Home
News

15 வயது சிறுமியின் கெத்து: செல்போன் பறிக்க முயன்ற நபர்- இதுதான் பெண்!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுமியின் செல்போன் பறிக்க முயன்ற நபரிடம் சண்டையிட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

செல்போன் திருட்டு சம்பவம்

செல்போன் திருட்டு சம்பவம்

கண் இமைக்கும் நேரத்தில் செல்போன் திருட்டு சம்பவம் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டே வருகிறது. அதுவும் கூட்டம் அதிகமாக கூடும் இடத்தில் செல்போன் திருட்டு தவிர்க்க முடியாத ஒன்றாக தற்போது மாறி வருகிறது.

 செல்போன் திருட்டு என்பது மோஷமான விஷயம்

செல்போன் திருட்டு என்பது மோஷமான விஷயம்

பணம், நகை திருட்டு என்பதை விட செல்போன் திருட்டு என்பது மோஷமான விஷயம், செல்போன் தானே திருடப்பட்டுள்ளது என்ற சிறு மனஉளைச்சலோடு வேறு செல்போன் வாங்குவதற்கு நாம் சென்று விடுகிறோம்.

சர்வ சாதாரணமாக கடக்கமுடியாத விஷயம்

சர்வ சாதாரணமாக கடக்கமுடியாத விஷயம்

செல்போன் திருட்டு என்பது சர்வ சாதாரணமாக கடந்துவிட முடியாது. நமது மொத்த தகவலும் புகைப்படம் என அனைத்தும் உட்பட வங்கி கணக்கு முதல் செல்போனில் தான் இருக்கிறது. செல்போன் திருட்டு என்பது பணத்திற்காக மட்டும் நடக்கவில்லை. அதை தாண்டி பல்வேறு உள்நோக்கத்துடன் அரங்கேறுகிறது.

15 வயது சிறுமி

15 வயது சிறுமி

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுமியின் செல்போன் பறிக்க முயன்ற நபரிடம் சண்டையிட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

வலிப்பறி கொள்ளையர்கள்

வலிப்பறி கொள்ளையர்கள்

பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் கபுர்தாலா சாலையில் உள்ள தீன் தயால் உபாத்யா நகரின் பகுதியில் வசித்து வருபவர் குசும்குமாரி என்ற 15 வயது சிறுமி இவரின் மொபைலைதான் வலிப்பறி கொள்ளையர்கள் பறிக்க முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர்

இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர்

15 வயது சிறுமி குசும்குமாரி கையில் தனது மொபைலுடன் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் குசும்குமாரியின் செல்போனை பறித்து சென்றனர். உடனடியாக அந்த பெண் அவரை விரட்டு சென்று பிடித்து விடாப்பிடியாக சண்டியிட்டார்.

விடாப்பிடியாக இருந்த சிறுமி

விடாப்பிடியாக இருந்த சிறுமி

மீண்டும் அந்த கொள்ளையன் செல்போனை பறித்து வாகனத்தில் ஏறி தப்பிக்க முயன்றார், விடாமல் அந்த 15 வயது சிறுமி துரத்தி பிடித்து சண்டையிட்டார். உடனே அந்த கொள்ளையன் கூர்மையான ஆயுதத்தால் 15 வயது சிறுமியை தாக்க முயன்றார். இருப்பினும் விடாப்பிடியாக இருந்த அந்த சிறுமி அவரை சமாளிக்க அருகில் இருந்த ஒருவர்வந்து அந்த கொள்ளையனை பிடித்தார்.

செல்போன் பறிக்க முயன்ற சம்பவம்

செல்போன் பறிக்க முயன்ற சம்பவம்

சிறுமியின் மொபைல்போனை கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். சிறுமியிடம் செல்போன் பறிக்க முயன்ற சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் காட்சியாக பதிவாகியுள்ளது.

சிறுமி குசும்குமாரி கூறிய கருத்து

இந்த நிகழ்வு குறித்து கூறிய 15 வயது சிறுமி குசும்குமாரி., வீட்டிற்கு செல்லும் போது பைக்கில் வந்த இருவர் செல்போனை பறிக்க முயன்றனர். அவர் செல்போனை பறித்தவுடன் கொள்ளையனின் டீஷர்ட்டை பிடித்து இழுத்து விடாப்பிடாயாக சண்டையிட்டேன் அந்த சமயத்தில் அப்பகுதியில் இருந்த நபர்கள் வந்து உதவி செய்தனர் என கூறினார்.

சமூகவலைதளங்களில் வைரல்

சமூகவலைதளங்களில் வைரல்

கொள்ளையனின் தாக்குதலில் காயமடைந்த அந்த 15 வயது சிறுமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 15 வயது சிறுமியின் செயலுக்கு பாராட்டுக்கள் குவந்து வருகிறது. அதோடு இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Best Mobiles in India

English summary
15 Age Girl Fight Against smartphone Snatchers- Video Viral in Social Media
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X