ஹோலி சேல் பிச்சிக்குது.. ரூ.22999 போதும்.. டெலிபோட்டோ கேமரா.. SONY சென்சார்.. 20X ஜூமிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் நடக்கும் ரியல்மி ஹோலி விற்பனையில் (Realme Holi Sale) போர்ட்ராய்டு கேமரா கொண்ட ரியல்மி 12 ப்ரோ 5ஜி சீரிஸ் போன்களுக்கும், ரியல்மி 12 சீரிஸ் போன்களுக்கும் மார்ச் 31ஆம் தேதி வரையில் மிரளவிடும்படியான தள்ளுபடி கிடைக்கிறது.
இந்த தள்ளுடியில் பேங்க் டிஸ்கவுண்ட், எக்ஸ்சேஞ்ச் போனஸ், நோ காஸ்ட் ஈஎம்ஐ போன்ற சலுகைகளும் கிடைக்கின்றன. முதலில் ரியல்மி 12 ப்ரோ 5ஜி சீரிஸ் (Realme 12 Pro 5G Series) போன்களுக்கு கிடைக்கும் தள்ளுபடி மற்றும் அந்த போன்களின் அம்சங்களை பார்ப்போம்.

ரியல்மி 12 ப்ரோ 5ஜி சீரிஸ் விலை, அம்சங்கள் (Realme 12 Pro 5G Series Price Specifications): இதில் ரியல்மி 12 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் 5ஜி என்னும் 2 மாடல்கள் விற்பனைக்கு வருகின்றன. ப்ரோ மாடலின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆக இருக்கிறது.
இந்த விலையில் ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட், ரூ.2000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் 12 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கிடைக்கிறது. அதேபோல ப்ரோ பிளஸ் மாடலின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.29,999ஆ இருக்கிறது.
இந்த விலையில் ரூ.4000 பேங்க் டிஸ்கவுண்ட், ரூ.2000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் 12 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த போன்களில் 120Hz ரெஃப்ரெஷ் கொண்ட 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது.
ப்ரோ மாடலில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் மொபைல் சிப்செட் உள்ளது. ப்ரோ பிளஸ் மாடலில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் சிப்செட் வருகிறது. அதேபோல ப்ரோவில் 50 எம்பி மெயின் + 8 எம்பி அல்ட்ரா வைடு + 32 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது.
16 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. ப்ரோ பிளஸ் போனில் 50 எம்பி மெயின் + 8 எம்பி அல்ட்ரா வைடு + 64 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா வருகிறது. 32 எம்பி செல்பீ ஷூட்டர் கொண்டுள்ளது. இந்த மாடல்களில் 5000mAh பேட்டரி மற்றும் 67W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.
ரியல்மி 12 5ஜி சீரிஸ் விலை, அம்ங்கள் (Realme 12 5G Series Price Specifications): இதில் ரியல்மி 12 5ஜி மற்றும் ரியல்மி 12 பிளஸ் 5ஜி என்று 2 மாடல்கள் இருக்கின்றன. ரியல்மி 12 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.16,999ஆக நிர்யணம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலையில் ரூ.1,500 பேங்க் டிஸ்கவுண்ட், ரூ.1,500 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் 6 மாதங்களுக்கான நோ காஸ்ட் ஈஎம்ஐ சலுகைகள் கிடைக்கிறது. ரியல்மி 12 பிளஸ் 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999ஆக இருக்கிறது.
இந்த விலையில் ரூ.1000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் 9 மாதங்களுக்கான நோ காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கிடைக்கிறது. இந்த போன்களில் 6.72 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே வருகிறது. பிளஸ் மாடலில் அமோலெட் பேனல் வருகிறது. அதேபோல பிளஸ் மாடலில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் சிப்செட் உள்ளது.
50 எம்பி மெயின் + 8 எம்பி அல்ட்ரா வைடு + 2 எம்பி மேக்ரோ கேமரா உள்ளது. 67W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி உள்ளது. 12 மாடலில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் சிப்செட் உள்ளது.108 எம்பி மெயின் கேமரா உள்ளது. 45W சார்ஜிங், 5000mAh பேட்டரி உள்ளது.


Click it and Unblock the Notifications








