15 OTT-க்கான அணுகல் வெறும் 149 ரூபாயிலா? Airtel-ன் புது திட்டத்தில் திகட்டாத நன்மை!
கேபிள் டிவியில் சீரியல் பார்ப்பதைத் தவிர்த்து, மக்கள் இப்போது பெரும்பாலும் OTT தளங்களில் புதிய திரைப்படம் மற்றும் சீரிஸ்களை பார்க்க துவங்கிவிட்டனர். இந்தியாவில் OTT தளங்களின் பயன்பாடும் அதிகரித்துக்கொண்டே போகிறது. OTT சேவையை பயன்படுத்திக்கொண்டிருக்கும் நபர்களே கொஞ்சம் கவனிங்க!
ஒவ்வொரு OTT தளத்திலும் வெவ்வேறு விதமான உள்ளடக்கங்கள் இருக்கிறது. வெவ்வேறு விதமான உள்ளடக்கங்களைப் பார்ப்பதற்கு நாம் தனித்தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டியதுள்ளது. இது நிச்சயமாகப் பயனர்களின் பாக்கெட்டில் ஒரு பெரிய ஓட்டையை விடுத்துவிடுகிறது. இதனை உணர்ந்த ஏர்டெல் நிறுவனம், அதன் டேட்டா வவுச்சர் வழியாக 15 OTT சேனலுக்கான அணுகலை வெறும் ரூ.149 விழியில் வழங்குகிறது.

பார்தி ஏர்டெல் நிறுவனம் இரண்டு 4ஜி டேட்டா வவுச்சர்களை வழங்குகிறது. அவை ஒன்றுக்கொன்று மிகவும் விலை உயர்ந்தவையா என்றால், வெறும் 1 ரூபாய் வித்தியாசத்தில் ஏர்டெல் 2 திட்டங்களை வழங்கியுள்ளது. இங்கு நாம் பேசும் திட்டங்கள் ரூ.149 மற்றும் ரூ.148 என்ற விலையில் வருகிறது. இரண்டு திட்டங்களும் டேட்டா வவுச்சர்களாக வருகிறது. அதாவது இவை டேட்டாவுடன் கூடுதல் OTT சேவையுடன் மட்டுமே வருகின்றன.
குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் போன்ற வேறு எந்த நன்மைகளும் இதில் இல்லை. பயனாளர் செல்லுபடியாகும் திட்டத்தைத் தேடினால், இந்தத் திட்டங்களுக்கு அவர் குழுசேர முடியாது. இந்தத் திட்டங்கள் நுகர்வோருக்கு டேட்டா பயன்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. இரண்டு வவுச்சர்களுக்கும் இடையே என்ன வேறுபாடுகள் உள்ளன, எந்த மாதிரியான நன்மைகளை இந்த திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு தருகின்றன என்பதை பார்க்கலாம் வாங்க.
பார்தி ஏர்டெல் சமீபத்தில் அதன் சலுகைகளில் ரூ.149 டேட்டா வவுச்சரைச் சேர்த்தது. ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியத்திற்கான சந்தாவை விரும்பும் மக்கள் இதை வாங்கும் வகையில் இந்த திட்டத்தை ஏர்டெல் அமைத்துள்ளது. ஏர்டெல் ரூ.149 திட்டம் 1ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இது பயனரின் அடிப்படை ப்ரீபெய்ட் திட்டம் காலாவதியாகும் வரை செல்லுபடியாகும். இந்த திட்டம் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியத்திற்கு 30 நாட்களுக்கு இலவச சந்தாவையும் வழங்குகிறது.

இந்த திட்டத்தின் சிறப்பே, இது 15-க்கும் மேற்பட்ட OTT ஆப்ஸ் உள்ளடக்கங்களை பயனருக்கு வழங்குகிறது. ஏர்டெல் வழங்கும் ரூ.148 திட்டமானது 15ஜிபி டேட்டாவுடன் வருகிறது. ரூ.149 திட்டத்தை விட 1 ரூபாய் மலிவு விலையில் இருந்தாலும், ரூ.148 திட்டமானது 14ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. அதாவது இது மொத்தம் 15 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் தொகுப்பு எதுவும் இல்லை.
இது பயனர்களுக்கு 28 நாட்களுக்கு எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப்ஸ்-க்கான அணுகலை வழங்குகிறது. இருப்பினும் பயனர்கள், OTT உள்ளடக்கத்தைப் பயன்படுத்த முடியும். OTT தளங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் சந்தா மூலம், பயனர்கள் எல்லா தளங்களிலிருந்தும் உள்ளடக்கத்தை பயன்படுத்தலாம். இந்தத் திட்டத்தில் உள்ள டேட்டாவின் செல்லுபடியாகும் தன்மை, பயனரின் அடிப்படை ப்ரீபெய்ட் திட்டத்திற்குச் சமம்.
இரண்டு திட்டங்களும் வெவ்வேறு விஷயங்களைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கானவை. ரூ.149 திட்டம் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் சந்தாவை விரும்பும் பயனர்களுக்கானது. அதேபோல், ரூ.148 திட்டம் அதிக டேட்டாவை விரும்பும் நுகர்வோருக்கானது. உங்களுக்கு எது சரியானது என்பதை நீங்களே தேர்வு செய்துகொள்ளுங்கள். உங்கள் தேர்வு எது என்பதை, கமெண்டில் காரணத்துடன் பதிவிடுங்கள்.


Click it and Unblock the Notifications








