ஸ்கூல் கம்ப்யூட்டரை 'ஹேக்' செய்து, தம்பி பார்த்த வேலைய பாருங்க..!

Written By:

வழக்கமாக, பரீட்சையில் மார்க் குறைவாக எடுத்து விட்டால் பரீட்சை பேப்பரில் ரெட் பேனாவினால் எக்ஸ்‌ட்ரா மார்க் போடுவது, ரிப்போர்ட் கார்டில் 'கோல்மால்' செய்வது போன்ற ஸ்கூல் பசங்களுக்கே உரிய வேலைகளைப்பற்றி தான் நாம் கேள்விபட்டுருப்போம் அல்லது நாமே கூட அந்த தில்லாலங்கடிகளை செய்திருப்போம்.

ஆனால், கரோலினாவில் உள்ள பாந்தர் க்ரீக் உயர்நிலை பள்ளியை சேர்ந்த 17 வயது சிறுவன் செய்த 'தில்லு முல்லு' வேலையைப்பற்றி சொன்னால் கொஞ்சம் அட்வான்ஸ்டு லெவலாக தான் தோன்றும்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வழக்கு பதிவு :

வழக்கு பதிவு :

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி தங்கள் பள்ளி டேட்டாபேஸ் கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யபட்டு மாணவர்கள் பலரின் கிரேட்கள் மாற்றப்பட்டுள்ளது என்று பள்ளி நிர்வாகம் காவல்துறையில் வழக்கு பதிவு செய்துள்ளது.

விசாரணை :

விசாரணை :

அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஹேக் செய்து மாற்றப்பட்டுள்ள 90 கிரேட்களில் பாதிக்கும் மேற்பட்டது சாய்வம்சி ஹனுமந்து என்ற மாணவருக்காக மாற்றப்பட்டுள்ளது என்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

லேப்டாப் :

லேப்டாப் :

பின் அந்த மாணவர் தனிப்பட்ட முறையில் ஆசிரியர் ஒருவர் மூலம் கண்காணிக்கப்பட்டதில் பள்ளி நேரத்திற்கு பின்பும் கூட நீண்ட நேரம் சாய்வம்சி தனது லேப்டாப்பில் ஏதோ வேலை செய்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.

ஆய்வு :

ஆய்வு :

பின்பு பள்ளி டேட்டாபேஸ் கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்ததில் சாய்வம்சி சுமார் 250 மணி நேரங்கள் வரையிலாக ஹேக் வேலைகளில் ஈடுப்பட்டுள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டது.

கிரேட் மற்றும் ரேன்க் :

கிரேட் மற்றும் ரேன்க் :

சக மாணவர்களின் கிரேட்கள் மற்றும் ரேன்க்குகளை மாற்றம் செய்துள்ள சாய்வம்சி தன்னை தானே 67-வது ரேன்க்கில் இருந்து 7-வது ரேன்க்கிற்கு மாற்றியுள்ளான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐபி விலாசம் :

ஐபி விலாசம் :

மேலும் கிரேட்கள் மற்றும் ரேன்க்குகள் மாற்றம் ஆகிய அனைத்து ஹேக் வேலைகளும் பள்ளி ஐபி விலாசத்தில் இருந்தே நிகழ்த்தப்பட்டுருக்க ஒரே ஒரு ஹேக்மட்டும் வேறொரு ஐபி விலாசத்தில் இருந்து நிகழ்த்தப்பட்டிருந்தது.

டிரேஸ் ;

டிரேஸ் ;

அதை டிரேஸ் செய்த பின்பே சாய்வம்சி பிடிபட்டுள்ளான். 1 லாப்டாப் மற்றும் 7 யூஎஸ்பிக்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவனுக்கான தண்டனை குறித்து எந்த விதமான தகவலும் முதலில் வெளியாகவில்லை.

சைபர் குற்றம் :

சைபர் குற்றம் :

தற்போது, சைபர் குற்ற செயலுக்காக கைதி செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாய்வம்சி 4 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலான சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
17 Year Old Teen Arrested for Hacking School Computers, changing grades. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot