தமிழக பள்ளிக்கூடங்களில் கடுமையான காற்று மாசு: கண்டுபிடித்த 15 வயது சிறுவன்

|

தலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகைக்கு பிறகு காற்றுமாசுபாடு அதிகரித்த வண்ணம் உள்ளது. அதோடு குர்கான், நொய்டா உள்ளிட்ட பகுதிகளிலும் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 1 ஆம் தேதி அந்த மாநிலத்தில் மருத்துவ அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

பள்ளிகளுக்கு விடுமுறை:

டெல்லியில் காற்று மாசுபாடு அபாயக்கட்டத்தை எட்டியதையடுத்து அங்குள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேபோல் அதிக புகையை வெளிப்படுத்தும் தொழிற்சாலைகளை இரண்டு நாட்களுக்கு விடுமுறைவிடவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதோடு விமானத்தில் டெல்லி செல்லும் பயணிகளுக்கு முகமூடி வழங்கப்படும் என தனியார் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

குறியீட்டு அளவை கடந்த சென்னை

குறியீட்டு அளவை கடந்த சென்னை

காற்று மாசை கணக்கிடும் தரக்குறியீட்டு அளவின்படி இயல்பாக 50 இருக்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். டெல்லியில் இந்த அளவு 600 கடந்துள்ளது. இதையடுத்து சென்னையில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டு வந்தது. மணலியில் 358, வேளச்சேரி 289, ஆலந்தூர் 237 ஆகிய அளவை கடந்ததாக கூறப்படுகிறது.

ஆர்வலர்கள் கூறும் தகவல்

ஆர்வலர்கள் கூறும் தகவல்

சென்னையில் கடல் உள்ளதால் முழுமையாக காற்றுமாசுபாட்டை உள்வாங்கி கொள்ளும் என்ற கூறுவது தவறு என சுற்றுச்சூழல் ஆர்வலர் தெரிவிக்கின்றனர். மேலும் காற்று மாசுபாடு சென்னையில் பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் இதனால் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

காற்று மாசை கண்டுபிடித்த சிறுவன்

காற்று மாசை கண்டுபிடித்த சிறுவன்

இந்த நிலையில் சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த அதுல் மேத்தியூ என்ற 15 வயது சிறுவன் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் சென்னையில் கோடம்பாக்கம், பெசன்ட்நகர், வடபழனி, தண்டையார்ப்பேட்டை, திருவான்மியூர், ராயபுரம், தியாகராயநகர் அசோக் நகர், திரு.வி.க.நகர், நுங்கம்பாக்கம் உள்பட 14 இடங்களில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் காற்றுமாசுபாடு உள்ளதா என்ற ஆய்வை நடத்தி இருக்கிறார்.

காற்று மாசு அளவிடும் கருவியை இயக்கிய சிறுவன்

காற்று மாசு அளவிடும் கருவியை இயக்கிய சிறுவன்

அதுல் மேத்தியூ, காற்று மாசு அளவிடும் கருவியை கொண்டு (ஏரோசோல் மானிட்டர்) 14 பள்ளிக்கூடங்களில் எடுத்த ஆய்வை ஒப்பிட்டு பார்க்கும்போது, அனைத்து பள்ளிகளிலும் காற்று மாசு இருப்பதாக கூறியுள்ளார். குறிப்பாக, அதிகபட்சமாக மயிலாப்பூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில், அங்கு கடுமையாக காற்று மாசுபட்டிருப்பதாகவும், 8 பள்ளிக்கூடங்களில் மிகவும் மோசமான மாசு இருப்பதாகவும் அந்த சிறுவன் தெரிவித்துள்ளார்.

Pic courtesy: Social Media

Best Mobiles in India

Read more about:
English summary
15-year-old boy was found Heavy air pollution in Chennai schools.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X