Home
News

அட்டகாசம் பண்ணும் Airtel.. வெறும் ரூ.150-க்கு 15 OTT தளங்களுக்கு இலவச அணுகல்!

வெறும் ரூ.150 க்கு 15க்கும் மேற்பட்ட ஓடிடி (OTT) தளங்களுக்கான இலவச அணுகலை வழங்குமொரு ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் உள்ளதென்று கூறினால்.. காலம் காலமாக ஏர்டெல் சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கூட கொஞ்சம் ஷாக் ஆகலாம். அதென்ன ரீசார்ஜ்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய டெலிகாம் ஆப்ரேட்டரான பார்தி ஏர்டெல், அதன் ப்ரீபெய்ட் தொகுப்பில் ரூ.150 க்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஒரு திட்டத்துடன் 15 க்கும் மேற்பட்ட ஓடிடி (ஓவர்-தி-டாப்) தளங்களுக்கான இலவச அணுகல்களை வழங்குகிறது. அது ரூ.149 ரீசார்ஜ் ஆகும்!

ரூ.150-க்கு 15 OTT தளங்களுக்கான அணுகலை வழங்கும் Airtel ரீசார்ஜ்!

ஏர்டெல் ரூ.149 திட்டத்தின் ஓடிடி நன்மைகள்

சமீபத்தில் ஏர்டெல்லின் ப்ரீபெயிட் தொகுப்பில் சேர்க்கப்பட்ட இந்த திட்டம், எக்ஸ்ட்ரீம் பிரீமியம் பண்டில் டேட்டா வவுச்சர் (Xstream Premium Bundled Data Voucher) என்று அழைக்கப்படுகிறது. அறியாதோர்களுக்கு எக்ஸ்ட்ரீம் பிரீமியம் என்பது ஏர்டெல்லின் இன்-ஹவுஸ் ஓடிடி பிளாட்ஃபார்ம் ஆகும். இது ஒரே ஆப்பின் கீழ் 15 க்கும் மேற்பட்ட ஓடிடி நன்மைகளுடன் வருகிறது.

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் நன்மைகள் VS எக்ஸ்ட்ரீம் பிரீமியம் நன்மைகள்: என்ன வித்தியாசம்?

ரூ149 திட்டத்தை, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப்ஸின் (Airtel Xstream App) நன்மைகளுடன் வரும் ஒரு சாதாரண டேட்டா வவுச்சர் என்று தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம். பார்தி ஏர்டெல் வழங்கும் பெரும்பாலான ப்ரீபெய்ட் திட்டங்களுடன் வரும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் நன்மைக்கும், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியமின் நன்மைக்கும் பெரிய வித்தியாசம் உண்டு.

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் வழியாக, எக்ஸ்ட்ரீம் பிரீமியமில் உள்ள ஓடிடி பிளாட்ஃபார்ம்களில் ஏதேனும் ஒன்றிற்கான அணுகலை மட்டுமே பெற முடியும். ஆனால் ரூ.149 டேட்டா வவுச்சரை ரீசார்ஜ் செய்வதன் வழியாக கிடைக்கும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியமின் கீழ் 15 க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகலை பெறுவீர்கள்!

ஏர்டெல் ரூ.149 திட்டத்தின் வேலிடிட்டி

ஓடிடி நன்மைகளை தவிர்த்து இந்த திட்டத்தின் கீழ் 1ஜிபி டேட்டாவும் கிடைக்கும். மேலும் இந்த பேக்கின் வேலிடிட்டி உங்களிடம் ஏற்கனவே இருக்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் உடன் ஒற்றுப்போகும். கண்டிப்பாக இது டேட்டாவை விரும்பும் பயனர்களுக்கான ஒரு திட்டம் அல்ல. மாறாக இது பல வகையான ஓடிடி கன்டென்ட்களை விரும்புபவர்களுக்கான ஒரு திட்டமாகும்.

இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் ஓடிடி தளங்களை எந்தெந்த டிவைஸ்கள் வழியாக பார்க்கலாம்?

ஏர்டெல்லின் ரூ.149 டேட்டா வவுச்சரின் மூலம் எக்ஸ்ட்ரீம் பிரீமியத்திலிருந்து அணுக கிடைக்கும் கன்டென்ட்களுக்கு எந்தவிதமான டிவைஸ் தொடர்பான கட்டுப்பாடுகளும் கிடையாது. அதாவது நீங்கள் ஸ்மார்ட்போன்களையும் பயன்படுத்தலாம் அல்லது ஸ்மார்ட் டிவி அல்லது பெர்சனல் கம்ப்யூட்டர் / லேப்டாப் வழியாகவும் கூட ஓடிடி கன்டென்ட்களை பார்க்கலாம்!

ஒருவேளை நீங்கள் ஏர்டெல் 5ஜி-க்கு அப்கிரேட் ஆகி இருந்தால், ரூ.149 டேட்டா வவுச்சரானது இன்னும் சிறப்பானதொரு ஓடிடி ரீசார்ஜ் ஆக இருக்கும். நினைவூட்டும் வண்ணம் ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவைகள் இந்தியாவில் உள்ள 125 க்கும் மேற்பட்ட நகரங்களில் அறிமுகமாகி விட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
15 OTT Platforms For Just Rs 150 Check Airtel Xstream Premium Bundled Data Voucher Benefits Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X