தவறான தகவல் பரப்பிய 6 பாகிஸ்தான் யூடியூப் சேனல் உட்பட 16 சேனல்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி- காரணம் இதோ!

|

பாகிஸ்தானை சேர்ந்த 6 யூடியூப் சேனல்கள் உட்பட 16 யூடியூப் சேனல்கள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதற்காக தடை செய்யப்பட்டுள்ளன.

தவறான தகவல்களை பரப்பியதற்காக நடவடிக்கை

தவறான தகவல்களை பரப்பியதற்காக நடவடிக்கை

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதற்காக 10 இந்தியா யூடியூப் சேனல்கள் மற்றும் 6 பாகிஸ்தானை சேர்ந்த சேனல்களை தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகம் முடக்கி இருப்பதாக ANI தளம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஏஎன்ஐ தளத்தில் வெளியான முழு தகவல்களை பார்க்கலாம்.

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தகவல்

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தகவல்

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தகவல்படி, இந்த யூடியூப் சேனல்கள் இந்தியாவில் பீதியை உருவாக்கவும், வகுப்புவாத ஒற்றுமையை தூண்டவும், பொது ஒழுங்கை சீர்குலைக்கவும் தவறான மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களை பரப்புகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுக்கப்பட்ட சமூக வலைதள கணக்குகள் ஆனது பாகிஸ்தானை சேர்ந்த ஆறு சேனல்களும், இந்தியாவைச் சேர்ந்த 10 யூடியூப் சேனல்களும் என தெரிவிக்கப்படுகிறது. இவை 68 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கொண்டிருக்கின்றன.

டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள்

டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள்

தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-ன் விதி 18 இன் கீழ் குறிப்பிட்ட டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் எவரும் அமைச்சகத்திற்கு எந்த தகவல்களையும் வழங்கவில்லை என அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவைத் தளமாகக் கொண்ட சில யூடியூப் சேனல்களில் வெளியிடப்பட்ட உள்ளடக்கம் ஆனது ஒரு சமூகத்தை பயங்கரவாதிகள் என குறிப்பிடுவதாகவும், இது குறிப்பிட்ட மத சமூகங்களை சேர்ந்தவர்களிடையே வெறுப்பை தூண்டும் வகையில் இருப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் இதுபோன்ற உள்ளடக்கம் ஆனது பொது ஒழுங்கை சீர்குலைக்கும் திறன் கொண்டதாக கண்டறியப்பட்டது என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய யூடியூப் சேனல்களால் வெளியிடப்பட்ட உள்ளடக்கம்

இந்திய யூடியூப் சேனல்களால் வெளியிடப்பட்ட உள்ளடக்கம்

இந்திய யூடியூப் சேனல்களால் வெளியிடப்பட்ட உள்ளடக்கம் குறித்து பார்க்கையில், கோவிட்-19 காரணமாக இந்தியா முழுவதும் பூட்டுதல் அறிவிப்பு தொடர்பான தவறான தகவல்கள் இதன்காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அச்சுறுத்துவது மற்றும் சில மத சமூகங்களுக்கு அச்சுறுத்தல் வழங்கும் வகையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சமூகத்தின் பல்வேறு பிரிவினர்கள் இடையே பீதியை உருவாக்கும் சாத்தியமுள்ள தகவல்கள், சரிபார்க்கப்படாத தகவல்கள் மற்றும் வீடியோக்களை இந்தியா சேர்ந்த சில யூடியூப் சேனல்கள் வெளியிடுவதாக கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட யூடியூப் சேனல்

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட யூடியூப் சேனல்

அதேபோல் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட யூடியூப் சேனல்களானது, இந்திய ராணவும், ஜம்மு காஷ்மீர் மற்றும் இந்தியாவின் வெளிநாட்டு உறவுகள் போன்ற பல்வேறு விஷயங்களில் இந்தியா குறித்த போலி செய்திகளை வெளியிட ஒருங்கிணைந்த முறையில் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் முற்றிலும் தவறான ஒன்றாகும் என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக குறிப்பிட்ட செயலிகளுக்கு தடை

முன்னதாக குறிப்பிட்ட செயலிகளுக்கு தடை

அதேபோல் முன்னதாக நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 54 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்தது. இந்த 54 பயன்பாடுகளும் பல்வேறு முக்கியமான அனுமதிகளை பெறுகின்றன எனவும்ம் முக்கியமான பயனர் தரவைச் சேகரிக்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த செயலிகள் நிகழ்நேர டேட்டா தவறாக பயன்படுத்தப்பட்டு, விரோத நாட்டில் அமைந்திருக்கும் சர்வர்களுக்கு அனுப்பப்படுவதாகவும் அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இதுவரை இந்தியாவில் கடந்த மே 2020-ல் இருந்து 321 செயலிகள் தடைசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி

பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி

சமூகவலைதளம் பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி, தலைமை இணக்க அதிகாரி, நோடர் தொடர்பு நபர் ஆகியவர்களை நியமிக்க வேண்டும். சமூகவலைதளங்களில் பல குற்றச் செயல்கள் நடக்கிறது, எனவே பயனர்கள் குற்றங்களை கேட்கும் நேரடி அதிகாரிகள் நியமிக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டது. இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் இடையீட்டாளர்கள் என்ற நிலை சமூகவலைதளம் இழக்க நேரிடும். மேலும் அனைத்து குற்றச் செயல்களுக்கும் அந்தந்த நிறுவனங்களே பொறுப்பேற்கும் நிலை உருவாகும் என சமூகவலைதளங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. இதையடுத்து குறிப்பிட்ட சமூகவலைதளங்களும் அரசின் உத்தரவுக்கு செவி சாய்க்கத் தொடங்கின.

Best Mobiles in India

English summary
16 Youtube Channels including 6 Pakistan Youtube Channels Blocked by Central Government

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X