அடுத்தடுத்த அறிவிப்பு: இந்தியாவில் கூடுதலாக 15 சீன செயலிக்கு தடையா?

|

இந்தியாவில் கூடுதலாக 15 சீன செயலிகளுக்கு தடை விதிக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

15 சீன செயலிகளுக்கு தடை

15 சீன செயலிகளுக்கு தடை

தனியார் செய்திநிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்திய அரசு 15 சீன செயலிகளை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது போட்டோ எடிட்டர் ஏர்பஷ், மெய்பய், பாக்ஸ்கேம் உள்ளிட்ட செயலிகள் உள்ளடக்கம். இதில் பிரபல ஆண்ட்ராய்டு செயலிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சியோமி எம்ஐ ப்ரவுசர் ப்ரோ

சியோமி எம்ஐ ப்ரவுசர் ப்ரோ

நெட்கேஷ், ஹீரோஸ் வார், ஸ்லைட் ப்ளஸ் ஆகியவையும் இந்த தடை செய்யப்படும் பயன்பாடிகளில் அடங்கும். குறிப்பாக சியோமி எம்ஐ ப்ரவுசர் ப்ரோ இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக பெய்டு தேடுதளம், மற்றும் பெய்டு தேடுதளம் லைட் ஆகியவும் இந்த தடைகளில் அடங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

திரும்பி வர முயற்சித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்

திரும்பி வர முயற்சித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்

இதில் எந்த ஒரு பயன்பாடுகளும் மாற்று பெயரில் திரும்பி வர முயற்சித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும்

சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும்

லடாக் எல்லையில் சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதன் எதிரொலியாக சமூகவலைதளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து பதிவிட்டனர். அதில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீன செயலிகளை பயன்படுத்தக் கூடாது போன்ற குரல்கள் மேலோங்கி வந்தது.

இந்தியர்களின் தகவல்கள் சீனாவின் வசம்

இந்தியர்களின் தகவல்கள் சீனாவின் வசம்

அதேபோல் உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில் தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பான CERT குறிப்பிட்ட சீன செயலிகளை நீக்க வேண்டும் என்றும் சில செயலிகள் மூலம் இந்தியர்களின் தகவல்கள் சீனாவின் வசம் சென்று கொண்டிருப்பதாகவும், இதன்மூலம் இந்தியாவிற்கு எதிராக நடவடிக்கையை சீன மேற்கொள்ள வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்தியா சீனா பிரச்சனைகளுக்கு நடுவில் இந்த செயலிகள் மூலம் பின்வாசல் வழியாக சீனா இந்தியாவுக்குள்ளான தகவல் தொடர்பை துண்டிக்க முயலும் எனவும் கூறப்பட்டு வந்தது.

59 சீன செயலிகளுக்கு தடை

59 சீன செயலிகளுக்கு தடை

இந்த நிலையில் டிக்டாக், ஷேர் இட், யூசி பிரவுசர், ஹலோ ஆப் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த பட்டியலில் இந்தியாவில் பிரதான பயன்பாடாக இருக்கும் பல்வேறு செயலிகளும் இடம்பெற்றுள்ளது.தடை செய்யப்பட்ட செயலிகளின் க்ளோன் அதாவது உண்மையை பிரதபலிக்கும் செயலிகள்(லைட்) பதிப்புகளாக இருந்த செயலிகள் உட்பட 47 செயலிகளுக்கு அடுத்ததாக தடை விதிக்கப்பட்டது.

இது நடந்தால் அது நடக்கும்: கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும்- கணித்து கூறிய பில்கேட்ஸ்!இது நடந்தால் அது நடக்கும்: கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும்- கணித்து கூறிய பில்கேட்ஸ்!

130 கோடி இந்தியர்களின் தனியுரிமையைப் பாதுகாத்தல்

130 கோடி இந்தியர்களின் தனியுரிமையைப் பாதுகாத்தல்

இதுதொடர்பாக இந்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், தரவு பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் மற்றும் 130 கோடி இந்தியர்களின் தனியுரிமையைப் பாதுகாத்தல் குறித்து கடுமையான கவலைகள் உள்ளன. இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்பும் அச்சுறுத்தலாக இருப்பதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

250-க்கும் மேற்பட்ட சீன செயலிகள் பட்டியல்

250-க்கும் மேற்பட்ட சீன செயலிகள் பட்டியல்

சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான விதிகளை முன்னதாகவே கடுமையாக்கியுள்ள நேரத்தில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும் 250-க்கும் மேற்பட்ட சீன செயலிகள் பட்டியலிடப்பட்டிருப்பதாகவும் இந்த செயலிகள் தடை குறித்து தகவல் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. அடுத்தடுத்து சீன செயலிகள் மீதான தடை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.

source: themobileindian.com

Best Mobiles in India

English summary
15 Chinese Apps Banned By India Government- Here the Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X