அப்போ புரியல இப்போ புரியுது.. 14 வயசுல Software Engineer ஆக வேலை கொடுத்த Elon Musk.. புலம்பி தள்ளும் சிறுவன்!
வெறும் 14 வயதில், எலான் மஸ்க்கிற்கு (Elon Musk) சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தில் சாஃப்ட்வேர் என்ஜினீயராக (Software Engineer) பணியாற்றும் வாய்ப்பை பெற்ற கைரான் குவாஸி (Kairan Quazi) என்கிற சிறுவன், தற்போது தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் வழியாக புலம்பித்தள்ளி கொண்டிருக்கிறான்!
யார் இந்த கைரான் குவாஸி? வெறும் 14 வயதில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் வாய்ப்பை பெற்றது எப்படி? எல்லாம் நன்றாகத்தானே போய்க்கொண்டு இருக்கிறது.. தற்போது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் வழியாக கைரான் குவாஸி புலம்பித்தள்ள என்ன காரணம்? அப்படி என்ன நடந்தது?

9 வயதிலேயே முழுநேர கணிதம் ஏ.எஸ் பட்டப்படிப்பில் (Fulltime Mathematics A.S. Degree Program) சேர்ந்த கைரான் குவாஸி, தனது 14 ஆம் வயதில் சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தில் (Santa Clara University) பட்டமும் பெற்றுள்ளார். பட்டம் பெற்ற கையோடு கைரான் குவாஸிக்கு எலான் மஸ்க் தலைமையிலான தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (Private Space Research Company) ஸ்பேஸ்எக்ஸ்-ல் வேலையும் கிடைத்தது.
அதனை தொடர்ந்து கைரான் குவாஸி, தனது லிங்க்டுஇன் (LinkedIn) அக்கவுண்ட் வழியாக, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரியும் வாய்ப்பு தனக்கு கிடைத்துள்ளதாக பதிவிட்டுள்ளார். கைரான் குவாஸியின் இந்த பதிவானது லிங்க்டுஇன் வலைத்தளத்தில் வைரலாகி, பெரும் கவனத்தை ஈர்த்தது.
அந்த லிங்க்டுஇன் போஸ்ட்டில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் இன்ஜினியரிங் குழுவில் (Starlink engineering team) மென்பொருள் பொறியாளராக பணியாற்ற உள்ளேன். என் வயதை தன்னிச்சையாக பொருட்படுத்தாத மிகவும் அரிய நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும்" என்றல்லம் கூறி எலான் மஸ்க்கையும், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தையும் புகழ்ந்து தள்ளி இருந்தான்.
எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது, திடீரென கைரான் குவாஸியின் லிங்க்டுஇன் அக்கவுண்ட் பிளாக் (Block) செய்யப்பட்டது. ஆரம்பத்தில், என்ன நடந்தது என்று கைரான் குவாஸிக்கு ஒன்றுமே புரியவில்லை, பிறகு லிங்க்டுஇன் வழியாக கிடைத்த தகவலின் மூலம் என்ன சமாச்சாரம் என்பதை புரிந்து கொண்டான்.
எலான் மஸ்க் வேண்டுமானால் குவாஸியின் வயதை பற்றி அதிகம் கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால் லிங்க்டுஇன் நிறுவனத்தின் கூற்றுப்படி, தனது பிளாட்ஃபார்ம் வழியாக வேலை தேடுவதற்கான வயது கைரான் குவாஸிக்கு இல்லை; அவர் வயதில் மிகச்சிறியவர். எனவே அவர் லின்க்டுஇன் அக்கவுண்ட் ஆனது பிளாக் செய்யப்பட்டுள்ளது.
லின்க்டுஇன் பிளாட்ஃபார்மில் வேலை தேடுவதற்கு 16 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் என்கிற "திடீர் தகவலை" அறிந்த கைரான் குவாஸி, தனது இன்ஸ்டாகிராம் (Instagram) அக்கவுண்ட் வழியாக, இந்த நடவடிக்கை "நியாயமற்ற, பழமையான முட்டாள்தனம்" என்றெல்லாம் கூறி லின்க்டுஇன் நிறுவனத்தை கடுமையாக சாடியுள்ளான்.
மேலும் "நான் மிகவும் விரும்பப்படும் பொறியியல் வேலைகளில் ஒன்றை பெறுவதற்கு போதுமான தகுதி எனக்கு உள்ளது. ஆனால் லின்க்டுன் தளத்தை அணுகுவதற்கு போதுமான தகுதி இல்லையா? இது லின்க்டுஇன் நிறுவனத்தின் கொள்கைகள் எவ்வளவு பின்னடைவாக உள்ளது என்பதை அனைவருக்கும் காட்டுகிறது" என்றும் கூறியுள்ளான்.
கடைசியாக, "லிங்க்டுஇன் பயனர்கள், எனக்காக இந்த ஸ்கிரீன்ஷாட்டை தங்களுடைய லிங்க்டுஇன் அக்கவுண்ட்டில் பகிர முடியுமா? இன்ஸ்டாகிராமில் என்னுடன் இணையுமாறு மக்களை கேட்க முடியுமா?" என்றும் கேட்டுக்கொண்டுள்ளான். அதாவது லிங்க்டுஇன்-ல் தன்னை பின்தொடர்ந்தவர்களை, தன்னை இன்ஸ்டாகிராம் வழியாக பின்தொடருமாறு கைரான் குவாஸி கேட்டு கொண்டுள்ளான்.
Photo Courtesy: Kairan Quazi Instagram Account


Click it and Unblock the Notifications








