Home
News

14-வயது சிறுவன் உருவாக்கிய அதிநவீன ரோபோ.! குவியும் பாராட்டுக்கள்.!

தற்போது உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது என்றே கூறலாம். குறிப்பாக பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபடும் வகையிலான ரோபோக்கள் கூட உள்ளன.

சில இடங்களில் இயந்திரங்கள் மற்றும்

மேலும் சில இடங்களில் இயந்திரங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த தேவைகளை பூர்த்தி செய்ய ரோபோக்களும் புதிதாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு உருவாக்கப்படும் ரோபோக்கள் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் போன்ற தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக

இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த 14-வயது சிறுவன் ஜிடான் ஷனாஸ் ஒரு அசத்தலான ரோபோவை உருவாக்கியுள்ளான். குறிப்பாக 9-ம் வகுப்பு படிக்கும் ஜிடான் ஷனாஸ்,ரோபோவை உருவாக்கி அதற்கு ராஸ்பி என்று பெயரிட்டுள்ளார், குறிப்பாக எந்த ஒரு கேள்விக்கும் பதிலளிக்க கூடிய வகையில்இந்த ரோபோஉருவாக்கப்பட்டுள்ளது.

மோட்டார், பேட்டரிகள் மற்றும்

குறிப்பாக மோட்டார், பேட்டரிகள் மற்றும் தானியங்கி இயந்திரங்கள் எப்போதும் இளம் ஜிடான் ஷனாஸைக் கவர்ந்தன. குறிப்பாக இந்த சிறுவன் தனது பொம்மைகளுடன் விளையாடி சலிப்படைந்த பிறகு, அவற்றை மாற்றத் தொடங்கினான். அதாவது காலப்போக்கில், அவரது ஆர்வம் புதிய தொழில்நுட்பங்கள் மீது திரும்பியது. குறிப்பாக ஜிடான் மென்பொருளில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார்.

 தற்போது 14 வயதான இவர் தற்போது

எனவே தற்போது 14 வயதான இவர் தற்போது ராஸ்பி என்ற ரோபோவை உருவாக்கியுள்ளார். சுமார் ஒரு வருடமாக விரிவான ஆராய்ச்சி செய்து ஜிடான் தன்னைப் போன்ற உயரமான ரோபோவை உருவாக்கினார். எனக்கு ஒன்பது வயதாக இருந்தபோது என் அம்மா எனக்கு ஒரு சோலார் பொம்மையைக் கொடுத்தார். ஒரு கட்டத்தில் நான் அதை உடைத்தேன். அதன் பேட்டரிகள் மற்றும் மோட்டார்களைப் பயன்படுத்தி, சொந்தமாக ஒரு காரைத் தயாரித்தேன், என்று ஜிடான் கூறியுள்ளார்.

 இந்த சிறுவன் உருவாக்கியுள்ள

அதேபோல் இந்த சிறுவன் உருவாக்கியுள்ள ரோபோ குறித்து பார்க்கையில், Arduino Bluetooth எனப்படும் செயலி மூலம் இந்த ரோபோ கட்டுப்படுத்தப்படுகிறது. குறிப்பாக F-ஐ அழுத்துவதன் மூலம் முன்னோக்கி நகரத் தொடங்குகிறது மற்றும் B-அழுத்துவதன் மூலம் பின்னோக்கி நகர்கிறது.குறிப்பாக ரோபோவின் கால்களில் நான்கு 12W Dcமோட்டார்கள் உள்ளன. மேலும் இதை உருவாக்க C programming மற்றும் பைத்தானின் மேம்பட்ட வடிவத்தையும் பயன்படுத்தினேன் என்று கூறியுள்ளார் ஜிடான் ஷனாஸ்.

 இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது

குறிப்பாக குரல் கட்டளையின்படி இந்த அசத்தலான ராஸ்பி ரோபோ நகர்கிறது. மேலும் ஜிடானின் கூற்றுப்படி, ராஸ்பி ரோபோ உடன் சாதாரண உரையாடல்களை நடத்த முடியும், பின்பு பொது அறிவு கேள்விகளுக்கு பதிலளிக்கக்கூடிய வகையிலும் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ரோபோ இசையை இயக்குகிறது மற்றும் நடப்பு நிகழ்வுகள் அல்லது ஜிடானின் டெஸ்க்டாப்பில் இருந்து ஏதேனும் புதுப்பிப்புகளை ஒரு கட்டளையுடன் காட்டுகிறது.

ஜிடான் ஷனாஸ் உருவாக்கியுள்ள

9-ம் வகுப்பு படிக்கும் ஜிடான் ஷனாஸ் உருவாக்கியுள்ள இந்த ராஸ்பி ரோபோ இரண்டு முதல் மூன்று கிமீ வேகத்தில் நகரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் எதிர்காலத்தில் நமக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் ரோபோக்கள் பயன்படுத்தப்படலாம் என்று கூறியுள்ளார் ஜிடான். மேலும் இந்த அருமையானரோபோவை உருவாக்கிய ஜிடான் ஷனாஸ்-க்கு பல்வேறு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Best Mobiles in India

English summary
14-year-old boy from Kerala has created his own robot and named it Raspy: Here is the list!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X