விரைவில் டிக்கெட் ஹவுஸ் ஃபுல்: 18 வயது இளைஞர், 82 வயது பெண், தம்பி மார்க் உடன் விண்ணுக்கு செல்லும் பெசோஸ்!

|

ப்ளூ ஆர்ஜின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மேற்கொள்ள இருக்கும் விண்வெளி பயணத்தில் 18 வயது இளைஞரான ஆலிவ் டையமென் என்பவரும் இணைந்துள்ளார். விண்கலத்துக்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டது. சுமார் 28 மில்லியன் டாலர் மதிப்புடைய இந்த ஏலத்தில் 18 வயதுடைய வாடிக்கையாளர்கள் தேர்வு செய்திருப்பதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆலிவரை வரவேற்க பெருமைப்படுகிறோம்

ஆலிவரை வரவேற்க பெருமைப்படுகிறோம்

ஏலத்தின் வெற்றியாளருக்கு கிளப் ஃபார் தி ஃபியூச்சர் தாராளமாக ஆதரவளித்தமைக்கு நன்றி தெரிவிக்கிறோம். நியூ ஷெப்பர்டில் தங்களுடன் பறக்கு ஆலிவரை வரவேற்க பெருமைப்படுகிறோம் என ப்ளூ ஆர்ஜின் தலைமை நிர்வாக அதிகாரி பாப் ஸ்மித் கூறினார். 18 வயது ஆலிவரை தேர்ந்தெடுத்ததன் மூலம் புதிய தலைமுறை மக்களை அவர் பிரதிநிதித்துவப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நியூ ஷெப்பர்டின் வணிக நடவடிக்கையை இது குறிப்பதாகவும் கூறப்படுகிறது.

விண்வெளிக்கு செல்வதில் மகிழ்ச்சி

ப்ளூ ஆர்ஜின் குழுவினர் விமானத்தில் விண்வெளிக்கு சென்று சேருவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என ஆலிவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஜெஃப் பெசோஸ், அவரது சகோதரர் மார்க் பெசோஸ் மற்றும் ஃபங்க் ஆகியோருடன் ஆலிவர் விண்ணுக்கு பயணிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆலிவரிடம் இருந்து பெறப்பட்ட தொகை குறித்த விவரத்தை நிறுவனம் பகிரவில்லை. விண்கலம் வரும் 20 ஆம் தேதி அமெரிக்கா டெக்ஸாஸின் மேற்கு பாலைவனப்பகுதியில் இருந்து ராக்கெட் மூலம் பறக்க இருக்கிறது.

82 வயதான பெண் பைலட்

82 வயதான பெண் பைலட்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உடன் விண்வெளிக்கு அவரது சகோதரரான மார்க் பயணிக்க இருக்கிறார். மேலும் இவர்களுடன் 82 வயதான பெண் பைலட் விண்வெளிக்கு பயணிக்க உள்ளார். இவர் 1961 முதல் 1963 ஆம் ஆண்டு வரை நாசாவில் விண்வெளி வீராங்கனை பயிற்சியை முடித்தவர். இவரது பாலினம் காரணமாக விண்வெளி வீரர் ஆக மறுத்துவிட்டார். அமெரிக்க ராணுவத் தளத்திலும், தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்திற்கும் ஏர் பாதுகாப்பு இன்ஸ்பெக்டராக இருந்தார். முதல் பெண் பயிற்றுவிப்பாளர் என்ற பெருமையையும் பெற்றார். இவர்களுடன் தற்போது 18 வயதான ஆலிவர் இணைந்துள்ளார். பயணிகள் விண்வெளியில் செலவழிக்கும் நான்கு நிமிடங்கள் உட்பட 10 நிமிடங்கள் பயணம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

கர்மன் கோட்டிற்கு மேலே நான்கு நிமிடங்கள்

கர்மன் கோட்டிற்கு மேலே நான்கு நிமிடங்கள்

கர்மன் கோட்டிற்கு மேலே நான்கு நிமிடங்கள் செலவழிக்க இருக்கின்றனர். கர்மன் கோடு என்பது பூமியின் வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையில் அங்கீகரிக்கப்பட்ட எல்லையை குறிக்கிறது. புதிய ஷெப்பர்ட் ராக்கெட் மற்றும் காப்ஸ்யூல் காம்போ ஆறு பயணிகளுடன் பூமியில் இருந்து 62 மைல்-க்கு மேலாக பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐந்து வயது முதல் கனவு

ஐந்து வயது முதல் கனவு

ஐந்து வயது முதல் விண்வெளிக்கு பயணிக்க கனவு கண்டேன். விண்வெளியில் இருந்து பூமியை பார்க்க வேறுவிதமான உருவத்தை கொடுக்கிறது. நான் இதில் பறக்க விரும்புகிறேன். காரணம் இது வாழ்நாள் முழுவதும் செய்ய விரும்பிய ஒரு விஷயம் ஆகும் என ஜெஃப் பெசோஸ் குறிப்பிட்டார்.

குறைந்த செலவில் விண்வெளி பயணம்

குறைந்த செலவில் விண்வெளி பயணம்

ப்ளு ஆர்ஜின் என்னும் அமெரிக்க தனியார் நிறுவனம், குறைந்த செலவில் விண்வெளிக்குப் பயணிகளை அழைத்துச் செல்லும் நோக்கத்துடன் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமையிடம் வாசிங்டன்னில் உள்ள கென்ட் நகரில் அமைக்கப்பட்டது. இந்த நிறுவனத்தை அமேசான் நிறுவனரான ஜெஃப் பெஜோஸ் 2000 ஆம் ஆண்டில் தொடங்கினார்.

Best Mobiles in India

English summary
18 Year Young to be the First Paying Customer to Travelling Space With Jeff Bezos

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X