வெறும் ரூ.8,000-க்கு அறிமுகமான 15000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்! அடஇது எப்போ?

|

6000mAh என்கிற அளவிலான பேட்டரியே, ஒரு பெரிய அம்சமாக பார்க்கப்படும் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், சாம்சங் நிறுவனத்திடம் இருந்தும், டெக்னோ நிறுவனத்திடம் இருந்தும் 7000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்கள் வாங்க கிடைக்கிறது என்பதை உங்களில் சிலர் அறிந்து இருக்கலாம்!

அது சாம்சங் கேலக்ஸி எப்62 மற்றும் டெக்னோ போவா 2 ஆகும். இதுதவிர்த்து Ulefone மற்றும் Doggee போன்ற நிறுவனங்களிடம் இருந்தும் 7000mAh க்கும் மேலான திறன் கொண்ட பேட்டரிகளை பேக் செய்யும் ஸ்மார்ட்போன்கள் வாங்க கிடைக்கின்றன.

இதற்கிடையில் அறிமுகமாகி உள்ள 15000mAh பேட்டரி போன்!

இதற்கிடையில் அறிமுகமாகி உள்ள 15000mAh பேட்டரி போன்!

அட ஆமாங்க! ஹாட்வாவ் (Hotwav) என்கிற நிறுவனம் ஹாட்வாவ் W10 என்கிற ரக்டு (Rugged) ஸ்மார்ட்போனை 15,000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்து உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் IP69K வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உடன் வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இதுமட்டும் தானா? இல்லை இந்த பட்டியல் இன்னும் நீண்டுகொண்டே போகிறதா? இந்த ஸ்மார்ட்போனின் விலை என்ன? இது எந்த தளம் வழியாக வாங்க கிடைக்கும்? போன்ற விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்.

1200 மணிநேரம் வரை ஸ்டேன்ட்-பை டைம்!

1200 மணிநேரம் வரை ஸ்டேன்ட்-பை டைம்!

மிலிட்டரி கிரேட் ட்யூரபிலிட்டி (military-grade durability) மற்றும் வாட்டர் ரெசிஸ்டென்ட் திறன் கொண்ட Hotwav W10 ரக்டு ஸ்மார்ட்போன் ஆனது நேற்று (அதாவது ஜூன் 24 ஆம் தேதி அன்று) அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் தனித்துவமான அம்சம் ஆக பார்க்கப்படும் 15,000mAh பேட்டரி ஆனது - நம்பினால் நம்புங்கள் - 1,200 மணிநேரம் வரை என்கிற ஸ்டேன்ட்-பை டைம்-ஐ வழங்குவதாக கூறப்படுகிறது.

மேலும் Hotwav W10 ஸ்மார்ட்போனின் 15,000mAh ஆனது 28 மணிநேர தடையில்லா வீடியோ பிளே டைமை வழங்குவதாகவும் கூறப்படுகிறது. இதன் பேட்டரி 18W வயர்டு சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.

அலெர்ட்! இனிமே புது ஸ்மார்ட்போன் வாங்கும் போது அலெர்ட்! இனிமே புது ஸ்மார்ட்போன் வாங்கும் போது "இதை" மறக்காம செக் பண்ணுங்க!

என்ன விலை? எதன் வழியாக வாங்க கிடைக்கும்?

என்ன விலை? எதன் வழியாக வாங்க கிடைக்கும்?

Hotwav W10 ரக்டு ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஜூன் 27 ஆம் தேதி முதல் அலிஎக்ஸ்ப்ரெஸ் (AliExpress) வழியாக விற்பனைக்கு வரும். இந்திய மதிப்பின்படி இது தோராயமாக ரூ.8,000 என்கிற சிறப்பு விலையின் கீழ், ஜூலை 1 ஆம் தேதி வரை வாங்க கிடைக்கும்.

குறிப்பிட்ட அறிமுக சலுகை முடிந்த பிறகு, Hotwav W10 ரக்டு ஸ்மார்ட்போன் ஆனது அதன் அசல் விலையான ரூ.11,000 க்கு (தோராயமாக; இந்திய மதிப்பின்படி) திரும்பும். விற்பனையின் போது, இது க்ரே மற்றும் ஆரஞ்சு வண்ண விருப்பங்களில் பட்டியலிடப்படும்.

இந்த போனில் பேட்டரி மட்டும் தான் கெத்து-ஆ!

இந்த போனில் பேட்டரி மட்டும் தான் கெத்து-ஆ!

இல்லை! இது விலைக்கு ஏற்ற மற்றும் விலையை மீறிய சில அம்சங்களையும் பேக் செய்கிறது. இந்த ரக்டு ஸ்மார்ட்போனில் 720 x 1600 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் கொண்ட 6.53-இன்ச் அளவிலான எச்டி+ டிஸ்ப்ளே உள்ளது.

மேலும் Hotwav W10 மாடல், மீடியாடெக் ஹீலியோ ஏ22 SoC உடனாக 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

நீங்கள் இதன் ஸ்டோரேஜை நீடிக்க விரும்பினால், 512ஜிபி வரையிலான மைக்ரோ எஸ்டி கார்ட்டையும் பயன்படுத்தலாம்.

ரியர் மற்றும் செல்பீ கேமராக்கள் எப்படி?

ரியர் மற்றும் செல்பீ கேமராக்கள் எப்படி?

கேமராக்களைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் 13 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில், செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

ஓ மை காட்! இந்த மேட்டர் தெரியாம இவ்ளோ நாள் Truecaller-ஐ யூஸ் பண்ணிட்டோமே!ஓ மை காட்! இந்த மேட்டர் தெரியாம இவ்ளோ நாள் Truecaller-ஐ யூஸ் பண்ணிட்டோமே!

இதில் வேறு என்னென்ன அம்சங்கள் கவனிக்கத்தக்கது?

இதில் வேறு என்னென்ன அம்சங்கள் கவனிக்கத்தக்கது?

ஹாட்வாவ் நிறுவனத்தின் இந்த புதிய ரக்டு ஸ்மார்ட்போன், இராணுவ தர நிலைத்தன்மையை வழங்குவதற்காக MIL-STD810H சான்றிதழை பெற்றுள்ளது.

இதன் நீர்-எதிர்ப்பு வடிவமைப்பானது IP68 மற்றும் IP69K என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தவிர இது நான்கு சாட்டிலைட் நேவிகேஷன் சிஸ்டம்களையும் (satellite navigation systems) - GPS, GLONASS, Beidou மற்றும் Galileo வழங்குகிறது.

ஸ்மார்ட்போன் செக்யூரிட்டியை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது, உடன் இது ஃபேஸ் அன்லாக் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது.

ஆகமொத்தம் ஹாட்வாவ் W10 ஸ்மார்ட்போன் ஆனது எந்தவொரு 10,000 ரூபாய் பட்ஜெட் ஸ்மார்ட்போனிற்கும் சளைத்தது அல்ல; அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் இதை எத்தனை பேர் நம்பி வாங்குவார்கள் என்பதில் தான் இங்கே இருக்கும் மிகப்பெரிய கேள்வி!

Photo Courtesy: Hotwav Website

Best Mobiles in India

English summary
Rugged Smartphone with 15000mAh Battery called Hotwav W10 launched. Check Price and other Specification

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X