முதியவரின் வங்கி கணக்கில் ரூ.6 கோடி மோசடி செய்த 17 வயது சிறுவன்.! நடந்தது இதுதான்.!

|

போலி ஆன்லைன் வங்கி சேவைகள், போலி இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் போலி வங்கி அழைப்பு ஆகிவற்றில் மக்கள் சிக்கி தங்களின் பணத்தை விரையமாக மோசடி கும்பலிடம் இழந்துவருகின்றனர். குறிப்பாக இதுபோன்ற செய்திகள் தான் நாம் தினசரி அதிகம் பார்க்கிறோம்.

ரூ.6கோடி மோசடி செய்த சம்பவம்

இந்நிலையில் இன்சூரன்ஸ் நிறுவன ஏரெண்ட் என்று கூறி 17வயது சிறுவன் 86வயது முதியவர் ஒருவரிடம் சுமார் ரூ.6கோடிமோசடி செய்த சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 டெல்லியில் 17வயது சிறுவனும்

வெளிவந்த தகவலின்படி டெல்லியில் 17வயது சிறுவனும் அவனது நண்பர்கள் சிலரும் இன்சூரன்ஸ் நிறுவனம் என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான அவர்கள் 86வயது முதியவரை தொடர்புகொண்டு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி அதற்காக வங்கிக்கணக்கு தொடர்பான தகவல்கள் வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.

சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.! முழுவிவரங்கள்.!சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.! முழுவிவரங்கள்.!

 கால்செண்டரையே

குறிப்பாக அவர்கள் ஒரு கால்செண்டரையே நடத்தியுள்ளதா போலீசார் தெரிவித்துள்ளனர். பின்பு முதியவரிடம் போன் செய்துவங்கித் தகவல்களை சேகரித்தவர்கள் அதில் உள்ள பணத்தை ஏற்கனவே வைத்திருந்த வங்கிகணக்கில் மாற்றியுள்ளனர்.

மொபைல் மூலம் சிக்கிய கணவன்: அம்பலமான உண்மைமுகம்., ஸ்கெட்ச் போட்ட மனைவி!மொபைல் மூலம் சிக்கிய கணவன்: அம்பலமான உண்மைமுகம்., ஸ்கெட்ச் போட்ட மனைவி!

வங்கிக்கணக்குகளை உருவாக்கியுள்ளனர்

பின்பு அந்த வங்கிக் கணக்குகளும் போலியான ஆவணங்கள் கொடுத்து உருவாக்கப்பட்டவை என்று தகவல் வெளிவந்துள்ளது.மேலும் இதற்காக அவர்கள் 35-க்கும் மேற்பட்ட வங்கிக்கணக்குகளை உருவாக்கியுள்ளனர்.

எப்போதும்போல் நடந்த ஆன்லைன் வகுப்பு: மாணவி வீட்டுக்குள் புகுந்த திருடர்கள்- பதிவான வீடியோ!எப்போதும்போல் நடந்த ஆன்லைன் வகுப்பு: மாணவி வீட்டுக்குள் புகுந்த திருடர்கள்- பதிவான வீடியோ!

அவர்கள் வங்கிக்கணக்கில் இருந்து

அதன்பிற்கு அவர்கள் வங்கிக்கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் பணத்தை எடுத்துள்ளனர். குறிப்பாக இது மிகப்பெரியமோசடி என்று தெரிவித்துள்ள காவலர்கள் இதுதொடர்பாக தீவிரமாக விசாரணையை நடத்தி வருகின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது.

1940-ல் காணாமல் போன போர்க்கப்பல் கண்டுபிடிப்பு! கப்பலுக்குள் மறைக்கப்பட்டுள்ள உண்மை என்ன?1940-ல் காணாமல் போன போர்க்கப்பல் கண்டுபிடிப்பு! கப்பலுக்குள் மறைக்கப்பட்டுள்ள உண்மை என்ன?

தளத்தில் நீங்கள் பார்ப்பது

அதேபோல்இணையதளத்தில் நீங்கள் பார்ப்பது அனைத்தும் சரியான தகவல் அல்ல, அதிலும் குறிப்பாக வங்கி தொடர்பான செல்போன் எண்கள், வங்கி தொடர்பான சேவை மைய எண்கள் ஆகியவை பெரும்பாலும் மோசடி கும்பலால் உருவாக்கப்பட்டவையே. போலி எண்களுக்கு அழைப்பு விடுத்து, இந்த வலையில் வீணாய் மக்கள் சிக்கி தங்களின் பணத்தை இழக்கிறார்கள். வங்கியின் அங்கீகரிக்கப் பட்ட ஆப்ஸ் மூலம் மட்டும் உங்கள் வங்கி சேவையைப் பயன்படுத்துங்கள், இல்லை என்றால் சிக்கல் தான்.

Best Mobiles in India

English summary
17-year-old boy poses as insurance agent, defrauds 86-year-old man of Rs 6 crore: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X