Home
News

உலகமே வியக்கும் 14 வயது சிறுவன்! ஸ்பேஸ்எக்ஸில் கோடிகளில் சம்பளம்! யார் இந்த கைரான் குவாஸி?

உலகின் மிகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் (Elon Musk) ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தில் பணிபுரிய ஒரு 14 வயது சிறுவன் தேர்வாகி இருப்பது, அந்த சிறுவனின் அபார திறமைக்கு சான்றாக அமைந்துள்ளது. இந்த சிறுவன் யார்? இவ்வளவு பெரிய சாதனைக்கான காரணமென்ன?

இதுகுறித்த முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். நம்மில் பலருக்கு சாப்ட்வேர் இன்ஜினியர் (Software Engineer) ஆக வேண்டும் என்ற கனவு சிறுவயதில் தோன்றிருக்க அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால், பல லட்சங்களில் சம்பளம் கிடைக்கும், வெளிநாடுகளுக்கு சென்று வரலாம், இப்படி பல காரணங்கள் இருந்திருக்கும்.

உலகமே வியக்கும் 14 வயது சிறுவன்! ஸ்பேஸ்எக்ஸில் கோடிகளில் சம்பளம்!

ஆனால், இந்த கனவு வேலை அவ்வளவு எளிதாக அனைவருக்கும் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும், புகழின் உச்சியை சிலர் மட்டுமே அடைக்கின்றனர். இதற்கும் பல ஆண்டுகள் பிடிக்கும் என்பதே உண்மை. ஆனால், ஒரு 14 வயது சிறுவன், அந்த கனவு வேலையையும் பெற்று, மிக குறைந்த வயதில் உலகின் மிகப்பெரும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த புகழையும் அடைந்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?.

ஆம், கைரான் குவாஸி என்ற சிறுவன் அந்த சாதனையை செய்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த முஸ்தாஹித் குவாஸி - ஜூலியா குவாஸி என்ற தம்பதியின் 14 வயது மகன் கைரான் குவாஸி (Kairan Quazi). இவர் சிறுவயது முதலே கம்ப்யூட்டர் மீது கொண்ட அதீத ஆர்வத்தால், பைத்தான் புரோகிராமிங் லாங்குவேஜ் (Python Programming Language) கற்றலில் சிறந்து விளங்கினார்.

இவரது திறமையானது, அவருக்கு 11 வயதிலேயே சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தில் (Santa Clara University) கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் (Computer Engineering) படிக்கும் வாய்ப்பை பெற்று தந்தது. இந்த படிப்பை வெற்றிகரமாக படித்து முடித்தார். இதனிடையே 4 மாதங்கள் பிளாக்ப்ர்ட் ஏஐ (Blackbird.AI) என்னும் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தில் மெஷின் லேர்னிங் இன்டர்னாக (Machine Learning Intern) பணியாற்றினார்.

இப்படிப்பட்ட சூழலில், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கான ஆஃபர் வந்துள்ளது. இதற்கு அப்ளை செய்த கைரான் குவாஸி, பல்வேறு கட்ட நேர்காணலுக்கு பிறகு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஸ்பேஸ்எக்ஸின் கீழ் இயங்கும் ஸ்டார்லிங்க் (Starlink ) நிறுவனத்தில் இருந்து சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கான ஆஃபர் லெட்டர் வந்துள்ளது.

இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த கைரான் குவாஸி அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், "அடுத்த ஸ்டாப்.. ஸ்பேஸ்எக்ஸ்! உலகின் சிறந்த நிறுவனங்களில் ஒன்றில் சாப்ட்வேர் இன்ஜினியர் பதவியை ஏற்றுக்கொண்டேன். சமூக வலைதளங்களில் என்னை தொடரும் அனைவருக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

இவருக்கு மாத சம்பளமே பல லட்சம் இருக்குமென்றும், ஆண்டு சம்பளம் கோடியை எட்டும் என்றும் கூறப்படுகிறது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
14-Year-Old Kairan Quazi Graduates As Engineer To Join Elon Musk Own SpaceX
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X