செம்ம பட்ஜெட், செம்ம ஹிட், ஆனாலும் சொதப்பல்..!

|

"என்னடா ரொம்ப பெருசு பெருசா 'பில்ட் அப்' பண்ணீங்க..!! கடைசில இப்படி சப்பையா பண்ணீடீங்க.??? - என்பது தான் 'சில' திரைப்படங்களை பார்த்த நமக்கு தோன்றும் 'முதல் வகை' மைண்ட் வாய்ஸ் ஆகும். இரண்டாம் வகை, மூன்றாம் வகை மைண்ட் வாய்ஸ் எல்லாம் வேற லெவலில் இருக்கும்.

21-ஆம் நூற்றாண்டின் தலைச்சிறந்த திரைப்படங்கள்..!

அப்படியாக நமக்கு மிகவும் பிடித்த, நாம் அதிகம் எதிர்பார்க்கும் பிரம்மாண்டமான திரைப்படங்களில் ஏதாவது ஒரு சொதப்பல் இருந்தால் கூட, வரும் பாருங்க ஒரு கடுப்பு. அப்படியான டாப் 15 ஹிட் திரைப்படங்களில் நிகழ்த்தப்பட்ட விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப சொதப்பல்களைதான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

15. தி மம்மி ரிடர்ன்ஸ் :

15. தி மம்மி ரிடர்ன்ஸ் :

2001-ஆம் ஆண்டில் வெளியான இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி வீஷூவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளானது.

லாபம் :

லாபம் :

இருந்த போதிலும் பட்ஜட்டை (98 மில்லியன் டாலர்கள்) விட மிகமிக அதிக லாபம் பார்த்தது (433 மில்லியன் டாலர்கள்) என்பது குறிப்பிடத்தக்கது.

14. ரோபோகாப் :

14. ரோபோகாப் :

1987-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தின் பட்ஜட் 13 மில்லியன் டாலர்கள் ஆகும்.

பரிந்துரை :

பரிந்துரை :

அகடமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்படும் அளவு சிறந்த படமாக இருந்தும், கிராஃபிக்ஸ் காட்சிகளில் மிகவும் சொதப்பி விட்டது.

13. ஃப்ரெட்டி வெஸ் ஜேசன் :

13. ஃப்ரெட்டி வெஸ் ஜேசன் :

2004-ஆம் ஆண்டு வெளியான திகில் படம் இதில் அனைத்துமே சிறப்பான முறையில் கையாளப்பட்டு இருந்தது.

மிக மோசம் :

மிக மோசம் :

ஆனால் 'வீட் கேட்டர்பில்லர்' என்று காட்சிப்படுத்தப்பட்ட விஎப்எக்ஸ் உருவம் மட்டும் மிக மோசமான விமர்சனங்களை பெற்றது.

12. கோஸ்ட்பஸ்டார்ஸ் 2 :

12. கோஸ்ட்பஸ்டார்ஸ் 2 :

1989-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தின் மொத்த வசூல் 215 மில்லியன் டாலர்கள் ஆகும்.

மோசம் :

மோசம் :

இருப்பினும் திரைப்படத்தில் வரும் சில விஎப்எக்ஸ் காட்சிகளின் நிலை மிக மோசம்.

11. டோட்டல் ரீகால் :

11. டோட்டல் ரீகால் :

1990-ஆம் ஆண்டு வாக்கில் வெளியான திரைப்படங்களிலேயே மிகவும் அதிக செலவில் (65 மில்லியன் டாலர்கள்) வெளியான படம் தான் இது..!

விருது :

விருது :

வீஷூவல் எஃபெக்ட்ஸ்காக விருது பெற்ற இந்த படத்தில், குண்டு பெண் உருவில் இருந்து அர்னால்ட் வரும் காட்சியை பார்த்தால் எப்படி இந்த படம் வீஷூவல் எஃபெக்ட்ஸ்காக விருது பெற்றது என்று கேட்க தோன்றும்.

10. தி ஃப்யூஜிடிவ் :

10. தி ஃப்யூஜிடிவ் :

1993-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தின் பட்ஜெட் வெறும் 44 மில்லியன் டாலர்கள் தான். ஆனால் லாபமோ 369 மில்லியன் டாலர்கள் ஆகும்.

'டம்மி' :

'டம்மி' :

இருப்பினும் இந்த படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட 'டம்மி' மற்றும் அதை திரையில் மோசமான வீஷூவல் எஃபெக்ட்ஸ் மூலம் காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

09. எஸ்கேப் ஃப்ரம் எல்.ஏ :

09. எஸ்கேப் ஃப்ரம் எல்.ஏ :

1996-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தின் வசூல் 25 மில்லியன் மட்டுமே அதாவது பட்ஜெட்டில் பாதியை தான் மீட்டு எடுத்தது.

சுனாமி காட்சி :

சுனாமி காட்சி :

முக்கியமாக இந்த திரைப்படத்தில் வரும் சுனாமி காட்சி, பயங்கரமாக இருப்பதற்கு பதில் மிகவும் குழந்தைத்தனமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

08. இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி கிங்டம் ஆஃப் தி க்ரிஸ்டல் ஸ்கல் :

08. இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி கிங்டம் ஆஃப் தி க்ரிஸ்டல் ஸ்கல் :

2008-ஆம் ஆண்டில் வெளியான இந்த திரைப்படத்தில் மொத்தம் 450 வீஷூவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

காட்டு எறும்புகள் :

காட்டு எறும்புகள் :

இருப்பினும் காட்டு எறும்புகள் மூலம் சோவியத் வில்லன் ஒருவர் கொல்லப்படும் விஎஃப்எக்ஸ் காட்சி மிகவும் விமர்சனத்திற்கு உள்ளானது.

07. ஏர் ஃபோர்ஸ் ஒன் :

07. ஏர் ஃபோர்ஸ் ஒன் :

1997-ஆம் ஆண்டு வெளியான இந்த பிரபல திரைப்படத்தின் மொத்த வசூல் 315 மில்லியன் டாலர்கள் ஆகும்.

தரை இறங்கும் காட்சி :

தரை இறங்கும் காட்சி :

இருப்பினும் விமானம் கடலில் தரை இறங்கும் காட்சியில் நல்ல முறையில் விஎஃப்எக்ஸ் எஃபெக்ட்ஸ் பயன்படுத்தப்படவில்லை என்பதும், வீடியோ கேமை ஞாபகப்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

06. டீப் ப்ளூ ஸீ :

06. டீப் ப்ளூ ஸீ :

1999-ஆம் ஆண்டு வெளியான இந்த த்ரில்லர் திரைப்படத்தில் அடுத்தது என்ன என்ற திகிலுக்கு பஞ்சமே இருக்காது.

சுறா :

சுறா :

இருப்பினும் இந்த படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட சுறா 'டம்மி'கள் விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

05. ப்லேட் 2:

05. ப்லேட் 2:

2002-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அமெரிக்காவில் மட்டுமே சுமார் 80 மில்லியன் டாலர்கள் வசூலை தந்தது.

சண்டைக்காட்சி :

சண்டைக்காட்சி :

இருப்பினும் திரைப்படத்தில் வரும் பெரும்பாலான சண்டைக்காட்சிகள் வீடியோ கேம் பார்ப்பது போலயே தான் இருக்கும்.

04. கேட் வூமன் :

04. கேட் வூமன் :

2002-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தின் பட்ஜெட் 100 மில்லியன் டாலர்கள் ஆகும் ஆனால் வசூலோ வெறும் 90 மில்லியன் டாலர்கள் தான்.

அனிமேஷன் காட்சி :

அனிமேஷன் காட்சி :

அந்த அளவிற்கு அனிமேஷன் காட்சிகளில் சொதப்பியது படக்குழு.

03. கிங் காங் :

03. கிங் காங் :

2005-ஆம் ஆண்டில் வெளியான இந்த திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 207 மில்லியன் டாலர்கள் ஆகும்.

கிரீன் மேட் பின்னணி :

கிரீன் மேட் பின்னணி :

படத்தில் ஒரு காட்சியில் டைனோஸர்களின் கால்களுக்கு அடியில் கதாப்பாத்திரங்கள் ஒடி தப்ப தப்பிபார்கள், அது கிரீன் மேட் பின்னணி காட்சி என்பதை நிரூபிக்கும் வண்ணம் இருக்கும் என்பதே நிதர்சனம்.

02. ஐ யம் லேஜண்ட் :

02. ஐ யம் லேஜண்ட் :

2007-ஆம் ஆண்டில் வெளியான இந்த திரைப்படத்தில் நியூயார்க் நகரமே யாருமின்றி காட்டப்படும் காட்சிகளில் அற்புதமான முறையில் எல்லாம் விஎஃப்எக்ஸ் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

ஸோம்பி மனிதர்கள் :

ஸோம்பி மனிதர்கள் :

அதே அளவிலான விஎஃப்எக்ஸ் கொண்டு திரைப்படத்தில் வரும் ஸோம்பி மனிதர்களையும் மேலும் மெருகேற்றி காட்சிப்படுத்தி இருக்கலாம்.

01. கிரீன் லேடர்ன் :

01. கிரீன் லேடர்ன் :

2011-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தின் பட்ஜெட் 220 மில்லியன் டாலர்கள் ஆகும்.

 திணிப்பு :

திணிப்பு :

திரைக்கதைகாக பெரிய அளவிலான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படத்தில் அதிகப்படியான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் திணிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
டாப் 15 ஹிட் திரைப்படங்களில் நிகழ்த்தப்பட்ட விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப சொதப்பல்கள். மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X