மேட்டர் சீரியஸ்.. ஆபாச உள்ளடக்கம்.. 18 OTT.. 10 மொபைல் ஆப்ஸ்.. 57 கணக்குகள் முடக்கம்.. அதிரடி காட்டிய I&B..
இந்தியாவில் அதிரடியாக 18 OTT தளங்கள், 10 ஸ்மார்ட்போன் மொபைல் ஆப்ஸ்கள், இதில் 7 ஆண்ட்ராய்டு ஆப்ஸ் மற்றும் 3 ஐபோன் ஆப்ஸ்கள், 57 சோசியல் மீடியா கணக்குகளை இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் நீக்கியுள்ளது.
18 OTT Blocked in India: இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் (I&B) அதிரடியாக இன்று ஒரே நேரத்தில் ஒரு மாபெரும் நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தியாவில் ஒளிபரப்பாகும் 18 ஓவர்-தி-டாப் (OTT) தளங்களின் சேவையை நிரந்தரமாக துண்டித்துள்ளது. இந்த OTT தளங்களில் ஆபாசமான மற்றும் மோசமான உள்ளடக்கங்களை ஒளிபரப்படுவதாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆபாச தகவலை ஒளிபரப்பிய OTT தளங்கள் ஆப்பு வைத்த இந்தியா: பொறுத்தது போதும் பொங்கி ஏழு, என்ற விதத்தில் OTT தளங்கள் என்ற போர்வையின் கீழ் ஆபாசத்தையும் துஷ்பிரயோகத்தையும் ஊக்குவிப்பதைத் தவிர்ப்பதற்கான இந்த தளங்களின் பொறுப்பை I&B நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் வலியுறுத்தலின் பெயரில் நடந்துள்ளது.
18, 10, 57 சேனல்கள் மற்றும் அக்கௌன்ட் அதிரடி முடக்கம்: மார்ச் 12 அன்று அமைச்சர் அனுராக் தாக்கூர் முதன் முதலில் அறிவித்த நடவடிக்கையின் விளைவாக, 18 OTT இணையதளங்கள், 10 மொபைல் ஆப்ஸ்கள், இதில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஏழு ஆப்ஸ்களையும் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து மூன்று மொபைல் ஆப்ஸ்களையும் I&B நீக்கியுள்ளது. இத்துடன் 57 சமூக ஊடக கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
தகவல் தொழில்நுட்பச் சட்டம்: இந்திய அரசின் தொடர்புடைய அமைச்சகங்கள், துறைகள் மற்றும் ஊடகம், பொழுதுபோக்கு, பெண்கள் உரிமைகள் மற்றும் குழந்தை உரிமைகள் ஆகியவற்றில் உள்ள வல்லுநர்களுடன் கலந்தாலோசித்ததைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இன் விதிகளின் கீழ் இந்த முடிவு செயல்படுத்தப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தடுக்கப்பட்ட தளங்களின் பட்டியலில் ட்ரீம்ஸ் ஃபிலிம்ஸ், வூவி, யெஸ்மா, அன்கட் அட்டா மற்றும் பிற தளங்களின் சேனல்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஆபாச உள்ளடக்கங்களுக்கு தடை: ஆபாசம், பாலியல் செயல்கள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கும் உள்ளடக்கங்கள் இந்த சேனல்களில் காணப்பட்டதால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 மற்றும் 67A, ஐபிசியின் பிரிவு 292 மற்றும் பெண்களை அநாகரீகமான பிரதிநிதித்துவம் (தடை) சட்டம், 1986 இன் பிரிவு 4 ஆகியவற்றை மீறும் இத்தகைய உள்ளடக்கம் ஒளிபரபரப்பட்டதன் பெயரில் முடக்கப்பட்டுள்ளது.
1 மில்லியன் டவுன்லோட் இருந்த ஆப்ஸ்: நீக்கப்பட்ட OTT செயலிகளில் ஒன்று, சுமார் 1 கோடிக்கும் அதிகமான டவுன்லோடுகளை பெற்றிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இரண்டு ஆப்ஸ்கள் Google Play Store இல் 50 லட்சத்திற்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம், யூடியூப் போன்ற தளங்களில் 32 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களின் ஒட்டுமொத்த சுப்ஸ்கிரைப்பர்கள் கொணட சேனல்களும் அதனுடன் தொடர்புடை அக்கௌன்ட்களும் முடக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அதிரடி நடவடிக்கை: இந்தியாவின் 54வது சர்வதேச திரைப்பட விழாவில் வெப் சீரிஸிற்கான தொடக்க OTT விருது அறிமுகம் மற்றும் OTT இயங்குதளங்களுடனான ஒத்துழைப்பு போன்ற முன்முயற்சிகள், IT விதிகள், 2021 இன் கீழ் சுய-ஒழுங்குமுறையை வலியுறுத்தும் லைட்-டச் ஒழுங்குமுறை கட்டமைப்பை நிறுவுவதுடன், இந்த உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தியாவில் இனி ஆபாசமான வீடியோக்களை ஒளிபரப்ப தடைவிதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








