தாய்மொழியை தவிர வேறு எந்த மொழியும் தெரியாது: பில்கேட்ஸ் குறித்து 17 ஆச்சரியமான தகவல்கள்
பில்கேட்ஸ் பள்ளியில் படிக்கும்போது கம்ப்யூட்டருடன் விளையாடும் ஒரு புரோகிராமை கண்டுபிடித்தார். டிக் டாக் டோ என்று அழைக்கப்படும் இந்த விளையாட்டு மிஷினுடன் மனிதர்கள் விளையாடும் விளையாட்டு ஆகும்
உலகப்புகழ் பெற்ற தொழிலதிபர் பில்கேட்ஸ் என்றால் உலகின் மிகப்பெரிய பணக்காரர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் பில் ம்ற்றும் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் ஆரம்பித்து உலகில் பல சமுதாய நற்காரியங்களை செய்து வருபவர் என்றுதான் அனைவருக்கும் தெரியும்,

ஆனால் ஆன்லைனில் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த தகவல்களை தாண்டி பில்கேட்ஸ் அவர்களுக்கு பல சிறப்பு குணங்கள், பழக்க வழக்கங்கள் உண்டு. பில்கேட்ஸ் குறித்து பலரும் அறியாது 17 ஆச்சரியமான தகவல்களை தற்போது பார்ப்போம்.

#1
பில்கேட்ஸ் பள்ளியில் படிக்கும்போது கம்ப்யூட்டருடன் விளையாடும் ஒரு புரோகிராமை கண்டுபிடித்தார். டிக் டாக் டோ என்று அழைக்கப்படும் இந்த விளையாட்டு மிஷினுடன் மனிதர்கள் விளையாடும் விளையாட்டு ஆகும்

#2
அதேபோல் பள்ளியில் படிக்கும்போதே கோடிங் எழுதவும் அவர் கற்று கொண்டார். இதன்மூலம் வகுப்பறையில் உள்ள மாணவர்களின் தகவல்கள் குறித்த புரோக்ராம்களை அவர் எழுதினார். அதேபோல் பில்கேட்ஸ் தனது கோடிங்கில் மாணவிகளுக்கு என தனியாக பிரித்தும் அவர் குறிப்பிட்டிருந்தார்

#3
தனது டீன் ஏஜ் காலத்திலேயே 'வேர்ல்ட் புக் என்சைக்ளோபீடியா' என்ற புத்தகத்தை அவர் முழுவதுமாக படித்திருந்தார்

#4
எஸ்.ஏ.டி என்ற தேர்வில் பில்கேட்ஸ் எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? 1600க்கு 1590

#5
இன்றைக்கு புகழ் பெற்று இருக்கும் பல தொழிலதிபர்கள் பில்கேட்ஸ் உடன் படித்தவர்கள். அவர் 1975ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்குவதற்காக ஹார்வர்டு பல்கலைக்கழத்தில் இருந்து விலகினார்

#6
பில்கேட்ஸ் இரண்டு முறை கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் யாருக்காவது தெரியுமா? ஆம், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காகவும், ரெட் லைட் எரிந்து கொண்டிருந்தபோது சாலையை கடந்ததற்காகவும் இருமுறை கைது செய்யப்பட்டுள்ளார்.

#7
பில்கேட்ஸ் தான் முதல்முறையாக தனது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வருகைப்பதிவுகளை மெஷின் மூலம் பதிவு செய்தார். இதனால் ஒவ்வொரு ஊழியர்களின் வருகை, வேலையை விட்டு செல்லும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக கண்டுபிடிக்க முடிந்தது

#8
பில்கேட்ஸ் அவர்களுக்கு போர்ச்சி கார் மீது அலாதி பிரியம். அமெரிக்காவின் சுற்றுச்சூழல் துறை மற்றும் அமெரிக்க போக்குவரத்து துறை அனுமதி அளிப்பதற்கு 13 வருடங்களுக்கு முன்னரே அவர் போர்ச்சி 959 என்ற மாடல் காரை வாங்கிவிட்டார்

#9
விமான பயணம் பில்கேட்ஸ் அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. கடந்த 1997ஆம் ஆண்டில் இருந்து 'பில் ஸ்ப்ளர்ஜ்' என்னும் சொந்த விமானத்தில்தான் அவர் பயணம் செய்து வருகிறார்

#10
பில்கேட்ஸ் தனது விமானத்தில் எப்போதும் டாவின்ஸி எழுதிய புத்தகங்களை வைத்திருப்பார். இவைகளை அவர் கடந்த 1994ஆம் ஆண்டு $30.8 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்த்தக்கது

#11
பில்கேட்ஸ் அவர்களுக்கு சுமார் 81.1 பில்லியன் அளவுக்கு சொத்து இருந்தாலும் அவர் தனது குழந்தைகள் ஒவ்வொருவருக்கு $10 மில்லியன் மட்டுமே கொடுத்துள்ளார். பணம் மட்டுமே வாழ்க்கையல்ல என்பதை குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே அவரது நோக்கம்

#12
பில்கேட்ஸ் தனது தொண்டு நிறுவனத்திற்காக அதிக நேரம் பணிபுரிவதை விரும்புபவர். இப்போதும் அவர் எங்கு, யாருக்கு உதவி தேவை என்பது குறித்தே மைக்ரோசாப்ட் பர்சனல் ஏஜண்டிடம் ஆராய்ந்து கொண்டிருப்பார்.

#13
மைக்ரோசாப்ட் நிறுவனத்தை விட அவருக்கு ஆர்ட்டிபிசியல் இண்டலிஜென்ஸ் குறித்து ஆய்வு செய்வதில் மிகுந்த ஆர்வம் உண்டு

#14
ஆர்ட்டிபிசியல் இண்டலிஜென்ஸ் குறித்து அதிக ஆர்வம் இருந்ததால் அவர் இதுகுறித்து ஸ்டீபன் ஹாக்கிங் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர்களுடன் அறிவியல், தொழில்நுட்பங்கள் குறித்து பல நேரங்களில் விவாதித்துள்ளார்.

#15
பில்கேட்ஸ் அவர்களுக்கு ராக் பாடல்கள் மிகவும் பிடிக்கும். குறிப்பாக 'வீசர்' என்ற குழுவினர்களின் பாடல்களை அவர் விரும்பி கேட்பார்.

#16
பில்கேட்ஸ் ஒரு புத்தகப்புழு. ஆண்டுக்கு குறைந்தபட்சம் 50 புத்தகங்களையாவது படிப்பார். புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளவும், தனது அறிவை வளர்த்து கொள்ளவும் புத்தகங்களை விட சிறந்த விஷயம் வேறு இல்லை என்பது பில்கேட்ஸ் அவர்களின் ஆணித்தரமான கருத்து

#17
பில்கேட்ஸ் அவர்களுக்கு தாய்மொழியை தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. இதுவொரு தனது பெரிய குறையாக அவர் பல சமயங்களில் நினைப்பதுண்டு


Click it and Unblock the Notifications