Home
News

நல்ல மாசம் பொறக்குது.. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 17 புதிய போன்கள் அறிமுகம்.. இதோ ஃபுல் லிஸ்ட்!

ஒன்றல்ல, இரண்டல்ல! 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 17 புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவைகளில் பாதிக்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதி ஏற்கனவே வெளியாகிவிட்டது. அப்படியாக பிப்ரவரி மாதத்தில், என்னென்ன ஸ்மார்ட்போன்கள் (Upcoming Smartphones) அறிமுகம் செய்யப்பட உள்ளன என்கிற முழு பட்டியல் இதோ:

01. சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரீஸ் (Samsung Galaxy S23 Series)

01. சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரீஸ் (Samsung Galaxy S23 Series)

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்23 சீரீஸ் மாடல்கள், வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி நடக்கும் கேலக்ஸி அன்பேக்டு (Galaxy Unpacked) நிகழ்வின் வழியாக இந்தியாவிலும், உலக அளவிலும் அறிமுகமாகும்.

சாம்சங்கின் எஸ்23 சீரீஸின் கீழ் சாம்சங் கேலக்ஸி எஸ்23, சாம்சங் கேலக்ஸி எஸ்23 பிளஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகும்!

02. ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G)

02. ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G)

அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ள மற்றொரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் - ஒன்பிளஸ் 11 5ஜி ஆகும்.

இது வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும். அதே நாளில் மற்ற உலக சந்தைகளிலும் இது அறிமுகமாகும்.

நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகி விட்டது.

03. சியோமி 13 சீரீஸ் (Xiaomi 13 Series)

03. சியோமி 13 சீரீஸ் (Xiaomi 13 Series)

சியோமி 13 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று கூறப்படுவதால், இது பிப்ரவரி மாதத்திலேயே கூட அறிமுகம் செய்யப்படலாம்.

இந்த சீரீஸின் கீழ் மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகும். அவைகள் சியோமி 13, சியோமி 13 ப்ரோ மற்றும் சியோமி 13 லைட் ஆகும்!

04. ஒப்போ ஃபைண்ட் என்2 மற்றும் என்2 ஃபிளிப் (Oppo Find N2 மற்றும் Oppo Find N2 Flip)

04. ஒப்போ ஃபைண்ட் என்2 மற்றும் என்2 ஃபிளிப் (Oppo Find N2 மற்றும் Oppo Find N2 Flip)

ஒப்போ ஃபைண்ட் என்2 மற்றும் ஒப்போ ஃபைண்ட் என்2 ஃபிளிப் ஆகிய இரண்டுமே ஒப்போவின் லேட்டஸ்ட் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள் ஆகும்.

கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன்கள், பிப்ரவரி மாத வாக்கில் உலகளாவிய அறிமுகத்தை சந்திக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

05. மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ (Motorola Edge 40 Pro)

05. மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ (Motorola Edge 40 Pro)

மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ ஸ்மார்ட்போன், 2023 பிப்ரவரி மாதத்தில் உலகளவில் அறிமுகம் செய்யப்படலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ மாடல் ஆனது கடந்த மாதம் சீனாவில் அறிமுகமான மோட்டோ எக்ஸ் 40 ஸ்மார்ட்போனின் "சாயலாக" இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது!

06. ஐக்யூ நியோ 7 (iQOO Neo 7)

06. ஐக்யூ நியோ 7 (iQOO Neo 7)

ஐக்யூ நியோ 7 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 16 அன்று இந்தியாவிற்கு வருகிறது. ஐக்யூ நிறுவனம் அதன் நியோ சீரீஸின் கீழ் ஐக்யூ நியோ 7, ஐக்யூ நியோ 7 எஸ்இ மற்றும் ஐக்யூ நியோ 7 ரேசிங் எடிஷன் என்கிற மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது.

இருப்பினும், தற்போது வரையிலாக இந்தியாவில் ஐக்யூ நியோ 7 ஸ்மார்ட்போனின் அறிமுகம் மட்டுமே உறுதிசெய்யப்பட்டுள்ளது!

07. விவோ எக்ஸ்90 சீரீஸ் (Vivo X90 Series)

07. விவோ எக்ஸ்90 சீரீஸ் (Vivo X90 Series)

விவோ எக்ஸ்90 சீரீஸ் ஆனது எம்டபுள்யூசி 2023 (MWC 2023) நிகழ்வின் போது உலகளாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறியாதோர்களுக்கு எம்டபுள்யூசி 2023 நிகழ்வானது பிப்ரவரி 27 முதல் மார்ச் 2 வரை நடக்கவுள்ளது. விவோ எக்ஸ்90 சீரீஸின் கீழ் விவோ எக்ஸ்90, விவோ எக்ஸ்90 ப்ரோ மற்றும் விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ் என மொத்தம் 3 மாடல்கள் வெளியாகும்.

08.போக்கோ எக்ஸ்5 சீரீஸ் (Poco X5 Series)

08.போக்கோ எக்ஸ்5 சீரீஸ் (Poco X5 Series)

போக்கோ எக்ஸ்5 சீரீஸின் கீழ் மொத்தம் 2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது போக்கோ எக்ஸ்5 மற்றும் போக்கோ எக்ஸ்5 ப்ரோ ஆகும்.

போக்கோ நிறுவனம் இந்த 2 ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை இன்னும் உறுதிப்படுத்தாவிட்டாலும் கூட, இவைகள் கூடிய விரைவில் அறிமுகமாகும் என்பது போலவே தெரிகிறது!

09. ரியல்மி ஜிடி நியோ 5 (Realme GT Neo 5)

09. ரியல்மி ஜிடி நியோ 5 (Realme GT Neo 5)

இந்த் பட்டியலில் கடைசியாக இருப்பது ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போன் ஆகும். இது 2023 பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.

இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் MWC 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படுமா அல்லது சீனாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பதில் தெளிவு இல்லை!

More from GizBot

Best Mobiles in India

English summary
17 New Upcoming Smartphones Are Expect To Launch in February 2023 Check Full List
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X