கூகுள் நிறுத்திய 17 சேவைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா?
கூகுள் பஸ் சேவை நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் தொடர முடியாமல் போனது துரதிஷ்டமே.
கூகுள் நிறுவனம் மிகப்பரந்த ஒரு நிறுவனம் என்பதும் இந்நிறுவனம் மேப்ஸ் முதல் ஆண்ட்ராய்டு வரை பல்வேறு வசதிகளை பயனாளிகளுக்கு பெற்று தந்துள்ளது என்பதும் தெரிந்ததே. ஆனால் இந்த கூகுள் நிறுவனமும் ஒருசில சேவைகளை தொடர முடியாமல் நிறுத்தியுள்ளது என்பதே உண்மை. உதாரணத்திற்கு கூகுள் பஸ்ஸை கூறலாம். இந்த சேவை நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் தொடர முடியாமல் போனது துரதிஷ்டமே. இதேபோல் கூகுள் 17 சேவைகளை கடந்த சில வருடங்களில் நிறுத்தியுள்ளது. அவற்றில் சிலவற்றை தற்போது பார்ப்போம்

கூகுள் ஆன்சர்ஸ்: கூகுள் நிறுவனத்தின் முதல் சேவை இதுதான். பயனாளிகள் கேட்கும் கேள்விகளுக்கு பயனாளிகளே பதில் சொல்லும் இந்த சேவை நான்கு ஆண்டுகள் மட்டுமே வழக்கத்தில் இருந்தது. இந்த சேவை 2006ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
அதேபோல் கூகுள் வெர்ட்சுவல் வேர்ல்ட் என்பது நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் சரியான புரிதல் மற்றும் மக்களை சென்றடையும் திறன் இல்லாததால் இந்த சேவை கடந்த 2008ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது

கூகுள் நிறுவனத்தின் ஸ்டைலிஷான அறிமுகம் கூகுள் கிளாஸ். 2012ஆம் ஆண்டு அறிமுகமான இந்த கிளாஸ் அதிக விலை, சாப்ட்வேர் பிரச்சனை மற்றும் பிரைவசி பிரச்சனை ஆகியவை காரணமாக மூன்றே ஆண்டுகளில் அதாவது 2015ஆம் ஆண்டு நிறுத்தபட்டது. இருப்பினும் இந்த கிளாஸ்கள் ஒருசில இடங்களில் விற்பனை நடந்து கொண்டு தான் வௌர்கிறது.
கூகுள் பஸ் என்பது ஒரு சமூக வலைத்தளம் என்பது தெரிந்ததே. ஜிமெயில் மூலம் இயங்கும் இதிலும் பிரைவசி பிரச்சனை ஏற்பட்டதால் கடந்த 2011ஆம் ஆண்டு அக்டோபரில் நிறுத்தப்பட்டது
கூகுள் பிளே என்ற வசதி கடந்த 2014ஆம் ஆண்டு ஆண்ட்ராய்டு போன் பயனாளிகளுக்காக ஆரம்பமானது. ஆனால் 2015ஆம் ஆண்டு இந்த சேவை எதிர்பாராத சில காரணங்களால் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதேபோல் கூகுள் வேவ் என்ற வசதி பயனாளிகள் மெசேஜ் அனுப்பி கொள்ளவும், ஒரு டாக்குமெண்ட்டை இணைந்து எடிட் செய்யும் முறையும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இதனை பயன்படுத்துவதில் பயனாளிகளுக்கு குழப்பம் ஏற்பட்டதால் ஒஏ ஆண்டில் இழுத்து மூடப்பட்டது.
கடந்த 2006ஆம் ஆண்டு யூடியுப் ஆரம்பிக்கும் முன்னரே கூகுள் வீடியோ என்ற ஸ்ட்ரீமிங் சர்வீஸ் ஆரம்பிக்கபப்ட்டது. ஆனால் 2009ஆம் ஆண்டு புதிய வீடியோக்களை அப்லோட் செய்வது நிறுத்தப்பட்டது, அதன்பின்னர் யூடியூப் அறிமுகமான பின்னர் கூகுள் வீடியோ தானாகவே முடங்கியது
கடந்த 2012ஆம் ஆண்டு கூகுள் அறிமுகம் செய்த இன்னொரு சேவை கூகுள் நெக்சஸ். ஆனால் இதன் விலை $299 என்பதால் பெரும்பாலான மக்கள் இதனை விரும்பவில்லை என்பதால் இந்த சேவையும் நிறுத்தப்பட்டது.
அதேபோல் கூகுள் எக்ஸ் என்ற சியர்ச் எஞ்சின் சேவையும் கடந்த 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் எந்தவித வரவேற்பும் இல்லாததால் நிறுத்தப்பட்டது.

அதேபோல் பயனாளிகளின் உடல்நலனை கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட சேவைதான் கூகுள் ஹெல்த். ஆனால் இந்த சேவையும் கடந்த 2012ஆம் ஆண்டு ஒருசில காரணங்களால் நிறுத்தப்பட்டது.
செய்திகள், பிளாக்குகள் மற்றும் புதிய இணையதளங்களை படிக்கும் வகையில் கூகுள் ரீடர் என்றா சேவை ஆரம்பமானது. ஆனால் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த சேவையும் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications