வரையிலான எக்ஸ்சேன்ஜ் போனஸும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 13ஆர் விலை மற்றும் விற்பனை: 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.42,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.49,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்போன் ஆஸ்ட்ரெயில் ட்ரையல் (Astral Trail) மற்றும் நெபுலா நோயர் (Nebula Noir) ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஜனவரி 10 ஆம் தேதி முதலும், ஒன்பிளஸ் 13ஆர் ஜனவரி 13 ஆம் தேதி முதலும் விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
180 Days Free Replacement announced on OnePlus 13 OnePlus 13R
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X