முப்பொழுதும் பப்ஜி: சாப்பாடே இல்லாமல் பப்ஜி விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த கதி?

|

பொழுதுபோக்குக்கு பப்ஜி விளையாடிய காலம் சென்று பொழுதுக்கும் பப்ஜி விளையாடிய காலமாக மாறிவிட்டது. அப்படி 16 வயது சிறுவன் ஒருவன் சாப்பாடு, நீர் ஏதுமின்றி ஒரு நாள் முழுவதும் பப்ஜி விளையாடியதால் நேர்ந்த விபரீதம் குறித்து பார்க்கலாம்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு

சீனாவில் தோன்றி உலகம் முழுவதையும் உலுக்கிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் தாக்கியுள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தொடர்ந்து ஊரடங்கை அறிவித்து வருகிறது.

நேரத்தை வீட்டிலேயே செலவிட வேண்டிய நிலை

நேரத்தை வீட்டிலேயே செலவிட வேண்டிய நிலை

இதையடுத்து பெரும்பாலானோர் தங்களது நேரத்தை வீட்டிலேயே செலவிட்டு வருகின்றனர். தங்களது பொழுதை எவ்வாறு செலவிடுவது என்று அறியாமல் பெரும்பாலானோர் தவித்து வருகின்றனர். ​​இதில் பெரும்பாலான மக்கள் தங்களது நேரத்தை கேமில் செலவிட்டு வருகின்றனர்.

ஆன்லைன் கேமில் நேரத்தை செலவிடும் நபர்கள்

ஆன்லைன் கேமில் நேரத்தை செலவிடும் நபர்கள்

அதேபோல் நண்பர்கள் ஒன்றுகூடி பேசி குழுவாக தங்களது நேரத்தை ஆன்லைனில் செலவிட்டு மகிழ்ந்து வருகின்றனர். பப்ஜி, கால் ஆஃப் டூட்டி போன்ற விளையாட்டுகள் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. இதில் நேரத்தை செலவிடும் நபர்கள் அதிகம் என்று கூறினால் அது மிகையல்ல.

மொபைல் போனில் நேரத்தை செலவிடும் நபர்கள்

மொபைல் போனில் நேரத்தை செலவிடும் நபர்கள்

இந்த கொரோனா தாக்குதல் ஊரடங்கு நேரத்தில் பலரும் தங்களது நேரத்தை எவ்வாறு செலவிடுவது என்று தவித்து வரும் நிலையில் அதில் தங்களது நேரத்தை பப்ஜி விளையாட்டில் செலவிட்டு வருகின்றனர். இந்த கேமில் அதிகம் பணம் இழந்த நிகழ்வும், பப்ஜி அழுத்தம் தாங்காமலும், பப்ஜி விளையாடக் கூடாது என வீட்டில் கண்டித்ததாலும் உயிரிழந்த சம்பவமும் இந்தியாவில் அரங்கேறியுள்ளது.

500 கிலோ எடை;14 அடி நீளம் கொண்ட ராட்சஸ முதலை! மீண்டும் தாக்கும் என்று நம்பி மக்கள் செய்த காரியம்!500 கிலோ எடை;14 அடி நீளம் கொண்ட ராட்சஸ முதலை! மீண்டும் தாக்கும் என்று நம்பி மக்கள் செய்த காரியம்!

சில சீன ஆப்களுக்கு தடை

சில சீன ஆப்களுக்கு தடை

சீன ஆப்களை இந்தியா தடை செய்த பின்பு பப்ஜி மொபைல் கேமும் தடை செய்யப்படுமா என்ற கேள்வி தான் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் இன்னும் பப்ஜி கேமிற்கு தடை வரலையா என்று சில பெற்றோர்கள் குமுறுவதும் நமக்கு கேட்கிறது. அதேபோல் சீன செயலிகளின் தனியுரிமை பாதுகாப்பு குறித்து விசாரணை நடத்தும் 250-க்கும் மேற்பட்ட செயலிகளில் பப்ஜியும் இடம்பெற்றுள்ளது. இதனால் தடை செய்ய வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.

மேற்கு கோதாவரி பகுதி

மேற்கு கோதாவரி பகுதி

இந்த நிலையில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் மேற்கு கோதாவரி பகுதியில் உள்ள கிராமத்தில் வசித்து வந்த 16 வயது சிறுவன் ஊரடங்கு காலங்களில் தினந்தோறும் அதிகப்படியான நேரத்தை பப்ஜி விளையாட்டில் செலவிட்டு வந்துள்ளார். பொழுதுபோக்கிற்காக விளையாடாமல் பொழுதும் பப்ஜி விளையாட்டையே பிரதானமாக மேற்கொண்டுள்ளார்.

தண்ணீர், உணவு எதுவுமின்றி பப்ஜி

தண்ணீர், உணவு எதுவுமின்றி பப்ஜி

இந்த நிலையில் ஒரு நாள் முழுவதும் தண்ணீர், உணவு என எதையும் உட்கொள்ளாமல் பப்ஜி மட்டுமே அந்த 16 வயது சிறுவன் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. விளையாட்டின் போது அந்த சிறுவனின் உடம்பில் நீரிழப்பு ஏற்பட்டு உடல்நிலை சோர்ந்துள்ளது. இதை பார்த்த அவரது பெற்றோர்கள் அந்த சிறுவனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

சில மணி நேரங்களில் உயிரிழப்பு

சில மணி நேரங்களில் உயிரிழப்பு

மருத்துவமனையில் அந்த சிறுவனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நெகடிவ் என ரிசல்ட் வந்துள்ளது. இந்த நிலையில் அந்த சிறுவனுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டு சில மணி நேரங்களிலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
16 year old Died who played Pupg game for a whole day

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X