அடுத்து மனிதர்களா?- நியூரோலிங்க் சிப் பொருத்தப்பட்ட 23 குரங்குகளில் 15 இறப்பு: எலான் மஸ்க் நிறுவனத்தின் சோதனை!
நியூரோலிங்க் நிறுவனம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் மனித சோதனையைத் தொடங்க இருந்ததாக சமீபத்திய அறிக்கை தெரிவித்த நிலையில், இதன் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 23 குரங்குகளில் 15 குரங்குகளை இறந்துள்ளன.

எலான் மஸ்க் என்றால் தனித்துவம்
உலகம் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறிக் கொண்டே தான் இருக்கிறது. முன்னற்றம் என்பது தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை வைத்தே கணிக்கப்படுகிறது என்றால் அது மிகையல்ல. வளரும் தொழில்நுட்பங்கள் நம்மை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துக் கொண்டு செல்கிறது. எலான் மஸ்க் என்றால் தனித்துவம் என்றே கூறலாம். அவர் கனவுத்திட்டங்கள் எல்லாம் உலகத்தை அடுத்துக் கட்டத்தை நோக்கி செலுத்தும் விதமாகவே இருக்கும். எலான் மஸ்க் என்றதும் நினைவுக்கு வருவது டெஸ்லா நிறுவனம். ஆனால் அதையும்தாண்டி எலான் மஸ்க் கனவுத்திட்டத்தின் நிறுவனமாக இருப்பது ஸ்பேஸ் எக்ஸ், நியூரோலிங்க் ஆகும்.

மூளைக்குள் பொருத்தப்படும் சிப்
எலான் மஸ்க்கின் நியூராலிங் நிறுவனம் குரங்கின் மூளைக்குள் சிப் ஒன்றை பொருத்தி சோதனை செய்து வருகிறது. குரங்கின் உடலுக்குள் கருவி எங்கே உள்ளது என்றே யாராலும் கண்டுபிடிக்க முடியாது எனவும் இதன்மூலம் குரங்கு மூளைக்குள்ளேயே வீடியோ கேம் விளையாடுவதாகவும் மஸ்க் கூறினார். எலோன் மஸ்க்-ன் நியூரோலிங் நிறுவனம், 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இயந்திரங்களோடு நேரடியாக இணைக்கும் தொழில்நுட்ப முயற்சி
இந்த நிறுவனம் மனிதனின் மூளையை இயந்திரங்களோடு நேரடியாக இணைக்கும் தொழில்நுட்ப முயற்சியை ஆராய்ந்தது. இதன் ஒருபகுதியாக குரங்கின் மூளைக்குள் சிப் பொறுத்தி சோதனை செய்யப்பட்டது. அந்த குரங்கின் மூளை போங்க் விளையாட்டு பிறருடன் விளையாடி வருவதாகவும், மூளை மற்றும் முதுகெலும்பு காயங்களை குணப்படுத்த இந்த தொழில்நுட்பம் உதவும் எனவும் அதோடு பொருத்தப்பட்ட சிப்பின் மூலம் நபர்கள் இழந்த திறனை உருவாக்கவும் முடியும் என மஸ்க் கடந்த பிப்ரவரி மாதம் கூறினார்.

குரங்குகளின் மண்டை ஓடுக்குள் சிப்
எலோன் மஸ்க்கின் நியூரோலிங்க் நிறுவனம் குரங்குகளின் மண்டை ஓடுக்குள் சிப்வைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த சோதனையில் குரங்குகள் அதிதீவிர பாதிப்புகளுக்கு ஆளாகி இருப்பதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அரசு துறைக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 23 குரங்குகள் இதுவரை சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சோதனையானது 2017 முதல் 2020 வரை நடைபெற்றது. இந்த சோதனையில் குரங்குகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி இருக்கிறது.
சுமார் 23 குரங்குகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது
இதுவரை சுமார் 23 குரங்குகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது எனவும் இதில் தற்போது ஏழு குரங்குகள் மட்டுமே உயிரோடு இருக்கிறது. 15 குரங்குகள் கொல்லப்பட்டு இருக்கின்றன என தெரிவிக்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்த பிறகே இதன் உண்மை தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அறிக்கையை கலிபோர்னியா டேவிஸ் பல்கலைக்கழகத்தில் சோதனையின் போது நியூரோலிங்க் பொருத்தப்பட்ட 23 குரங்குகளில் குறைந்தது 15 குரங்குகள் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மிகவும் பலவீனமான உடல்நலப் பாதிப்புகள்
தலையில் சிப் பொருத்தப்பட்ட ஒவ்வொரு குரங்குகளும் மிகவும் பலவீனமான உடல்நலப் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளன என பிசிஆர்எம்-ன் ஆராய்ச்சி வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் விலங்குகளை வெளிப்படையாக ஊனப்படுத்தி கொன்றனர் என அவர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அறிக்கைகளின் படி, குரங்குகளின் மண்டை ஓட்டில் துளையிட்டு இந்த சிப்கள் பொருத்தப்பட்டன என தெரிவிக்கப்படுகிறது.
If you can’t beat em, join em
— Elon Musk (@elonmusk) July 9, 2020
Neuralink mission statement
இந்த ஆண்டின் பிற்பகுதியில் மனித சோதனை
அறுவை சிகிச்சை முடிந்த சிறிது நேரத்திலேயே கட்டுப்பாடில்லாமல் வாந்தி எடுக்கத் தொடங்கியது எனவும் சில நாட்களுக்கு பிறகு சோர்வு ஏற்பட்டு இறந்ததாகவும் விலங்குகளின் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நியூரோலிங்க் இந்த ஆண்டின் பிற்பகுதியில் மனித சோதனைகளை தொடங்கும் என சமீபத்திய அறிக்கை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மனிதனில் மூளையில் சிப் வைக்கும் முயற்சி
மனிதனில் மூளையில் சிப் வைக்கும் முயற்சியின் முன்னோட்ட நடவடிக்கையின் முதற்கட்டமாக பன்றியின் மூளையில் கணினி சிப் வைத்து 2 மாதங்களாக ஆய்வு செய்யப்பட்ட நிகழ்வு நடத்தப்பட்டது. சிப் பொருத்தப்பட்ட நாளில் இருந்தே பன்றி நலமுடனே காணப்பட்டதாக கூறப்பட்டது. கம்பியூட்டர் சிப் பொருத்தம் இந்த பரிசோதனையானது விலங்குகளோடு ஒப்பிடுகையில் மனிதர்களும் கடும் சவாலாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆராய்ச்சி பெரும் வெற்றி மனித வளர்ச்சியை அடுத்த கட்டமல்ல பல்வேறு கட்டத்திற்கு முன்னேற்றும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications