சுந்தர்பிச்சை : சும்மா ஜெயிக்க முடியுமா.? போராடனும், இதோ எடுத்துக்காட்டு.!

சுந்தர்பிச்சை கரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி.யில் உலோகப் பொறியியல் பட்டம் பெற்றார்.!

By Prakash
|

சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள்இல் இணைந்தார். இவர் கூகிள் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது கூகிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார்.

தமிழ் நாட்டில் மதுரை மாவட்டதில் பிறந்தார். இவரது பெற்றோர் லட்சுமி மற்றும் ரகுநாத பிச்சை. அவருடைய குழந்தைப் பருவத்தில் தொலைக்காட்சியைப் பார்ப்பது அல்லது கார் மூலம் பயணிக்கும் ஆடம்பரத்தை அனுபவித்ததில்லை.

 கூகிள்:

கூகிள்:

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி கூகிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக அறிவிக்கப்பட்டார். இது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியது. இந்தியாவில் பிறந்த ஒரு இந்தியக் குடிமகன் டெக் இன் சி.இ.ஓ.க்களின் பட்டியலுக்கு வந்தது ஒரு பெருமிதமான தருணம்.

கிரிக்கெட்:

கிரிக்கெட்:

அவர் எண்களை நினைவில் வைத்து நினைவுபடுத்துவதன் அசாதாரண திறமைக் கொண்டவர். அவர் டயல் செய்த அனைத்து எண்களையும் மனதில் வைத்திருப்பார். பிச்சை பள்ளியில் மிகச்சிறந்த மாணவர் ஆவார். மேலும் உயர்நிலை பள்ளி கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் இருந்தார்.

அஷோக் நகர்:

அஷோக் நகர்:

சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயாவில் பள்ளியில் தனது பத்தாம் வகுப்பு வரைப்படித்தார் சுந்தர். பின் அஷோக் நகர் உள்ள வாணி பள்ளியில் 12 வது வகுப்பு முடித்தார்.

மதுரை:

மதுரை:

சுந்தர்பிச்சை தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மதுரையை சார்ந்தவர், இவர் 1972 ஆம் ஆண்டு ஜூலை 12 இல் பிறந்தார்.

குழந்தைப் பருவத்தில்:

குழந்தைப் பருவத்தில்:

இவர் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய குழந்தைப் பருவத்தில் தொலைக்காட்சியைப் பார்ப்பது அல்லது கார் மூலம் பயணிக்கும் ஆடம்பரத்தை அனுபவித்ததில்லை.

தந்தை:

தந்தை:

இவர் தந்தை ரகுநாத் பிச்சை, சென்னையில் ஜெனரல் எலக்ட்ரிட்டில் மின் பொறியாளராக பணியாற்றினார், சென்னையில் உள்ள அசோக் நகரில் வசித்து வந்தனர்.

வேலை:

வேலை:

பின்பு அவரது தந்தை ஒரு தொழிற்சாலை மேலாளராக இருந்தார், அதுவே சுந்தர்பிச்சைக்கு மின்சார பொருள்களுக்கான கூறுகளை உருவாக்கியது. பின் அவரது தந்தை எதிர்கொள்ளும் வேலைகளை மிகவும் பிடித்ததாக தெரிவித்தார் சுந்தர்பிச்சை.

லேண்ட்லைன்போன்:

லேண்ட்லைன்போன்:

அவருடைய தந்தை வீட்டிற்கு ஒரு லேண்ட்லைன்போன் வாங்கினார், அதுவே பிச்சை தனது 12வயதில் கைகளில் பார்த்த முதல் தொழில்நுட்பம் ஆகும்.

உலோகப் பொறியியல்:

உலோகப் பொறியியல்:

சுந்தர்பிச்சை கரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி.யில் இருந்து உலோகப் பொறியியல் பட்டம் பெற்றார்.

பொருள் அறிவியல் :

பொருள் அறிவியல் :

அவர் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பொருள் அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் ஆகியவற்றில் எம்.எஸ் (முதுநிலை அறிவியல் துறை) முடித்தார். பின்னர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் வார்டன் பள்ளியிலிருந்து எம்பிஏ முடித்தார்.

 மெக்கின்சே - கம்பெனி:

மெக்கின்சே - கம்பெனி:

சுந்தர்பிச்சை தனது கூகிள் நாட்களுக்கு முன்னர் (மெக்கின்சே - கம்பெனியில் )பணிபுரிந்தார். அப்ளிகேஷன் மெட்டிகளிலுள்ள பொறியியல் மற்றும் தயாரிப்பு மேலாண்மைகளில் சிறந்த திறமையைப் பெற்றார்.

 கூகிள் கியர்ஸ்:

கூகிள் கியர்ஸ்:

பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகிள் நிறுவனத்தில் இணைந்தார், கருவிப்பட்டை போன்ற பிரபலமான தயாரிப்புகளில் பணிபுரிந்திருப்பதாக தெரிவித்தார். கூகிள் கியர்ஸ் மற்றும் கூகுள் பேக் ஆகியவற்றிலும் அவர் பணியாற்றினார்.

 சிஇஒ:

சிஇஒ:

அவர் 2008 இல் தயாரிப்பு மேம்பாட்டுக்கான விபி ஆக நியமிக்கப்பட்டார், அவர் குரோம் உலாவியை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். 2015 ஆம் ஆண்டில், சிஇஒ பதவிக்கு வந்தார் பிச்சை.

அஞ்சலி:

அஞ்சலி:

சுந்தர் பிச்சை தனது நீண்டகால காதலியான அஞ்சலியை மணந்தார். அவர்கள் ஐ.ஐ.டி காரக்பூரில் சேர்ந்து படிக்கும்போது வகுப்பு தோழர்களாக இருந்தார்கள்.

அமெரிக்க குடிமகன்:

அமெரிக்க குடிமகன்:

அஞ்சலி மற்றும் சுந்தர்க்கு அழகிய ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். 6.8 மில்லியன் அளவில் நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் என்ற இடத்தில் ஒரு வீடு வாங்கியிருக்கிறார். இப்போது ஒரு அமெரிக்க குடிமகனாக இருப்பதால், அவர் தனது குடும்பத்தாரோடு அங்கு வசிக்கிறார்.

Best Mobiles in India

Read more about:
English summary
15 Things You Didn’t Know About Sundar Pichai : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X